Sunday 30 January 2022

உள்ளாட்சித் தேர்தல் – 2022 வரைபடம் Election Flow Chart

உள்ளாட்சித் தேர்தல் – 2022 வரைபடம்

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் செயல்முறைகள் குறித்த முழுமையான வரைபடத்தை அறிந்து கொள்வதற்கான Flow Chart ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

உள்ளாட்சித் தேர்தல் – 2022 தேர்தல் உறைகள்

உள்ளாட்சித் தேர்தல் – 2022 தேர்தல் உறைகள்

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் தேர்தல் உறைகளுக்கான பட்டியல் குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

EVM இல் Strip seal, Green paper seal பொருத்தும் முறை

EVM இல் Strip seal, Green paper seal பொருத்தும் முறை

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) Strip seal மற்றும் Greep paper seal பொருத்தும் முறையை அறிந்து கொள்வதற்குக் கீழே உள்ள காணொலியைக் காணவும்.


உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ள…

உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ள…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க செல்ல வேண்டிய வாக்குச்சாவடியை உங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவிட்டு அறிந்து கொள்ளலாம். நீங்கள் வாக்களிக்க செல்ல வேண்டிய உங்களுக்கான வாக்குச்சாவடியை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – அலுவலர்களின் பணிகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – அலுவலர்களின் பணிகள்

PROவின் பணிகள்

1.      Pro dairy

2.      Form17C.

3.      16 points observer report  sheet.

4.      Visiter sheet.

5.      Pledge commencement of poll and after close the poll.

6.      Mock poll certificate

மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாகப் பூர்த்தி செய்யவும்.  

PO 1 இன் பணிகள்

1.      வாக்காளர்களை அடையாளம் காணுதல்.

2.      Marked copy of elecoral roll ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்.

3.      பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்.             

PO 2 இன் பணிகள்

1.      17A register இல் வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து,

2.      அடுத்த கட்டத்தில் Epic என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்.

3.      வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.

4.      Voter slip இல் வரிசை எண்ணை குறித்து, வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip ஐ வாக்காளரிடம் கொடுக்க வேண்டும்.      

PO 3 இன் பணிகள்

வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit இல் உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.

பொதுக்குறிப்புகள்

            49-O என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49-O என்று குறிப்பிடவேண்டும். Refused the Vote என்று எழுத வேண்டும்.             

49-M என்றால் வாக்காளருக்கு மை வைத்தபிறகு வாக்களிப்பதற்கு முன்னால் வாக்காளர் வாக்களிக்கப் போகும் சின்னம் மற்றும் வேட்பாளரைச் சொல்லும் பட்சத்தில் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க PRO அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register இல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks கலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

49-MA என்றால் வாக்காளர் வாக்களித்தபின் தாம் வாக்களித்த சின்னத்திற்கு மாறாக விவிபெட்டில் வேறொரு சின்னம் பதிவாகிறது என்று  தெரிவிக்கும் பட்சத்தில் PRO அந்த வாக்காளரிடம் “இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை. நீங்கள் மட்டுமே இவ்வாறு தெரிவிக்கிறீர்கள். நான் உங்களுக்கு மறுபடியும் Testing vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.” என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling Agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தோரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும். இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டும். Remarks கலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும். இதற்கு முன்பாக 49-MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part No, serial No, serial No in 17-A (register of voters) குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும். மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்

1.      1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்

2.      2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்

3.      3.Test votes

4.      4.proxy votes

 நிகழ்வுகள் குறித்த தேர்தல் விதிகளை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகும்.

மிக அவசியமான குறிப்பு

தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT ஐ OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும்.

*****

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான படிவங்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான படிவங்கள்

            பிப்ரவரி 2022 இல் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான அனைத்து விதமான படிவங்களையும் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கையேடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கையேடு

            பிப்ரவரி 2022 இல் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

IT Form க்கான House Rent Receipt

IT Form க்கான House Rent Receipt

            வருமான வரிப் படிவத்தோடு இணைத்துக் கொடுக்க வேண்டிய House Rent Receipt ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Thursday 27 January 2022

Let’s develop the habit of saving

Let’s develop the habit of saving

Needless to say, those who help in a emergency are real relationships. Like that to say, those who help in danger are true friends.

