Sunday, 9 January 2022

EMIS புதிய செயலி – அறிய வேண்டியவை

EMIS புதிய செயலி – அறிய வேண்டியவை

1. புதிய Emis செயலியைப் பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்யலாம்.

2. தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு கொரோனா விடுமுறை என்பதால் Today's status என்பதில் Fully not working என போட வேண்டும்.

 3. அதற்கான காரணம் என்பதில் Covid என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. அதைத் தொடர்ந்து ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். LO பயிற்சிக்கு சென்றிருந்தால் Training என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. பள்ளி துப்புரவு பணியாளர் எண்ணிக்கை & பணி புரிந்த நேரம் பதிவு செய்ய வேண்டும்.

6. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் Today's status இல் Fully not working எனத் தேர்வு செய்து விட்டால் மாணவர் வருகையை எந்த வகுப்பு ஆசிரியரும் பதிவு செய்ய இயலாது.

7. Today's status இல் Fully not working என தந்திருந்தாலும் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு / பயிற்சிக்கு வருகை புரிவதால், ஆசிரியர் வருகை தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்பட வேண்டும்.

8. கொரோனா காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, Today's status இல் Full working day என தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப் பட வேண்டும்.

9. வகுப்பாசிரியர்கள் அவர்களுக்கான 8 இலக்க Username and Password ஐப் பயன் படுத்தி மாணவர் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

10. ஏதேனும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருப்பின் தலைமை ஆசிரியர் பள்ளி Login வழியாக சென்று விடுப்பு எடுத்த ஆசிரியருக்கான வகுப்பு மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

இப்புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

No comments:

Post a Comment