Tuesday 19 March 2024

ஆங்கிலத்தை வசப்படுத்த என்ன செய்யலாம்?

ஆங்கிலத்தை வசப்படுத்த…

தமிழ் வழியில் படிப்போர் தமக்கு ஆங்கிலம் வராது என நினைத்து விட வேண்டாம்.

இந்த உலகில் முயன்றால் முடியாதது இல்லை.

தினந்தோறும் ஆங்கில நாளிதழ்களைப் படியுங்கள்.

வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்திகளைக் கேளுங்கள்.

தினந்தோறும் ஐந்து புதிய ஆங்கிலச் சொற்களையாவது அறிந்து கொள்ளுங்கள். அவற்றைக் கட்டாயம் இதற்கென ஒரு குறிப்பேட்டைத் தயார் செய்து அதில் தேதி போட்டு எழுதி வைத்துக் கொண்டே வாருங்கள். அந்த ஐந்துச் சொற்களைப் பயன்படுத்தித் நீங்களாக ஐந்து வாக்கியங்களை எழுதிப் பார்ப்பதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலப் படக்கதைகளைப் படிக்கத் துவங்குங்கள்.

படிப்படியாக ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள், பத்திகளைப் படிக்க ஆரம்பியுங்கள்.

நண்பர்களுடன் உறவினர்களுடன் தயங்காமல் ஆங்கிலத்தில் உரையாடப் பழகுங்கள். தவறு ஏற்பட்டு விடுமா என்ற தயங்கவோ, பயப்படவோ வேண்டாம். தவறு ஏற்பட்டால் அவர்கள் திருத்தி உதவுவார்கள். அப்படி அவர்கள் திருத்தி உதவுவது நமக்கு வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும்.

ஆங்கிலப் பேச ஆர்வமுள்ளவர்களை ஒரு குழுவாக இணைத்துக் கொண்டு பேசிப் பழகுங்கள்.

ஆங்கில நாளிதழ்களுக்குப் பத்திகள் மற்றும் வாசகர் கடிதம் எழுதிப் போடுங்கள்.

ஆர்வமுள்ளவர்களை இணைத்து மாதாந்திர ஆங்கிலக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இவ்வளவும் செய்த பிறகும் உங்களுக்கு ஆங்கிலம் வராமல் போய் விடுமா என்ன?

*****

No comments:

Post a Comment