Sunday 15 November 2020

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1.

விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாலிதீன் பைகளில் அடைத்துப் பத்திரமாக வைத்திருக்கவும்.

2.

வெள்ள அபாய எச்சரிக்கை கிடைக்கப்பெற்றால் பதற்றமடையாமல் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை அல்லது பேரிடர் மீட்பு மையங்களை அடையவும்.

3.

கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அப்புறப்படுத்துவதற்கான தயார் நிலையோடு இருப்பதோடு, அவற்றிற்கான தீவனம் மற்றும் குடிநீரையும் சேமித்து வைக்கவும்.

4.

வெள்ள அபாய அறிவிப்பு கிடைத்து வெளியேற நேர்ந்தால் மின் சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு வெளியேறவும்.

5.

மழைக்காலங்களில் பாம்புகளால் வரும் அபாயத்தைத் தவிர்க்கவும்.

6.

மழைக்காலங்களில் குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாக்கவும்.

7.

மழைக்காலங்களில் எப்போதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களோடு தயார் நிலையில் இருக்கவும்.

8.

பயிர்க் காப்பீடு மற்றும் வீட்டுப் பொருள்களுக்கான காப்பீடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

9.

பேரிடர் கால திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்காக உள்ளூர் மற்றும் வசிப்பிட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும்.

10.

அவ்வபோது நம்பகமான செய்திகளை வானொலி / தொலைக்காட்சி / அரசின் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

 

மழைக்கால மின் அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1.

மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள்  ஆகியவற்றின் அருகே செல்வதைத் தவிர்க்கவும். குழந்தைகளிடம் அவ்வபோது இதுபோன்ற மின்பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து உரையாடவும்.

2.

அறுந்து விழுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்வதைத் தவிர்க்கவும். உடன் அது குறித்த தகவலை மின் வாரிய அலுவலகத்துக்குத் தெரிவிக்கவும்.

3.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளின் அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.

4.

மின் கம்பங்களிலோ அதைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டுவதையோ அல்லது அவற்றை பந்தல் கால்களாகவோ, பதாகைத் தாங்கிகளாகவோ பயன்படுத்துவதையோ அல்லது அவற்றின் மீது துணிகள் உலத்துவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.

5.

தங்களது வீட்டில் மின்னிறக்கக் குழாய்ப் (எர்த் பைப்) பதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அதனருகில் குழந்தைகளோ, விலங்குகளோ செல்லாத வகையில் பராமரிக்கவும்.

6.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருப்பதைத் தவிர்க்கவும்.

7.

இடி, மின்னலின் போது மின்சாதனப் பொருட்கள், கணினி, அலைபேசி போன்றவற்றை இயக்குவதைத் தவிர்க்கவும்.

8.

வீட்டு மின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை மின் கம்பத்தில் மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் போது வீட்டில் மின்சேமிப்பான் (இன்வெர்ட்டர்) இருப்பின் அது குறித்த தகவலை முன் கூட்டியே அவர்களிடம் தெரிவிக்கவும்.

9.

மழைக்காலங்களில் பழுதடைந்த மின் சாதனங்களைச் சுயமாகப் பழுது பார்த்தலைத் தவிர்த்து அதற்கென உள்ள உரிய ஊழியர்களின் உதவியை நாடவும்.

10.

சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தாங்கள் உணர்ந்தால் எக்காரணம் கொண்டும் மின்சார பொத்தான்களை (ஸ்விட்சுகளை) இயக்குவதைத் தவிர்க்கவும்.

இதன் PDF வடிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment