தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தபால் வாக்கினைப் பெற…
தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்கள்
தங்களது தபால் வாக்கை விடுபடாமல் செலுத்த வேண்டுமானால் முதல் நாள் தேர்தல் பயிற்சி
அன்றே தேர்தல் பயிற்சி மையத்திலேயே,
1. தேர்தல் பணி ஆணையின் நகல்,
2. வாக்காளர் அடையாள அட்டையின்
நகல்,
3. ஆதார் அட்டையின் நகல்
ஆகியவற்றோடு தங்களது பாகம்
எண் & வரிசை எண் ஆகியவற்றை உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கவும்.
இப்படிச் சரியாகச் செய்வதன் மூலமாக இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பிலோ அல்லது அதற்கு
முன்பாகவோ தபால் வாக்கினைப் பெற்று இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே ஓட்டளிக்கும்
அறைக்குச் சென்று அங்குள்ள வாக்குப் பெட்டியில் தங்கள் தபால் வாக்கினைச் செலுத்தலாம்.
இதனால் தேர்தல் பணியாற்றும் அனைவரும் தங்களது வாக்கினைத் தபால் வாக்கு மூலம் செலுத்தி
100 சதவீத ஜனநாயக் கடமையை ஆற்ற முடியும்.
*****
No comments:
Post a Comment