Friday 7 January 2022

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை EMIS இல் பதிவேற்றும் முறை

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை EMIS இல் பதிவேற்றும் முறை

1. மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 8 இலக்க தனிப்பட்ட Login ID (200XXXXX) மற்றும் Password ஐப் உதாரணமாக (9443@1984) (அலைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் @ பிறந்த ஆண்டு நான்கு இலக்கங்களில்) பயன்படுத்தி EMIS website இல் Login செய்யவும்.

2. இடது பக்க Panel இல் My profile க்குக் கீழே Teacher Transfer என்ற Menu ஐக் Click செய்தால் மாறுதல் கோரும் விண்ணப்பம் வலதுபக்கம் தோன்றும்.

3. அவ்விண்ணப்பத்தில் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் வழங்கப்பட்டிருக்கும். (அவற்றில் ஏதேனும் தவறாக இருந்தால் School login id மூலம் login செய்து திருத்திய பின் விண்ணப்பத்தைத் தொடரவும்)

4. பூர்த்தி செய்யப்பட வேண்டிய பகுதிகளை மட்டும் முறையாகப் பூர்த்தி செய்து இப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த ஆணையையும், சிறப்பு முன்னுரிமை ஏதேனும் இருப்பின் அதற்கான ஆவணத்தையும் அதற்குரிய Upload file பொத்தானை Click செய்து பதிவேற்ற வேண்டும். (இந்த இணைப்பு ஆவணங்களின் File Size 2 Mb க்கு மிகாமல்  jpg அல்வது  png அல்லது  pdf வடிவில் இருக்க வேண்டும்)

5. அனைத்தையும் சரிபார்த்த பின்னர் Submit செய்யவும்.

தலைமையாசிரியர் பணி

1. School login ID மூலம் தலைமையாசிரியர் EMIS website இல் login செய்து Left panelஇ ல் Staff details ஐக் Click செய்யவும் அதில் கடைசியாகவுள்ள Transfer Application Approval எனும் பொத்தானைக் Click செய்யவும்.

2. வலப்பக்கம் தோன்றும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களை View செய்து சரிபார்த்து Approve செய்யவும்.

3. தவறுகள் இருந்தால் Reject செய்யவும். Reject செய்யப்பட்ட பின்னர் அந்த ஆசிரியர் மீண்டும் சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

5. Approve செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தால் கேட்கப்படுகின்ற எண்ணிக்கையில் பிரதியெடுத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 09.01.2022 பிற்பகல் 5 மணிக்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

*****

No comments:

Post a Comment