வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க & திருத்தம் செய்ய…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்
மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான பணிகள் நவம்பர் 16, 2020 லிருந்து தொடங்குகிறது.
இதற்கான முகாம்கள் பெரும்பாலும் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யவும் சிறப்பு
முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் தங்களுக்கு அருகாமையில்
உள்ள பள்ளிகளில் நடைபெறும் நாட்களின் விவரம் வருமாறு :
மாதம் |
நாட்கள் |
நவம்பர்
– 2020 |
21.11.2020 – சனி |
22.11.2020 – ஞாயிறு |
|
டிசம்பர்
– 2020 |
12.12.2020 – சனி |
13.12.2020 – ஞாயிறு |
பெயர் மாற்ற, நீக்க, திருத்தம் செய்ய உதவும் விண்ணப்ப படிவங்கள் :
புதிதாகப் பெயர் சேர்க்க |
படிவம் – 6 |
பெயர் நீக்கம் செய்ய |
படிவம் – 7 |
திருத்தம் செய்ய |
படிவம் – 8 |
ஒரு தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய |
படிவம் – 8A |
இப்படிவங்களில் தங்களுக்குத் தேவையானதை தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள
பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் பெற்று,
நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயரைச் சேர்க்க தேவையான ஆவணங்கள்
:
வயது சான்றுக்கான ஆவணம் (எதிரே
உள்ள கலத்தில் உள்ள சான்றுகளில் ஏதேனும் ஒரு நகல் மட்டும்) |
பிறப்புச் சான்று |
பள்ளி மாற்றுச் சான்று |
|
மதிப்பெண் சான்று |
|
முகவரிச் சான்றுக்கான ஆவணம் (எதிரே
உள்ள கலத்தில் உள்ள சான்றுகளில் ஏதேனும் ஒரு நகல் மட்டும்) |
குடும்ப அட்டை |
ஆதார் அட்டை |
|
ஓட்டுநர் உரிமம் |
|
கடவுச் சீட்டு |
முகக்கவசம் அணிந்து,
சமூக இடைவெளியைப் பின்பற்றி மேற்காணும் ஆவணங்களோடு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களை
வாக்காளர்களாக முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது 31.12.2002 க்கு முன் பிறந்தவர்கள் இதுவரை தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளவில்லை
எனில் அவர்கள் அனைவரும் இம்முகாம்களில் கலந்து கொண்டுத் தங்களை வாக்காளர்களாகப் பதிவு
செய்து கொள்ளலாம்..
மேலும் தங்களை வாக்காளர்களாகப்
பெயர் பதிவு செய்து கொள்வதற்கான பிற வழிமுறைகள் :
இணையம் மூலம் விண்ணப்பிக்க… |
www.nvsp.in
என்ற இணையதள இணைப்பைப் பார்வையிடுங்கள். |
செயலி (App) மூலம் விண்ணப்பிக்க… |
Voter Helpline செயலியைப் பதிவிறக்கம்
செய்யுங்கள். |
அலைபேசி அழைப்பு மூலம் உதவி பெற… |
1950 என்ற எண்ணை அழைத்திடுங்கள். |
இணையம் மூலம் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
இப்பயனுள்ள
தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்!
No comments:
Post a Comment