காணாமல் போன கைபேசியைக் கண்டுபிடிக்கவும் பூட்டவும் …
காணாமல் போன ஆன்ட்ராய்டு வகைக் கைபேசியைக் கண்டுபிடிக்கவும்
அதைப் பூட்டி வைக்கவும் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.
முதலில் கூகுள் தேடு பொறியில் android.com/find எனத் தட்டச்சு செய்யுங்கள்.
பிறகு உங்கள் கூகுள் கணக்கை log in செய்யுங்கள். உங்களின் email and password கொடுத்த பின்பு
log in ஆகும்.
அப்போது திரையின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன்
மாடல் எண் மற்றும் அதற்கு கீழே Play Sound, Lock, Erase என்ற 3 தகவல்கள்
இருக்கும்.
திரையின் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த
இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது Map மூலமாகத் தெரியவரும்.
Play Sound என்பதைச் சொடுக்கினால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
Lock வசதியைச் சொடுக்கினால் கைபேசி Log ஆகி விடும்.
Erase வசதியைச் சொடுக்கினால் கைபேசியில் உள்ள தகவல் அனைத்தும்
அழிந்து விடும்.
இப்பயனுள்ள
செய்தியை ஆன்ட்ராய்டு கைபேசி உபயோகிக்கும் அனைவரும் அறிந்து வைத்திருப்பது கைபேசியைத்
தொலைத்த விட்ட இக்கட்டான காலங்களில் பயனுள்ளதாக அமையும்.
*****
No comments:
Post a Comment