Wednesday 27 September 2023

இவர்கள் யார் என்று தெரிகிறதா?

இவர்கள் யார் என்று தெரிகிறதா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள். இவர்கள் யாரென்று தெரிகிறதா?

இவர்கள் கியாரா அத்வானி மற்றும் நந்திதா தாஸ் என்கிறீர்களா? சரிதான்.

இவர்கள் நடிகைகள் என்பது மட்டும்தான் நாம் தெரிந்திருப்பது இல்லையா?

கியாரா அத்வானி புகழ்பெற்ற நடிகை என்றாலும் இவர் பாலர் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

நந்திதா தாஸ் விருதுகளை அள்ளிக் குவிக்கும் நேர்த்தியான நடிகை என்றாலும் இவரும் ஆசிரியராக இருந்தவர். இவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ரிஷிவேலி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இனி உங்களுக்குக் கியாரா அத்வானி மற்றும் நந்திதா தாஸ் ஆகியோரைப் பார்க்கும் போது அவர்கள் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்ற நினைவு வரும்தானே!

*****

Tuesday 26 September 2023

தீபாவளி – விழா முன்பணத்திற்கான விண்ணப்பம் - 2023

தீபாவளி – விழா முன்பணத்திற்கான விண்ணப்பம் - 2023

தீபாவளி – விழா முன்பணம் பெறுவதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தின் மாதிரியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 Click Here to Download

*****

Monday 25 September 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி & எழுதிப் பழகுதல் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி & எழுதிப் பழகுதல்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி மற்றும் எழுதிப் பழகுதலுக்கான முழக்கங்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

துணிப்பை என்பது எளிதானது!

தூர எறிந்தால் உரமானது!

நெகிழி என்பது அழகானது!

வீசி எறிந்தால் விஷமானது!

*

தோல்வியின் அடையாளம் தயக்கம்!

வெற்றியின் அடையாளம் முயற்சி!

துணிந்தவர் தோற்பதில்லை!

தயங்கியவர் வென்றதில்லை!

*

யாதும் ஊரே யாவரும் கேளிர்

*

தமிழன் என்று சொல்லடா!

தலை நிமிர்ந்து நில்லடா!

*

தமிழுக்கு அமுதென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

*

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே!

*

மரம் வளர்ப்போம்!

மழை பெறுவோம்!

*

விண்ணின் மழைத்துளி!

மண்ணின் உயிர்த்துளி!

*

தலைக்கவசம் உயிர்க்கவசம்!

*

புகை நமக்குப் பகை!

குடி குடியைக் கெடுக்கும்!

*****

Sunday 24 September 2023

ஜாக் மா பற்றி தெரிந்து கொள்வோமா?

ஜாக் மா பற்றி தெரிந்து கொள்வோமா?

யார் இந்த ஜாக் மா?

அலிபாபாவின் நிறுவனர்களில் ஒருவர்தான் ஜாக் மா.

இவர் ஒரு சீனத் தொழில் அதிபர்.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டினருக்கு இலவச பயண வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.

12 டாலர் சம்பளத்திற்கு ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் வேலை தேடிய காலங்களில் இவருக்கு வேலை தர கே.எப்.சி. நிறுவனம் மறுத்திருக்கிறது. இன்று இவர் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை தரும் நிலையில் உள்ளார்.

1994இல் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஜாக் மா.

1995 இல் அமெரிக்கா சென்ற போது சீனப் பொருட்கள் இணையத்தில் இல்லாததைப் பார்த்த ஜாக் மா அதையே தமக்கான வியாபார வாய்ப்பாகப் பார்த்தார்.

1999இல் அலிபாபாவைத் தொடங்கிய 19 பேரில் இவரும் ஒருவர்.

அலிபாபா ஓர் இணைய வணிக நிறுவனம் (இ காமர்ஸ் நிறுவனம்) என்றாலும் ஜாக் மாவிற்கு இணையத்தைப் பொருத்த வரையில் இணையத்தில் தேடுவதும் மின்னஞ்சல் அனுப்புவதும் தவிர வேறு எதுவும் தெரியாது என்பது வியப்பான ஒன்றல்லவா! இன்று அலிபாபா உலகெங்கும் பிரபலமான ஓர் இணைய வணிக நிறுவனம்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது போல ஜாக் மாவின் வெற்றிக்குப் பின் இருப்பவர் அவர் காதல் மனைவியான ஷாங் யிங்.

தற்போது 25 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 63வது பெரிய பணக்காரராக உள்ளார் ஜாக் மா.

இவர் எப்போதும் தன்னிடம் எந்த வியாபாரத் திட்டமும் இல்லை என்கிறார். அதுவே தன்னுடைய வியாபார வெற்றிக்குக் காரணம் என்றும் சொல்கிறார். இது ரொம்பவே விசித்திரமான காரணம்தான் இல்லையா!

