சர்வதேச ‘பை’ (π) தினம்
சர்வதேச ‘பை’ (π) தினம் ஆண்டுதோறும் மார்ச்
மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
π இன் தோராய மதிப்பான
3.14 இல் 3 என்பது மூன்றாவது மாதமான மார்ச்சையும் 14 என்பது 14 வது நாளையும் குறிப்பதாகக்
கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ‘பை’ தினம் மார்ச் மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் π இன் மதிப்பானது பழங்காலத்திலிருந்து
பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கான வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் வில்லியம்
ஜோன்ஸ் ஆவார். இவர் அறிவியல் அறிஞரான நியூட்டனின் நண்பர் ஆவார். இவர் π இன் இந்த வடிவத்தை 1706
இல் அறிமுகப்படுத்தினார். கணித அறிஞர் ஆய்லர் இந்த வடிவத்தைப் பிரபலப்படுத்தியவர் ஆவார்.
சர்வதேச ‘பை’ (π) தினத்தை அமெரிக்கா இயற்பியலரான
லாரி ஷா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இதனால்
இவர் ‘பிரின்ஸ் ஆப் பை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
‘பை’ (π) ஒரு விகிதமுறா எண் என்பதை
நாம் அறிவோம். இதன் தோராய மதிப்பு பல தசம இலக்கங்களுக்கு நீளக் கூடியது. பொதுவாகக்
கணக்குகளில் இதன் மதிப்பை 22/7 எனவோ அல்லது 3.14 எனவோ எடுத்துக் கொண்டு செய்கிறோம்.
‘பை’ (π) இன் தோராய மதிப்பை 3.141592653589793238462643383279502884197…
என எழுதிக் கொண்டே போகலாம். இப்படியாக 22 டிரில்லியன் இலக்கங்கள் வரை கண்டறிந்துள்ளார்கள்
என்பது ஆச்சரியமான விசயம் இல்லையா!
‘பை’ (π) இன் தோராய மதிப்பை நாம்
22/7 குறிப்பிடுவதைப் பாபிலோனியர்கள் 31/8 என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பது மற்றோர்
ஆச்சரியமான விசயம்.
இன்னும் ஓர் ஆச்சரியமான விசயம்
என்னவென்றால் ‘பை’ (π) தினம்தான் ஐன்ஸ்டீனின் பிறந்த தினமும். ஆம் ஐன்ஸ்டீன் பிறந்தது
14.03.1879 ஆகும்.
‘பை’ (π) தினத்தைப் பற்றி அறிய வந்து
எவ்வளவு கணித விவரங்களைத் தெரிந்து கொண்டோம் பார்த்தீர்களா? இந்தத் தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ள வகையில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment