Saturday 30 October 2021

அணில் கடிக்காத பழங்களைத் தோட்டத்தில் பார்க்க…

அணில் கடிக்காத பழங்களைத் தோட்டத்தில் பார்க்க…

            பழ மரங்கள் இருக்குமிடத்தில் அணில் கடிக்காத பழங்களைப் பார்க்க முடியாது. அணில்கள் தங்கள் பசி போக்கவே பழங்களைக் கடிக்கின்றன என்பதால் அணில்கள் அதிகமுள்ள மரப்பகுதிகளுக்கு அருகில் உங்கள் வீட்டில் மீதமாகும் சோறு, பருப்பு, கடலை வகைகளை வைக்கலாம். இவற்றை உண்டு பசியாறும் அணில்களால் பழங்கள் கடிபடுவது குறைந்து விடும்.

            இன்னொரு வழியும் இருக்கிறது. பூண்டை மசிய அரைத்து அதை தண்ணீரில் கலந்து கரைசலாக்கிப் பழங்களின் மீது தெளித்தால் அந்தப் பழங்களை அணில்கள் தின்ன விரும்பாது. ஒரு செம்பு நிறைய தண்ணீருக்கு எலுமிச்சை அளவுள்ள கொத்தாக உள்ள பூண்டு முழுவதையும் அரைத்துக் கரைத்துக் கொள்ளலாம்.

            என்னதான இருந்தாலும் ஓரிரு பழங்களையாவது அணில்கள் கடித்தால்தான் நாம் வளர்க்கும் மரங்களுக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும். பழங்களைத் தரும் மரம் அதைத் தனக்காகவா எடுத்துக் கொள்கிறது? எல்லாவற்றையும் நமக்கென தரும் போது அதிலிருந்து ஒரு சில பழங்களை அணில்கள் கடிக்கும் போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறம் நிலைக்கும்.

No comments:

Post a Comment