‘புரவி’ இதழுக்குச் சந்தா செய்யலாம்!
‘புரவி’ வாசகசாலையின் அமைப்பிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ்.
இதழாசிரியர்களான கார்த்திகேயனும் அருணும் இலக்கியத் தேடலுக்கான கண்டடைதலாக இவ்விதழைச்
சிறப்பாகக் கொணந்த்துள்ளார்கள். புரவியின் நான்காவது இதழ் (ஜூலை 2021) வாசித்தேன்.
அருமை. கட்டமைப்பிலும் இதழமைப்பிலும் வெகு சிறப்பும் மிகு நேர்த்தியும் கைகூடியுள்ளது.
சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் வாழ்வின் வெவ்வேறு கூறுகளைப் பரிட்சயப்படுத்துகின்றன.
கவிதைகள் கவிஞர்களின் மனவெளியின் புதுப்புது பரிமாணங்களைக் காட்டுகின்றன. உலக சினிமாக்கள்
குறித்த கட்டுரை ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நேர்காணல்
இளம் எழுத்தாளர்களுக்குப் புதிய பார்வையைத் தர வல்லது. ஹருகி முரகாமியின் சிறுகதையும்
அவரது நூல் குறித்த விமர்சனமும் புதிய தேடல்களைக் கண்டடைய நினைக்கும் எழுத்தாளர்களுக்கு
புதிய தரிசனங்களைத் தரக் கூடியது.
இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் ‘புரவி’ இதழுக்குச் சந்தா செய்து
மாதா மாதம் வாசித்து கலை இலக்கியத்தின் புதிய பரிமாணங்களைக் கண்டடையலாம். சந்தா செய்வதற்கான
விவரங்கள் கீழே…
No comments:
Post a Comment