புயல் எச்சரிக்கை கூண்டுகளும் விளக்கமும்
புயல் எச்சரிக்கை கூண்டு எண் |
விளக்கம் |
1 |
புயல் உருவாகக்
கூடிய வானிலை சூழல் நிலவுகிறது. பலத்த காற்று
வீசுகிறது. துறைமுகத்திற்கு
எந்தப் பாதிப்பும் இல்லை. |
2 |
புயல் உருவாகி
உள்ளது. இந்த எச்சரிக்கை
கண்ட உடன் கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற வேண்டும். |
3 |
திடீர் காற்றோடு
மழை பெய்யும் அச்சுறுத்தும் வானிலை சூழலில் துறைமுகம் உள்ளது. |
4 |
துறைமுகத்தில்
புயல் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. துறைமுகத்தில்
உள்ள கப்பல்களுக்கு ஆபத்து நிலவுகிறது. |
5 |
துறைமுகத்தின்
இடது புறமாகப் புயல் கரையைக் கடக்கும். |
6 |
துறைமுகத்தின்
வலது புறமாகப் புயல் கரையைக் கடக்கும். |
7 |
துறைமுகம் வழியாகவோ
அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும். |
8 |
தீவிர அல்லது
அதி தீவிர புயல் துறைமுகத்தின் இடது புறமாகக் கரையை கடக்கும். |
9 |
அதி தீவிர புயல்
துறைமுகத்தின் வலது புறமாகக் கரையை கடக்கும். |
10 |
அதி தீவிர புயல்
துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ கரையைக் கடக்கும். |
11 |
வானிலை மையத்துடனான
துறைமுகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதி உச்சமான புயல் சூழல் நிலவுகிறது. |
பொதுவாக
1 மற்றும் 2 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டுகள் புயல்
தொலைதூரத்தில் இருப்பதையும், 3 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு மழையுடன் கூடிய
பலத்த காற்று வீசுவதையும், 4 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு கடலில் புயல் உருவாகி
உள்ளதையும், 5, 6 மற்றும் 7 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டுகள்
புயல் தீவிரமடைவதையும் அதன் காரணமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்
என்பதையும், 8, 9 மற்றும் 10 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டுகள்
புயலின் பெருத்த அபாயத்தையும் அதன் காரணமாக மணிக்கு 120 கி.மீ.க்கு மேல் காற்று வீசக்
கூடும் என்பதையும், 11 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு மிக மோசமான வானிலையால்
துறைமுகத்துக்கும் வானிலை மையத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள அதி உச்சமான
புயல் நிலையையும் குறிக்கும்.
No comments:
Post a Comment