Relationships and friendships may or mayn’t help in a emergency and in danger. Saving is not like that. Savings can be helpful at all times, be it emergency or danger. So much for saying saving is a real relationship and a true friend.

There are many ways to save. Its basis is the same. Its basic premise is to control costs and save. Savings will be generated automatically if there is no overspending.

Those who spend beyond their earnings can never save. It would be a good idea for such people to consider saving as an expense and set aside a sum for daily savings. Or it would be a good idea to take the money for savings first and spend it later.

The coin box is the basic form of savings, although it is given as a toy in childhood. We could have converted that coin box into a money purse or money bag later. It may have been converted into a post office or a bank account in further days. This is based on the fact that there must be an item or an account for savings.

It is important to make saving a habit. We can only reap the benefits of saving if we make saving a habit. Make it a habit to bathe everyday, brush your teeth eveyday, and wash your clothes everyday.

There is a simple way to do that. Thirty days a month can be saved in this way. It is best to buy a purse or a bag or a box for savings. If you save one rupee on the first day, it is a good idea to save two rupees on the second day, save three rupees on the third day and save thirty rupees on the thirtieth day. Do you know how much you will save at the end of the month if you save like this? You have saved 465 rupees. If you continue to do the same throughout the year you will have saved 5580 rupees. Otherwise you would have saved 66,795 at the end of the year if the first day continued for 365 days at one rupee and the second day at two rupees. You can save as much as you feel comfortable with.

You can save as much as ten rupees on the first day and even twenty rupees on the second day depending on your convenience. You can save a hundred rupees on the first day and two hundred rupees on the second day. You can save a thousand rupees on the first day and even on the second day. The savings that come from developing such a saving mechanism and developing the habit of saving accordingly are sure to help you as a friend-like relationship in times of emergency and danger.

All we have to do is develop the habit of saving in some form.

*****

சேமிப்புக்குக் கை கொடுப்போம்

சேமிப்புக்குக் கை கொடுப்போம்

            அவசரத்தில் கைகொடுப்போரே உண்மையான உறவுகள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது போல ஆபத்தில் உதவுவோரே உண்மையான நண்பர்கள் என்பதையும் கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லை.

அவசரத்திலும் ஆபத்திலும் உறவுகளும் நட்புகளும் கைகொடுத்து உதவலாம் அல்லது உதவாமலும் போகலாம். சேமிப்பு அப்படி இல்லை. அவசர காலம், ஆபத்துக் காலம் என்று எல்லா காலத்திலும் சேமிப்பு கைகொடுத்து உதவும். சேமிப்பை உண்மையான உறவாகவும் உண்மையான நண்பராகவும் சொல்வது அவ்வளவு பொருந்தும்.  

            சேமிப்பதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை என்பது ஒன்றுதான். செலவைக் கட்டுபடுத்தி மிச்சம் செய்வதுதான் அதன் அடிப்படை. வரவுக்கு மீறி செலவு செய்யாமல் இல்லாமல் இருந்தால் சேமிப்பு என்பது தானாக உருவாகி விடும்.

            வரவைத் தாண்டிச் செலவழிப்பவர்களால் ஒரு போதும் சேமிக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதி தினந்தோறும் சேமிப்புக்கென ஒரு தொகை ஒதுக்குவது நல்லதொரு வழிமுறையாக அமையும். அல்லது சேமிப்பிற்கான காசை எடுத்து வைத்து விட்டுப் பிறகு செலவழிப்பது ஏற்றதொரு முறையாக அமையும்.

            சிறுவயதில் விளையாட்டுப் பொருளைப் போலக் கொடுக்கப்படுவது என்றாலும் உண்டியல்தான் சேமிப்பிற்கான ஆதார வடிவம். அந்த உண்டியலைப் பிறகு நாம் பர்ஸாக மாற்றியிருக்கலாம். பையாக வைத்திருக்கலாம். அஞ்சலகமாகவோ, வங்கியாகவோ மாற்றியிருக்கலாம். சேமிப்பிற்கான ஒரு பொருளோ, ஒரு கணக்கோ இருக்க வேண்டியது அவசியம் என்பது இதன் அடிப்படையாகும்.

