Saturday, 22 January 2022

ஹப்பிளை விட பெரிய தொலைநோக்கி

ஹப்பிளை விட பெரிய தொலைநோக்கி

            இதுவரை மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்பட்டு வந்தது ஹப்பிள் தொலைநோக்கி. இனிமேல் அந்தப் பெருமை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பெற இருக்கிறது.

            ஹப்பிள் 1340 ஒளி ஆண்டுகள் வரை பார்க்கும் என்றால் ஜேம்ஸ்வெப் 1380 ஒளி ஆண்டுகள் வரை பார்க்கும். இதனால் அண்ட உருவாக்கம் குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்கு வாய்ப்பு உண்டாகியிருக்கிறது.

            தொலைநோக்கிப் பார்ப்பதன் ஒரு முக்கிய அம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் இந்த நொடியில் கண்ணால் பார்க்கும் சூரியன் சுமார் 8 நிமிடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். இது என்ன கணக்கு என்றால் சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் சுமார் 8 நிமிடம் என்பதோடு தொடர்புடைய கணக்கு.

மேற்சொன்ன அடிப்படையில் ஹப்பிள் தொலைநோக்கிக் காட்டியது 1340 ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய அண்டத்தை. இதை தற்போதைய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்னும் நீட்டித்துக் காட்டும் என்பதால் மேலதிக அண்ட உருவாக்கம் தொடர்புடைய அறிவியலை அறிய வழியேற்படுகிறது அல்லவா!

*****

No comments:

Post a Comment