Thursday, 29 February 2024

உலகெங்கும் வேலைவாய்ப்புள்ள ‘மக்கள் தொகைக் கல்வி’ குறித்து படிக்க…

உலகெங்கும் வேலைவாய்ப்புள்ள ‘மக்கள் தொகைக் கல்வி’ குறித்து படிக்க…

கிழக்கு மும்பையின் தியோனார் பகுதியில் IIPS எனப்படும் International Institute for Population Sciences என்ற கல்வி நிறுவனம் உள்ளது. மக்கள்தொகை குறித்த கல்வியை இந்நிறுவனம் சர்வதேச தரத்தில் வழங்குகிறது. 1956 இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 1985இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமானது. தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. மக்கள்தொகை குறித்த ஆய்வுகள் மற்றும் தரவுகளை உருவாக்கும் நிபுணர்களை இக்கல்வி நிறுவனம் உருவாக்கி வருகிறது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் மக்கள்தொகை தொடர்பான முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகளுக்கு இக்கல்வி நிறுவனத்தை நாடலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு இக்கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்வு பெறுவதுடன் நேர்காணல் தேர்விலும் தேர்வு பெற வேண்டும். மத்திய கல்வி நிறுவனமான இந்நிறுவனம் CUET நுழைவுத் தேர்வில்லாமல் அந்நிறுவனமே நடத்தும் நுழைவுத் தேர்வைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடக்கும். நுழைவுத் தேர்வில் கணக்கு, புள்ளியியல், பொது அறிவு, ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் மாதம் ஐந்தாயிரம் உதவித்தொகையுடன் இக்கல்வி நிறுவனத்தில் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் பயின்றவர்களுக்குப் பிரகாசமான வேலை வாய்ப்புகள் உலகெங்கும் காத்திருக்கின்றன. இந்நிறுவனம் வழங்கும் படிப்புக ள் மற்றும் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.iipsindia.ac.in/

*****

No comments:

Post a Comment