எந்த வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க…
ஒரு சில வேலைகளைத் தங்களால்
செய்ய முடியவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எத்தனை பேர்?
உண்மையில் மனிதர்களால் செய்து
முடிக்க முடியாத வேலையும் இருக்கிறதா என்ன?
எந்த வேலையாக இருந்தாலும்
எவராலும் செய்து முடிக்க முடியும். அது எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் செய்து
முடிக்க முடியும். அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க முடியும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் சோம்பலை ஒழித்துக்
கட்ட வேண்டும்.
சோம்பலை ஒழிப்பதற்குத் தள்ளிப்போடும்
பழக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.
தள்ளிப்போடுதலை ஒழித்துக்
கட்ட வேலைகளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உடனடியாக வேலையைத் துவங்கி
விட வேண்டும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நாம் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்ட வேலையின் பகுதிகளைச் செய்து முடித்துக்
கொண்டே வர வேண்டும். அப்படி செய்து கொண்டிருந்தால் மிகப்பெரிய வேலையும் விரைவில் முடிந்து
விடும். இவ்வளவு பெரிய வேலையா என்று எந்த வேலையைப் பார்த்தும் மலைப்பு தோன்றாது. பெரிய
வேலை என்று எந்த வேலையையும் தள்ளிப் போடவும் தோன்றாது.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம்
உள்ளது. அதாவது 1440 நிமிடங்கள் உள்ளன. அதாவது 86400 வினாடிகள் உள்ளன. இவற்றை நாம்
அந்தந்த நாளிலேயே பயன்படுத்தியாக வேண்டும். இவற்றைச் சேமித்து வைக்கவோ, மறுநாள் பயன்படுத்திக்
கொள்கிறேன் என்று தள்ளி வைக்கவோ முடியாது.
ஆகவே ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு
நொடியையும் தள்ளிப் போடாமல், வீணாக்காமல் அந்தந்தப் பொழுதிலேயே வேலைகளைச் செய்ய பயன்படுத்திக்
கொள்வதுதான் சிறப்பானது.
இந்த உண்மையைப் புரிந்து
கொண்டால் உங்களால் எந்த வேலையையாவது தள்ளிப் போட முடியுமா என்ன?
இனி எந்த வேலையையும் தள்ளிப்
போட மாட்டீர்கள்தானே? வேலையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல்
வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்தானே?
*****
No comments:
Post a Comment