மருத்துவ விடுப்பு எடுப்பதற்கான புதிய விதிமுறைகள்
Ø அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய்ரகள் மருத்துவச் சான்று இனி
ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும்.
Ø ஐந்து நாட்களுக்கு மேலும் விடுப்பு பெற வேண்டுமெனில் பிளட்
டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்கு மேல் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது
மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
Ø மேலும்.. விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின்
விவரங்களை ஒரு தனிப்பட்ட பதிவேட்டில் பதிந்து வைப்பதோடு, அந்த பதிவேட்டு எண்ணின் வரிசை
எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும்.
Ø மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் தன்
மருத்துமனையில் பராமரிக்க வேண்டும்.
Ø அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும்
வகையில் மருத்துவ சான்றினை (ஐந்து ஆண்டுகள்) பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில்
எந்த நேரத்திலும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரது மருத்துவப் பயிற்சி சான்றிதழை
கேள்வி கேட்கும் நிலை வரும். தேவைப்பட்டால் அவரது மருத்துவப் பயிற்சியை தடை செய்யலாம்.
மேலும் மருத்து விடுப்பு தொடர்பான இதர விவரங்களைப் பெறவும்
மருத்துவச் சான்று மற்றும் உடல் தகுதிக்கான சான்றுக்கான படிவத்தைப் பெறவும் கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
******
No comments:
Post a Comment