NMMS தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான
பயனுள்ள குறிப்புகள்!
தேர்வு நாள் : 03-02-2024
NMMS தேர்வு எழுதும் மாணவர்கள்
குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும். இதனால் பதற்றம் இன்றித் தேர்வை
எழுதலாம். அவர்களுக்கான தேர்வு கால அட்டவணை :
தேர்வு மையத்திற்குச் செல்லும்
நேரம் : காலை 8.30 - 9.00
இனி மற்ற கால அட்டவணை குறித்த
விவரங்களைக் காண்போம்.
9.20 - 9.25 தேர்வறைக்குச் செல்லுதல்
9.25 - 11.00 : MAT
11.00 - 11. 25 : இடைவேளை
11. 25 - 1.00 : SAT
தேர்வு முடிந்தவுடன் கவனமாக
OMR தாளினை தேர்வறைக் கண்காணிப்பாளரிடம் வழங்கிய
பின், இரு வினாத்தாள்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வரலாம்.
முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள் விடைப் பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும்.
கணினி மதிப்பீடு என்பதால் இரு
விடையை Shade செய்தாலோ அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade செய்தாலோ அது தவறாக எடுத்துக் கொள்ளப்படும்.
OMR தாளில் பெயர் - புகைப்படம்
விவரம் அச்சிடப்பட்டுள்ளதால், செய்ய வேண்டியவை கையெழுத்து இடுதல் மற்றும் அறை கண்காணிப்பாளர்
Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.
வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல்
கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளைத் தாள் இணைக்கபட்டுள்ளது.
அதில் செய்து பார்க்கலாம்.
OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட்
பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.
பொதுவாக செய்யும் தவறு : 5 வது
கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டு விட்டு 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில்
shade செய்து விடக் கூடும்.
இதனால் அடுத்து வரும் அனைத்து
வினாக்களுக்கும் தவறாக Shade செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும்
போது வினா எண் பார்த்து shade செய்யவும்.
180 வினாக்களுக்கு விடையளிக்க
180 நிமிடங்கள் இருப்பதால் ஒரு வினாவிற்கு 1 நிமிட கால அளவு எடுத்துக் கொள்ளலாம். நீண்ட
நேரம் ஒரே வினாவிற்கு தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லுதல் அவசியம்.
MAT பகுதி விடையளிக்கும் போது
அனைத்து வகையிலும் யோசித்து முயற்சிக்கவும்.
வினாத்தாளில் கடைசி பக்கத்தில்
(Rough work) எழுத வேண்டிய இடத்தில் பின்வருவனவற்றை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
இதனால் சில வினாக்களுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள்
அதிகம் இடம் பெறுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
8 திசைகள் எழுதிக் கொள்ள வேண்டும்
வர்க்க எண் 20 வரை
கன எண் 10 வரை
பகா எண்கள் 30 வரை
பின்வரும் சில குறிப்புகளை நினைவில்
கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
காலம் கணக்குகள் மட்டு
BODMAS விதி
இரு எண் கூடுதல் மூன்றாவது எண்
மூன்று எண் கூடுதல் நான்காவது
எண்
முதல் எண் - மூன்றாவது எண்
இரண்டாம் எண் - நான்காம் எண்
தொடர்பு
வரிசை கணக்குகளில் இடது , வலது
கடிகார திசை - கடிகார எதிர் திசை
வர்க்கம் + 1 / வர்க்கம் - 1
கனம் + 1 / கனம் - 1
இரு எண் பெருக்கல் மூன்றாவது
எண்
எண்களின் மடங்கு எ. கா. x 3
, x 4
எண்களின் அடுக்கு
எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 ,
...
பகா எண்களின் கூடுதல்
எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி
பிம்பங்கள்
மேலும் பின்வரும் குறிப்புகளில்
கவனமாக இருப்பதும் அவசியமாகும்.
SAT கூற்று காரணம் கேள்விகள்
பொருத்துக விடைகள்
எ. கா: i - a , ii - c , iii
- d , iv - b
தவறான கூற்று எது ? என்ற கேள்விக்கு,
கேள்வியை சரியாக கவனிக்காமல்
சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது
இயன்றவரை சிந்தித்து விடை தரவும்
இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட
அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.
Minus மதிப்பெண் இல்லை. எனவே
அனைத்து வினாக்களுக்கும் விடை தருவது அவசியம்.
ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.
எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு
விதையாக இத்தேர்வு அமையும்.
தேர்வெழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்துகள்!
*****
No comments:
Post a Comment