வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பு பெற படிக்க வேண்டிய நிறுவனம்!
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்,
மஷாப் டேங்க் பகுதியில் உள்ளது IDRBT. அதாவது Institute for Development and
Research in Banking Technology. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் நிர்வாக்ததின்
கீழ் இக்கல்வி நிறுவனம் நடத்தப்படுகிறது.
இந்நிறுவனம் வங்கி தொடர்பான
பல்வேறு பொறியியல், தகவல் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது. பொறியியல் படித்தவர்கள்,
முதுநிலை கணினியியல், கணினி பயன்பாடுகள் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மேற்கொண்டு
இந்நிறுவனங்களில் படிக்கலாம். இதற்காக GATE தேர்வு எழுதி தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
வங்கிகளுக்கென்றே இயங்கும்
கல்வி நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் பாடத்திட்டத்தை வேறெங்கும் படிக்க இயலாது.
வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்புகளை
விரும்புவோரும், வங்கிகளில் பணியாற்றும் உயர்பதவியை அடைய விரும்பும் ஊழியர்களும் இந்நிறுவனத்தில்
பயின்று தங்கள் கனவுகளை விரைவாக அடையலாம்.
இந்நிறுவனங்களில் பயின்று
வேலை வாய்ப்பைப் பெறுவோரின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ஒன்பது லட்சமாக உள்ளது. இந்நிறுவனம்
தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறவும், இந்நிறுவனம் வழங்கும் படிப்புகளைப் பற்றி அறிந்து
கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment