நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்
தவளை கத்தினால் மழை. |
அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். |
தும்பி பறந்தால் தூரத்தில் மழை. |
எறும்பு ஏறில் பெரும் புயல். |
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. |
தை மழை நெய் மழை. |
மாசிப் பனி மச்சையும் துளைக்கும். |
தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. |
புற்று கண்டு கிணறு வெட்டு. |
வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். |
காணி தேடினும் கரிசல் மண் தேடு. |
களர் கெட பிரண்டையைப் புதை. |
கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. |
நன்னிலம் கொழுஞ்சி. நடுநிலம் கரந்தை. கடை நிலம் எருக்கு. |
நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். |
ஆடிப்பட்டம் பயிர் செய். |
விண் பொய்த்தால் மண் பொய்க்கும். |
மழையடி புஞ்சை. மதகடி நஞ்சை. |
களரை நம்பி கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. |
உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. |
அகல உழவதை விட ஆழ உழுவது மேல். |
புஞ்சைக்கு நாலு உழவு. நஞ்சைக்கு ஏழு உழவு. |
குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. |
ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் கட்டும். |
கூளம் பரப்பி கோமியம் சேர். |
ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. |
நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். |
காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். |
தேங்கி கெட்டது நிலம். தேங்காமல் கெட்டது குளம். |
கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை. |
சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். |
விதை பாதி வேலை பாதி. |
காய்த்த வித்திற்கு பழுது இல்லை. |
பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. |
கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது. |
ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள்
வைத்த தனம். |
கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். |
இதை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment