Tuesday 12 October 2021

பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?

பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?

            அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு நடைபெறும் கலந்தாய்வே பூஜ்ஜியக் கலந்தாய்வு ஆகும். இக்கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் / அலுவலர் பணி மூப்பின் அடிப்படையில் தாம் பணியாற்றும் இடம் தவிர்த்துக் காலியாக உள்ள இடங்களில் ஒன்றைத் தமக்குரிய பணியிடமாகத் தேர்வு செய்து கொள்ள தகுதி உடையவர் ஆவார்.

            தற்போது நடைபெற இருப்பதாகப் பேசப்படும் இப்பூஜ்ஜியக் கலந்தாய்வு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நடைபெற்றால் அதற்குரிய பணி மூப்புப் பட்டியல் தயாரிப்பில் EMIS மூலமாகப் பெறப்படும் தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. அப்பணி மூப்புப் பட்டியலின் அடிப்படையில் ஆசிரியர்கள் / அலுவலர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

            பூஜ்ஜியக் கலந்தாய்வின் போது ஆசிரியர் / அலுவலர்களுக்கு தற்போது பணியாற்றும் இடம் மட்டும் தவிர்த்துக் காலியாக உள்ள அனைத்து இடங்களும் கலந்தாய்வில் காட்டப்படும். அவ்விடங்களில் தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கலந்தாய்வில் வழக்கமாகப் பின்பற்றப்படும் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தில் பணிபுரிபுவர்களின் மனைவி, புற்றுநோய்,இதயநோய் போன்ற மிகவும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முன்னுரிமை இக்கலந்தாய்விலும் வழங்கப்படும்.

            பணியிடங்கள் பூஜ்ஜியக் கலந்தாய்வின் அடிப்படையில் நிரவல் செய்யப்பட்ட பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதன்படி மாவட்டக் கல்வி அலுவலர் கலந்தாய்வு முடிந்தவுடன் அந்த பணியிடத்திற்கான பதவி உயர்வானது மேனிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அது முடிந்தவுடன் தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவ்விதம் அனைத்து பணியிடங்களுக்குமான கலந்தாய்வு மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை நடைபெறும்.

No comments:

Post a Comment