*****

Thursday 21 September 2023

மெல்ல கற்போருக்கான ஆறாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான ஆறாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday 20 September 2023

மெய்ப்பொருள் கண்டு பொய்ப்பொருளை விலக்குங்கள்! (குறள் கதைகள் – 4)

மெய்ப்பொருள் கண்டு பொய்ப்பொருளை விலக்குங்கள்!

(குறள் கதைகள் – 4)

உலை வாயை மூட முடியும். ஊர் வாயை மூட முடியுமா? எவ்வளவு அர்த்தம் பொதிந்த மொழி இது. ஒவ்வொரு சம்பவம் குறித்தும் ஊருக்கு ஒரு கருத்து உண்டாகி விடுகிறது. அதை அவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஓர் ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவருக்கு அந்த ஊரில் இருந்த ஒருவர் தினமும் பால் கொண்டு போய்க் கொடுத்தார். முனிவரைக் கண்டதும் அவருக்குள் ஊற்றெடுத்த அன்பின் காரணமாக அவர் அந்தக் காரியத்தைச் செய்தார். முனிவரும் அதைச் சந்தோஷமாக வாங்கிக் குடித்தார்.

ஒரு நாள் திடீரென அடித்த சூறைக் காற்றில் முனிவருக்குப் பால் கொடுத்தவரின் வீடு விழுந்து விட்டது. ஊரில் வேறு யாருடைய வீடும் விழவில்லை. பால் கொடுத்தவரின் வீடு மட்டும் விழுந்து விட்டது. முனிவருக்குப் பால் கொடுத்ததால்தான் அவருடைய வீடு விழுந்து விட்டதாக ஊரில் எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவரோ அதை பெரிதுபடுத்தவில்லை. முனிவர் மேல் இருந்த அன்பின் காரணமாகத்  தான் பால் கொடுத்ததாகவும் அதற்கும் வீடு இடிந்து விழுந்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று அவர் சொல்லிப் பார்த்தார். அதை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

அவருடைய வீடு இடிந்து விட்டதே. இடிந்த வீட்டை மீண்டும் கட்ட வேண்டுமே. சரி காரியத்தைப் பார்ப்போம் என்று புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரங்களைப் போட குழிகளைத் தோண்டினார். அப்போது அவருக்கு ஒரு தங்கப் புதையல் கிடைத்தது. அந்தப் புதையலைக் கொண்டு அவர் முன்பிருந்ததை விட வீட்டைப் பெரிதாக அழகாகக் கட்டிக் கொண்டு விட்டார்.

இதைப் பார்த்த ஊர்க்காரர்கள் முனிவருக்குப் பால் கொடுத்ததால்தான் அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்ததாகப் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் எதேச்சையாகத்தான் நடந்தது என்று அவர் சொல்லிப் பார்த்தார். அதையும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

மக்கள் தாங்களும் அந்த அதிர்ஷடத்தைப் பெற ஒவ்வொருவரும் முனிவருக்குப் பால் கொடுப்பதெனவும் விரைவில் சூறாவளி வந்து தங்கள் வீடும் விழுந்து தங்களுக்கும் புதையல் கிடைக்க வேண்டும் எனவும் ஆசைப்பட ஆரம்பித்தனர். விளைவு, ஒவ்வொருவரும் பால் சொம்போடு முனிவரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஊர் மக்களே திரண்டு வந்து பாலைக் கொடுத்தால், முனிவர் எவ்வளவு பாலைக் குடிப்பார்? அவரால் பாலைக் குடிக்க முடியாவிட்டாலும் குடியுங்கள் என்று மல்லுகட்ட ஆரம்பித்தார்கள். முனிவர் பார்த்தார் இது ஏது பிரச்சனையாக இருக்கிறதே, பால் குடித்தே தமக்குப் பால் ஊற்றும் படி ஆகி விடும் போலிருக்கிறதே என்று அந்த ஊரை விட்டே ஓடி விட்டார்.

இப்படித்தான் ஊர் வாய் இருக்கிறது. ஒரு துரதிர்ஷ்டம் நிகழ்ந்தால் அதற்கு ஒரு காரணம் சொல்கிறது. அதிர்ஷ்டம் நிகழ்ந்தால் அதற்கு ஒரு காரணம் சொல்கிறது. இரண்டு காரணங்களும் ஆழமான காரணங்களாக இருப்பதில்லை. மேம்போக்கான காரணங்கள். இந்த மேம்போக்கான காரணங்களை அறிவு கொண்டு யோசிக்காமல் போனால் என்ன ஆகும்? நாம் காண்பது பொய்ப்பொருளாக இருக்கும், மெய்ப்பொருளாக இருக்காது.

