Sunday 25 February 2024

வீட்டு உபயோக ரோபோக்கள்!

வீட்டு உபயோக ரோபோக்கள்!

லக்ஸ் ஏஐ நிறுவனம் வீட்டு உபயோகத்திற்கான ரோபோக்களை உருவாக்கி வருகிறது. க்யூ.டி. என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள் மூன்று வயது குழந்தையின் அளவு இருக்கிறது. தன்னிடம் உள்ள கேமராக்கள் மற்றும் மைக்ரோ போன்கள் மூலமாக தகவல்களைச் சேகரித்துக் கொண்டே இருக்கும். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் இந்த ரோபோ உங்களுக்கேற்ப பல விதங்களில் உங்கள் தேவைகளில் உதவும். இந்த ரோபோக்களுக்கு அதன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீங்கள் பயிற்சியளித்து உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பது இதன் சிறப்பான அம்சம். டிமென்ஷியா எனும் மறதிநோய் கொண்ட நோயாளிகளுக்கும், ஆட்டிசம் போன்ற கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கும் இந்த ரோபோக்களைப் பயிற்சி கொடுத்து சிறப்பாகப் பயன்படுத்தவும் முடியும். இது குறித்த மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://luxai.com/

****

No comments:

Post a Comment