குழந்தையும் தெய்வமும்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது கிராமத்துச் சொலவம். அந்தச்
சொலவத்தைப் பல்லவியாகக் கொண்டு தொடங்கும் பாடல்தான் “குழந்தையும் தெய்வமும் குணத்தால்
ஒன்று” என்ற பாடல். ஆசிரியர்களுக்குக் குழந்தைகளைக் கொண்டாட வேண்டிய அவசியத்தோடு குழந்தைகளைத்
தெய்வங்களாய்க் காண வேண்டிய கூர் நோக்கும் வேண்டியிருக்கிறது. அதற்கு இந்தப் பாடல்
ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயன்படும். இப்பாடலைப் பாடி மகிழ விரும்புபவர்கள்
பாடி மகிழுங்கள். பாடி முடித்த பின் பாடலின் உட்கருத்தை உணர்ந்து எந்நிலையிலும் எவ்விடத்திலும்
குழந்தைகளை மகிழ்வியுங்கள்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று (2)
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
ஞானிகளும்
மேதைகளும் சொன்னார் அன்று (2)
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து
வந்த போது நெஞ்சம்
திறந்திருந்தது (2)
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடி இருந்தது (2)
வயது வந்த பிறகு
நெஞ்சில் மயக்கம் வந்தது (2)
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச்
சென்றது (2)
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி
வெயில் சூரியனை மேகம்
மூடுது (2)
நம் உள்ளம் என்னும்
சூரியனை கோபம் மூடுது (2)
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது (2)
பேசி கலந்து விட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது (2)
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர்
தான் பெரியவர் ஆனார் (2)
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவர் ஆனார் (2)
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம் (2)
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்கள் ஆனார் (2)
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான்
துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார்
அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
இப்பாடலைக் கேட்டு மகிழ கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
No comments:
Post a Comment