Saturday, 28 September 2019

October 1st Week - VII Tamil - Lesson Plan

பாடத்திட்டம்

வகுப்பு & பாடம்
VII - தமிழ்
பாடத்தலைப்பு
இயல் 1 - கலங்கரை விளக்கம்

கற்றல் விளைவுகள்
அ) செய்யுளின் நயம் உணர்ந்து போற்றும் திறன் பெறுதல்.
ஆ) புதிய சொற்களின் பொருள் காண அகராதியைப் பயன்படுத்துதல்.
இ) பாடலைப் பாடி மகிழ்வுறுதல்.

1.      அறிமுகம்
பக்கம் 2 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

2.      புரிதல்
அ) படித்தல்
ஆசிரியர் திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத் தொடர்ந்து மாணவர்கள் படித்து புதிய சொற்களை அடிக்கோடிடுதல்.
ஆ) மனவரைபடம்



மனவரைபடத்தின் காணொலி வடிவம்



3.      ஒருங்கமைத்தல்
பாடலின் திரண்ட கருத்து
கலங்கரை விளக்கம்
அமைப்பு
வானின் தூண்

உயரம்
ஏணிக்கு எட்டா உயரம்
மாடம்
விண்ணை முட்டும் மாடம்
துறை
மரக்கலங்களின் துறை
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
காலம்
சங்க காலம்
இயற்றிய நூல்கள்
1.      பட்டினப் பாலை
2.      பெரும்பாணாற்றுப்படை

4.      வலுவூட்டுதல்
அ) கலந்துரையாடுதல்
ஆ) வழங்குதல்
பாடலின் திரண்ட கருத்தைக் கலந்துரையாடல் செய்தல்.
தொகுத்தலைத் தனியாகவோ, குழுவாகவோ வழங்குதல்.

5.      மதிப்பீடு
அ) வகுப்பறை மதிப்பீடு
ஆ) வளரறி மதிப்பீடு
1.      மதலை என்பதன் பொருள் யாது?
கலங்கரை விளக்கத்தின் படம் வரைந்து வருக.
2.      சென்னி என்பதன் பொருள் யாது?
3.      வேயா மாடம் என்றால் என்ன?
4.      மரக்கலங்களை அழைப்பது எது?
5.      கலங்கரை விளக்கம் குறித்து உருத்திரங்கண்ணனார் கூறும் கருத்துகளைக் கூறுக.

6.      எழுதுதல்
பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்குப் பாடக் குறிப்பேட்டில் விடை எழுத செய்தல்.

7.      குறைதீர்க் கற்றல்
மனவரைபடம் மற்றும் தொகுத்தல் செயல்பாட்டை மீளக் கற்று மீள் பார்வை செய்தல்.



இதைப் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் :

Click Here to Download



No comments:

Post a Comment