Thursday, 12 November 2020

இன்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்ய…

இன்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்ய…

            தற்போது இன்டேன் எரிவாயு உருளையைப் பதிவு செய்வதற்கான புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய எண்ணில் பதிவு செய்வதற்கு தங்களது அலைபேசியிலிருந்து 77189 55555 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கிடைத்தவுடன் தமிழ் மொழி இணைப்பிற்காக 3 மற்றும் 9 ஆகிய இலக்கங்களை அடுத்தடுத்து அழுத்தி அதைத் தொடர்ந்து 16 இலக்க வாடிக்கையாளர் எண்ணை (LPG Customer ID) பதியவும். 16 இலக்க வாடிக்கையாளர் எண் தங்களது பழைய எரிவாயு ரசீதில் 17 இலக்க எண்ணாக இருக்கும். அப்பதினேழு இலக்கத்தில் முதல் இலக்கமான 3 ஐ விட்டு விட்டு தொடர்ந்து வரும் 16 இலக்கத்தையும் வாடிக்கையாளர் எண்ணாகப் பதியவும். அதைத் தொடர்ந்து தங்களது எண் சரிபார்ப்பதற்காக உச்சரிக்கப்படும். அதைத் தொடர்ந்து எண் 1 ஐ அழுத்தினால் எரிவாயு உருளை பதிவு செய்யப்பட்டு, கூடிய விரைவில் தங்களது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக Delivery Authentification Code எனும் DAC (இதை OTP என்று சொல்வதும் வழக்கில் உள்ளது) நான்கு இலக்கத்தில் வரும். இவ்வெண்ணை எரிவாயு உருளை விநியோகிக்கும் போது கூறி பணத்தைச் செலுத்தி எரிவாயு உருளையைப் பெற்றுக் கொள்ளவும்.

            மேலும் எரிவாயு உருளைப் பதிவிற்கான பயனுள்ள தொலைபேசி எண்களும் இணைய இணைப்புகளும் :

அழைப்பின் மூலம் பதிவு செய்ய…

77189 55555

3 & 9 ஐ அழுத்தி 16 இலக்க LPG Customer ID ஐப் பதிந்து 1 ஐ அழுத்தவும்.

வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்ய…

75888 88824

REFILL என செய்தி அனுப்பவும்.

Missed Call மூலம் பதிவு செய்ய…

84549 55555

தவறிய அழைப்புக் கொடுத்துப் பதியவும்.

இணையதளம் மூலம் பதிவு செய்ய…

cx.indianoil.in

இணையதளத்தில் அலைபேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ பயனீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தி அதன் மூலம் கடவுசொல்லை உருவாக்கிக் கொண்டு பதியவும்.

இணையதளம் மூலம் பதிவு செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://cx.indianoil.in/webcenter/portal/LPG/pages_bookrefillpol

No comments:

Post a Comment