அகவிலைப்படியும் அண்ணாவும்
அகவிலைப்படியானது பஞ்சப்படி, கிராக்கிப்படி என்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அகவிலைப்படியை Dearness Allowance (D.A.) எனக் குறிப்பிடுகின்றனர்.
அகவிலைப்படியைப் பற்றி பேரறிஞர் அண்ணா தமிழக சட்டமன்றத்திலேயே பேசியுள்ளார். ஏழையின்
சிரிப்பில் இறைவனைக் காண விழைந்தவர் அல்லவா அவர். அந்த ஈர உள்ளத்தோடு அகவிலைப்படியை
‘கிராக்கிப்படி’ எனக் குறிப்பிட்டு அவர் பேசியுள்ள விவரம் வருமாறு,
“மத்திய
அரசு ஊழியர்கள் அடிக்கடி கிராக்கிப்படி பெறுவதைத் தமிழக அரசு எதிர்க்கின்றது என்று
எழுதித் தருமாறு மத்திய அமைச்சர் ஒருவர் என்னிடம் கேட்டார். அந்தப் பொறியில் நான் சிக்கத்
தயாரில்லை. அதற்குப் பதிலாக விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கும் வரை கிராக்கிப்படியை
உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பேன் என்று எழுதித் தருவதாகக் கூறினேன். எழுத்தில்
வேண்டுமென்ற கேட்ட மத்திய அமைச்சர் வாயடைத்துப் போனார்.”
– பேரறிஞர்
அண்ணா – 20.08.1968 – தமிழக சட்டமன்றம்
*****
No comments:
Post a Comment