வாகனங்களின் டயர் விவரம் குறித்து அறிந்து கொள்வோமா?
ஒவ்வொரு வாகன வகை டயரின்
பக்கவாட்டில் அது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும்
தகவல்கள் முலமாக அந்த டயர் செல்வதற்கான வேகம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற
விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, டயரின்
பக்கவாட்டில் நீங்கள் 1415 என்ற எண்ணைக் கண்டால, இதன் பொருள், அந்த டயர் 2015 ஆம் ஆண்டின்
பதினான்காவது வாரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதாகும்.
ஒரு டயர் உற்பத்தி செய்யப்பட்ட
நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு டயருக்கும் ஒரு குறிப்பிட்ட
வேக கட்டுபாட்டு அளவு உண்டு. வாகனங்கள் செல்லும் வேக அளவுக்கு ஏற்ப டயர்களைப் பயன்படுத்த வேண்டும். 150 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனத்தில் 120 கி.மீ. வேக வரம்பிற்கான டயர்களைப் பயன்படுத்தக் கூடாது. டயரின் பக்கவாட்டில் இதற்கான எழுத்து குறியீடு இடம் பெற்றிருக்கும்.
L என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 120 கி.மீ.
M என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம். 130 கி.மீ.
N என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 140 கி.மீ.
P என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 150 கி.மீ.
Q என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 160 கி.மீ.
R என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 170 கி.மீ.
H என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 210 கி.மீ.
V என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 240 கி.மீ.
W என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 270 கி.மீ.
Y என்ற எழுத்து காட்டும்
அதிகபட்ச வேகம் 300 கி.மீ.
இனி டயரைப் பார்க்கும் போதெல்லாம்
அதன் பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் எண்கள் மற்றும் எழுத்துகளைக் கொண்டு டயர் பற்றிய
மேற்படி விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும்
என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
*****
No comments:
Post a Comment