Thursday 12 September 2019

உன்னைப் பார்! / இன்று ஒரு கதை


உன்னைப் பார்! / இன்று ஒரு கதை
            ஓர் ஊரில் வானத்தைப் பார்த்து நடப்பவன் ஒருவன் இருந்தான்.
            அவன் எந்நேரமும் வானத்தில் தென்படும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகங்கள், வால் நட்சத்திரங்கள் என்று எதையாவது பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான்.
            ஒரு நாள் வானத்தைப் பார்த்து நடந்தவன் பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான்.
            நண்பர்கள் ஓடி வந்துக் காப்பாற்றினர்.
            வானத்தைப் பார்த்து நடப்பது போல பூமியையும் பார்த்து நடக்குமாறு கூறினார்.
            வானத்தைப் பார்த்து நடப்பவன் புரிந்து கொண்டான்.
            வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பூமியைப் பார்ப்பதில்லை.
            மற்றவர்களின் குறைகளையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தம்முடைய குறைகளைப் பார்ப்பதேயில்லை.
            உலகத்தைப் பார்ப்பதற்கு முன் உங்களைப் பாருங்கள்!
*****

கதையின் காணொலி வடிவம் :



No comments:

Post a Comment