            சேமிப்பை ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொள்வது அவசியம். சேமிப்பு ஒரு பழக்கமாக உருவெடுத்தால்தான் சேமிப்பின் பலனை நாம் பெற முடியும். அன்றாடம் குளிப்பதைப் போல, பல் துலக்குவதைப் போல, ஆடைகளைத் துவைப்பதைப் போல அதையும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

            அதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. மாதம் முப்பது நாளும் இம்முறையில் சேமிக்கலாம். சேமிப்பதற்கேற்ப ஓர் உண்டியலையோ, ஒரு பையையோ வாங்கி வைத்துக் கொள்வது உசிதம். முதல் நாள் ஒரு ரூபாய் சேமித்தால், இரண்டாம் நாள் இரண்டு ரூபாய் சேமிப்பது, மூன்றாம் நாள் மூன்று ரூபாய் சேமிப்பது என்று தொடங்கி முப்பதாவது நாள் முப்பது ரூபாய் என்று சேமிப்பது நல்லதொரு வழிமுறை. இப்படிச் சேமித்தால் மாத முடிவில் எவ்வளவு சேமித்திருப்பீர்கள் தெரியுமா? 465 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதையே வருடம் முழுவதும் தொடர்ந்தால் 5580 ரூபாய் சேமித்திருப்பீர்கள். அவ்வாறு இல்லாமல் முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாம் நாள் இரண்டு ரூபாய் என 365 நாளும் தொடர்ந்தால் வருட முடிவில் 66,795 சேமித்திருப்பீர்கள். உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிச் சேமிக்கலாம்.

            உங்கள் வசதியைப் பொருத்து முதல் நாள் பத்து ரூபாய், இரண்டாம் நாள் இருபது ரூபாய் என்று கூட சேமிக்கலாம். முதல் நாள் நூறு ரூபாய், இரண்டாம் நாள் இருநூறு ரூபாய் என்று கூட சேமிக்கலாம். முதல் நாள் ஆயிரம் ரூபாய், இரண்டாம் நாள் என்றும் கூட சேமிக்கலாம். இப்படி சேமிப்புக்கான ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொண்டு அதன்படி சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதால் உண்டாகும் சேமிப்பானது அவசர காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் உங்களுக்கு நண்பரைப் போல உறவைப் போல உதவும் என்பது நிச்சயம்.

            நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஏதாவதொரு வடிவில் சேமிப்பைப் பழக்கமாக வளர்த்துக் கொள்வதுதான்.

*****

Tuesday 25 January 2022

India and Tamil

India and Tamil

Tamil is one of the 22 Indian languages ​​listed in Schedule 8 of the Constitution of India.

It is noteworthy that Tamil was the first language to be declared a classical language in India.

On 12.10.2004 Government of India announced Tamil as a Classical language. Government Order No: No. IV - 14014/2004 - NI - II

It is noteworthy that Sanskrit was declared a classical language in 2005 after Tamil was declared a classical language.

Tamil scholars will primarily consider the steps taken by Parithimar Kalaignar to declare Tamil as a classical language and the document ‘Statement of the status of Tamil as a classical language’ by George L. Hart.

*****

இந்தியாவும் தமிழும்

இந்தியாவும் தமிழும்

            இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.

            இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழ் செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் 12.10. 2004. அதற்கான அரசாணை எண் : No. IV – 14014 / 2004 – NI – II

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பே 2005 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு பரிதிமாற்கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகளையும் ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் எழுதிய ‘Statement of the status of Tamil as classical language’ என்ற ஆவணத்தையும் தமிழறிஞர்கள் முதன்மையாகக் கருதுவர்.

*****

Sunday 23 January 2022

Two confident stars

Two confident stars

Two persons can be mentioned as confident stars of today. One is Ilam Bhagwat. The other is Malavika Hegde.

Ilam Bhagwat is one of the achievers in competition examination. Malavika Hegde is the one who lifted the company of her husband who was in debt.

Following the dead of his father, the Ilam Bhagwat wandered to the Thanjavur District collector Office for compassionate work. The office did not give him a job. It gave pain and suffering only. Composting those pains and sufferings, Ilam Bhagwat has reached the peak of IAS gradually achieved from Group 4 and Group 1 examinations.

Siddharth is famous for opening coffee shops called Coffee Day. Siddharth committed suicide when he was strangled by the debt burden of coffee day. Siddharth's wife is Malavika. The loss of a husband is on one side, the debt burden of strangulation on the other. She took over the company and has halved its debt of Rs 7,000 crore.

Ilam Bhagwat is the one who endured the loss of his father while Malavika was the one who endured the loss of her husband. Both have taught a new lesson in recovering from loss and achieving.

The suffering and pain that Ilam Bhagwat faced before getting government service was overwhelming. The pain and suffering that Malavika faced before recovering the company from the debt burden was overwhelming. Both have overcome pain and suffering.

Losses, sufferings and pains are in everyone's life. Shouldn't those who pass them by and prove themselves be called achievers! And aren't they the confident stars of today's society!

*****

இரு நம்பிக்கை நட்சத்திரங்கள்

இரு நம்பிக்கை நட்சத்திரங்கள்

            இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களாக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இளம் பகவத். மற்றொருவர் மாளவிகா ஹெக்டே.

            இளம் பகவத் ஆட்சிப் பணித் தேர்வில் சாதித்தவர். மாளவிகா ஹெக்டே கடனில் தத்தளித்த கணவரின் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தியவர்.

            தந்தையின் இழப்பினை அடுத்து கருணை அடிப்படையிலான பணிக்காகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு அலையாய் அலைந்தவர் இளம் பகவத். ஆட்சியரகம் அவருக்கு வேலையைத் தரவில்லை. வலிகளையும் வேதனைகளையும்தான் தந்திருக்கிறது. அந்த வலிகளையும் வேதனைகளையும் உரமாக்கிக் கொண்டு குருப் 4, குருப் 1 எனப் படிப்படியாகச் சாதித்து ஐ.ஏ.எஸ். எனும் சிகரத்தை எட்டியிருக்கிறார் இளம் பகவத்.

            காபி டே எனும் கபேக்களைத் திறந்து பிரபலமானவர் சித்தார்த். எந்த காபி டேயால் பிரபலமானாரோ அதன் கடன் சுமை கழுத்தை நெரித்த போது தற்கொலை செய்து கொண்டார் சித்தார்த். சித்தாத்தின் மனைவி மாளவிகா. கணவரின் இழப்பு ஒரு பக்கம், கழுத்தை நெரிக்கும் கடன் சுமை மறுபக்கம். நிறுவனத்தின் தலைமையேற்று 7000 கோடியாக இருந்த கடனைப் பாதியாகக் குறைத்திருக்கிறார்.

            இளம் பகவத் தந்தையின் இழப்பைத் தாங்கிக் கொண்டு சாதித்தவர் என்றால் மாளவிகா கணவரின் இழப்பைத் தாங்கிக் கொண்டு சாதித்தவர். இருவரும் இழப்பினின்று மீண்டு வந்து சாதிப்பதற்கான புதிய பாடத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

            அரசு பணிக்காக இளம் பகவத் சந்தித்தவேதனைகளும் வலிகளும் அதிகம். கடன் சுமையிருந்து நிறுவனத்தை மீட்பதற்குள் மாளவிகா சந்தித்த வேதனைகளும் வலிகளும் அதிகம். இருவரும் வலிகளையும் வேதனைகளையும் வென்றிருக்கிறார்கள்.

            இழப்புகளும், வலிகளும், வேதனைகளும் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன. அவற்றைக் கடந்து வந்து தன்னை நிரூபிப்பவர்களைச் சாதனையாளர்களாகத்தான் குறிப்பிட வேண்டும் அல்லவா! அத்துடன் இவர்கள்தான் இன்றைய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களும் அல்லவா!

*****

Saturday 22 January 2022

Higher telescope than the Hubble

Higher telescope than the Hubble

The Hubble Telescope was considered the largest telescope ever. From now on that pride is to get the James Webb telescope.

If Hubble sees up to 1340 light years, James webb telescope will see up to 1380 light years. This is an opportunity to learn more about cosmic creation.

We need to look at an important aspect of this vision. They say the sun we see with our eyes at this moment is about 8 minutes old. What this means is that the time it takes for sunlight to reach the earth is about 8 minutes.

Based on the above, the Hubble Space Telescope showed the universe 1340 light years ago. Since the current James Webb telescope extends this further, it is a way to learn more about the science behind cosmic creation!

*****

ஹப்பிளை விட பெரிய தொலைநோக்கி

ஹப்பிளை விட பெரிய தொலைநோக்கி

            இதுவரை மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்பட்டு வந்தது ஹப்பிள் தொலைநோக்கி. இனிமேல் அந்தப் பெருமை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பெற இருக்கிறது.

            ஹப்பிள் 1340 ஒளி ஆண்டுகள் வரை பார்க்கும் என்றால் ஜேம்ஸ்வெப் 1380 ஒளி ஆண்டுகள் வரை பார்க்கும். இதனால் அண்ட உருவாக்கம் குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்கு வாய்ப்பு உண்டாகியிருக்கிறது.

            தொலைநோக்கிப் பார்ப்பதன் ஒரு முக்கிய அம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் இந்த நொடியில் கண்ணால் பார்க்கும் சூரியன் சுமார் 8 நிமிடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். இது என்ன கணக்கு என்றால் சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் சுமார் 8 நிமிடம் என்பதோடு தொடர்புடைய கணக்கு.

மேற்சொன்ன அடிப்படையில் ஹப்பிள் தொலைநோக்கிக் காட்டியது 1340 ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய அண்டத்தை. இதை தற்போதைய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்னும் நீட்டித்துக் காட்டும் என்பதால் மேலதிக அண்ட உருவாக்கம் தொடர்புடைய அறிவியலை அறிய வழியேற்படுகிறது அல்லவா!

*****

Vaccine - the perception of hope

Vaccine - the perception of hope

There are different opinions about the corona – vaccine. In this case, the majority of people get vaccinated.

In a country like India, which has a large population, it is challenging to follow the social distance and make everyone wear a mask.

Vaccination seems to be the best way even if people do not follow the social distance and do not follow the habit of wearing a mask.

The idea of ​​no vaccine at all cannot be put forward, except that we can put forward the idea that the vaccine that has been discovered so far should be further improved and that the potential for its prevention should be increased.

It would be appropriate to confront the corona with the hope of accepting scientific discoveries as continuing curfews and prolonging it can affect livelihoods.

At present, the discovery of coronavirus tablets increases the perception of hope.

Vaccination should not be seen as contrary to our traditional medicine. Vaccination gives double protection while traditional medicine enhances our immunity.

In the future, it will be appropriate to adopt a combination of traditional and English medicine as needed.

*****

தடுப்பூசி – நம்பிக்கையின் புலப்பாடு

தடுப்பூசி – நம்பிக்கையின் புலப்பாடு

            கொரோனா – தடுப்பூசி குறித்துப் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் பெரும்பான்மையானோர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டும் ஆயிற்று.

அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அனைவரையும் முகக்கவசம் அணியச் செய்வது போன்றவை சவால் நிறைந்தன.

            மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டாலும் கொரோனா பரவக் கூடாது, முகக்கவசம் அணியாவிட்டாலும் பரவக் கூடாது என்றால் தடுப்பூசிதான் அதற்குரிய வழியாகத் தெரிகிறது.

தற்போது வரை கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை இன்னும் மேம்படுத்த வேண்டும், அதன் தடுக்கும் திறனுக்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்த வேண்டும் என்பதை வேண்டுமானால் நாம் கருத்தாக முன்வைக்க முடியுமே தவிர, முற்றிலும் தடுப்பூசி வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து விட முடியாது.

            தொடர்ந்து ஊரடங்கைப் பிறப்பிப்பதும் அதை நீட்டித்துக் கொண்டு செல்வதும் வாழ்வாதரத்தைப் பாதிக்கக்கூடியன என்பதால் தடுப்பூசி போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டும் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டும் நம்பிக்கையோடு கொரோனாவை எதிர்கொள்வதே சரியானதாகவும் இருக்கும்.

            தற்போதைய நிலையில் கொரோனாவுக்கான மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் நம்பிக்கைத் தரக் கூடியனவாக இருக்கின்றன.

            தடுப்பூசிச் செலுத்திக் கொள்வதை நமது பாரம்பரிய மருத்துவத்துக்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை. பாரம்பரிய மருத்துவத்தால் நமது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ளும் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது இரட்டைப் பாதுகாப்பைத் தரும்.

            இனிவரும் காலங்களில் பாரம்பரியமும், ஆங்கில மருத்துவ முறையும் இணைந்து கலப்பு மருத்துவமுறையைத் தேவைக்கேற்ப கைக்கொள்வதே ஏற்ற மருத்துவ முறையாக அமையும்.

*****