Sunday, 31 March 2024

கணிதப் பாடத்தைப் படிப்பதற்கான சிறப்பான அணுகுமுறைகள்!

கணிதப் பாடத்தைப் படிப்பதற்கான சிறப்பான அணுகுமுறைகள்!

கணிதப் பாடத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கீழ்வகுப்புகளில் கற்றுக் கொண்டு விசயம் மேல் வகுப்பிற்கும் தேவைப்படுவதுதான். மேல்வகுப்பிற்குச் சென்றதும் கீழ்வகுப்புப் பாடங்களை மறந்து விட முடியாது. அடிப்படையான விசயங்களை மேலே மேலே கற்றுக் கொண்டுப் போவதுதான் கணிதப் பாடம்.

மேல் வகுப்புக்குச் செல்லும் போது கீழ்வகுப்புக் கணிதப் பாடங்களை மீள்பார்வை செய்ய வேண்டும். கணிதம் என்பது தொலைக்காட்சித் தொடர் போன்றது. அவற்றை ஒவ்வொரு நாளும் பார்த்து நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் ஆசிரியர் கணக்குப் பாடம் எடுக்கும் போது படிநிலைகள் நன்றாகப் புரிந்தாலும் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நாட்கள் கழிந்தப் பிறகு அந்தக் கணக்குகள் புதியதாகத் தோன்றும்.

கணித வீட்டுப்பாடங்களை பள்ளி இடைவேளை நேரத்தில் செய்து பார்க்க வேண்டும். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து செய்தால் மிகவும் நல்லது. சந்தேகம் வரும் போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

சூத்திரங்களை மனப்பாடம் செய்வதுடன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எப்படி கேள்வி கேட்டாலும் சூத்திரங்களைப் பயன்படுத்திக் கணக்கைச் செய்ய முடியும்.

கணக்கின் படிநிலைகளைச் செய்வது என்பது தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது போன்றது. நன்றாகப் பழகி விடும் போது சுலபமாகி விடும். இடைவெளி விடாமல் தொடர்ந்து செய்வது நல்ல பலனளிக்கும்.

கணிதத்தை அமைதியாக, கவனமாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

கணக்குகளை எழுதிப் படிப்பதுதான் அதாவது போட்டுப் பார்த்து பயிற்சி செய்வதுதான் எப்போதும் சிறந்த முறையாகும்.

கணிதப் பாடத்தைச் சிறப்பாகப் படிக்க விரும்புபவர்கள் மேற்படி நுணுக்கங்களையும் கருத்துகளையும் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுவது நல்ல பலனளிக்கும்.

*****

No comments:

Post a Comment