இதற்கு திருவள்ளுவர் ஒரு தீர்வைச் சொல்கிறார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும் என்கிறார். திருவள்ளுவர் என்ன அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.”                     (குறள், 423)

ஊர் ஆயிரம் சொல்லட்டுமே. உலகம் அதற்கு ஒத்து ஊதட்டுமே. அதனால் என்ன? நீங்கள் மெய்ப்பொருள் என்ன என்பதை வள்ளுவர் வழி நின்று காணுங்கள்.

*****

Tuesday 19 September 2023

4 & 5 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ ‘எண்ணும் எழுத்தும்’ வினாத்தாள்கள் - 2023

4 & 5 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ ‘எண்ணும் எழுத்தும்’ வினாத்தாள்கள் - 2023

நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் வினாத்தாள்களை ஒரு பக்கத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் நான்காம் வகுப்பிற்கு 35 பக்க எண்ணிக்கையிலும், ஐந்தாம் வகுப்பிற்கு 36 பக்க எண்ணிக்கையிலும் அல்லது ஒரு பக்கத்திற்கு இரு பக்கங்கள் என்ற அளவில் நான்காம் வகுப்பிற்கு 18 பக்க எண்ணிக்கையிலும், ஐந்தாம் வகுப்பிற்கு 18 பக்க எண்ணிக்கையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள தேவையான இணைப்புகளைச் சொடுக்கவும்.

நான்காம் வகுப்பிற்கான வினாத்தாள் (35 பக்கங்கள்) பெற…

 Click Here to Download

நான்காம் வகுப்பிற்கான வினாத்தாள் (18 பக்கங்கள்) பெற…

 Click Here to Download

ஐந்தாம் வகுப்பிற்கான வினாத்தாள் (36 பக்கங்கள்) பெற…

 Click Here to Download

ஐந்தாம் வகுப்பிற்கான வினாத்தாள் (18 பக்கங்கள்) பெற…

 Click Here to Download

*****

செப்டம்பர் 2023 மாத சிறார் திரைப்படம் – ‘ஹருண் அருண்’

செப்டம்பர் 2023 மாத சிறார் திரைப்படம் – ‘ஹருண் அருண்’

செப்டம்பர் 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக ‘ஹருண் அருண்’ என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குஜராத்தி மொழி திரைப்படமாகும்.

‘ஹருண் அருண்’ திரைப்படத்தை இயக்கியவர் வினோத் கணத்ரா. மனிதர்கள் உருவாக்கியிருக்கும் பாகுபாடுகளைக் கடந்து இறுதியில் அன்பே வெல்கிறது என்பதே இச்சிறார் திரைப்படத்தின் மையக்கரு ஆகும்.

இச்சிறார் திரைப்படத்தின் கதை

ஹருண் என்பவன் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியச் சிறுவன் ஆவான். அவன் தாத்தாவுடன் பாகிஸ்தானிலிருந்து ஹட்ச் பாலைவனம் வழியாக இந்தியா வரும் போது தாத்தாவிடமிருந்து வழிதவறி விடுகிறான். வழிதவறிய ஹருண் குழந்தைகள் நிறைந்த ஓர் இந்தியக் குடும்பத்தினரிடம் தஞ்சம் அடைகிறான். ஹருண் என்ற அவனது பெயரை அக்குடும்பத்தினர் அருண் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இப்படியாக ஹருண் அருணாகிறான். இதையே இயக்குநர் படத்தலைப்பாக வைத்துள்ளார்.

அருணாகி விட்ட ஹருண் தன் அன்பால் அக்குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மனதில் இடம் பிடிக்கிறான். அவன் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் என்று கண்டுபிடிக்கப்படும் போது அவனைக் கிராமத்தினர் சந்தேகிக்கின்றனர். அவர்களின் சந்தேகங்களையும் பாகுபாட்டு உணர்வுகளையும் கடந்து அன்பால் ஹருண் அனைவர் மனதையும் வெல்கிறான். இதுவே இத்திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.

குழந்தைகளின் மனம் பாகுபாடு அறியாதது, வேறுபாடுகளை உணராது என்பதை இத்திரைப்படம் உணர்வு ரீதியாகக் காட்சிப்படுத்துகிறது. இக்காட்சிப்படுத்தல் குழந்தைகளும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற உண்மையை நிறுவுகிறது. குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த மதமோ, இனமோ, சாதியோ முக்கியமில்லை, அன்பே முக்கியம் என்பதை இத்திரைப்படம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளிடம் கல்வி முறை கொண்டு சேர்க்க வேண்டிய சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் பார்த்து மகிழ்வது விரும்பத்தக்கதாகும்.

திரைப்படம் பெற்ற விருதுகள்

இத்திரைப்படம் ஆறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. அவையாவன,

1. அமைதிக்கான சிகாகோ சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விருது

2. சிறந்த இளையோருக்கான டாக்கா சர்வதேச திரைப்பட விருது

3. டிரான்ஸ் மீடியா விமர்சகர்கள் விருது

4. மனிதநேய ரிமோஸ்கி சர்வதேச திரைப்பட விழா விருது

5. இலங்கையின் ஆசிய ஒளி புத்த திரைப்பட விழா விருது

6. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஜெர்மனியின் ஆக்பர்க் குழந்தைகள் திரைப்பட விழா விருது

திரையிடலுக்குப் பின் குழந்தைகளோடு கலந்துரையாடுவதற்கான வினாக்கள்

1. இத்திரைப்படம் உங்களுக்குப் பிடித்துள்ளதா?

2. இத்திரைப்படத்தின் மையக்கருத்தாக நீங்கள் அறிவது யாது?

3. இத்திரைப்படத்தில் உங்களைக் கவர்ந்த பாத்திரம் எது?

4. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது?

5. இத்திரைப்படத்தின் கதையைச் சுருக்கமாக உங்கள் நடையில் கூற முடியுமா?

6. இத்திரைப்படத்தில் உங்களை நடிக்கச் சொன்னால் நீங்கள் எந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

7. இத்திரைப்படத்தின் முடிவு வேறு எப்படி அமைந்திருக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நன்றி!

வணக்கம்!

இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இத்திரைப்படம் குறித்த மேலதிக விவரங்களைப் பெற கீழே உள்ள காணொளியை இயக்கவும்.

*****

Monday 18 September 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லிப் பழகுதல் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லிப் பழகுதல்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லிப் பழகுதலுக்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

கரடி கருங்கரடி

கரடி பிடரி கரும் பிடரி

*

பழுத்த வாழைப்பழம்

மழையில் அழுகிக் கீழே விழுந்தது.

*

வீட்டுக்கு அருகே கோரை

வீட்டுக்கு மேல் கூரை

கூரை மேல் நாரை

*

பிட்டும் புதுப்பிட்டு

தட்டும் புதுத்தட்டு

பிட்டைக் கொட்டி விட்டுத் தட்டைத் தா.

*

அலையில் விழுந்த மீனை

வலையில் பிடித்தால் விழவில்லை

கலகலவெனச் சிரிப்பும் வரவில்லை.

*

மரக்கிளையைக் கையால் பற்றித் தொங்குகையில் கையைச் சுழற்றியதால் கீழே விழுந்தான்.

*

காற்றில் விழுந்த பழத்தில் சுவையில்லை என்று சொல்ல முடியவில்லை என்ற நினைப்பில் நண்பன் விழுந்தான் பள்ளத்தில்.

*****

Sunday 17 September 2023

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் விண்ணப்ப நிலை அறிய…

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் விண்ணப்ப நிலை அறிய…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தாங்கள் அளித்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைத் தங்களின் குடும்ப அட்டையின் எண் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

 அதை அறிந்து கொள்ள தங்களது பன்னிரண்டு எண் கொண்ட குடும்ப அட்டை எண்ணை கீழே உள்ள வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவு செய்து நீங்கள் அறிய முடியும்.

அதற்கான வழிமுறைகள் :

உங்கள் அலைபேசியில் 99529 51131 என்ற TNEGA வாட்ஸ் ஆப் எண்ணை Contactsஇல் Save செய்து கொள்ளவும்.

உங்கள் வாட்ஸ் ஆப்பிற்குச் சென்று அந்த எண்ணுக்கு Hi என்ற செய்தியை அனுப்பவும்.

நீங்கள் Hi என்ற செய்தியைப் பதிவு செய்த உடன் உங்களது ரேஷன் கார்டு எண்ணைப் பதிவு செய்ய சொல்லி உங்களுக்கு செய்தி வரும்.

உங்கள் ரேஷன் கார்டு எண்ணைப் பதிவு செய்து Send செய்தால் உங்களது விண்ணப்பநிலை குறித்து Eligible அல்லது In-Eligible என்ற விவரம் உங்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கிடைத்து விடும்.

இப்பயனுள்ள தகவலை அனைவரும் பயன்பெற பகிரவும்.

நன்றி!

வணக்கம்!

*****

ஆகஸ்ட் 2023 – சிறார் திரைப்படம் – நிலா

ஆகஸ்ட் 2023 – சிறார் திரைப்படம் – நிலா

ஆகஸ்ட் 2023 ஆம் மாதத்திற்குப் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய சிறார் திரைப்படமாக ‘நிலா’ என்ற சிறார் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் ஞாநி என்ற எழுத்தாளர் எழுதி, இயக்கிய திரைப்படமாகும். அவர் தனது ஞானபாநு என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் வெகுஜனப் பரப்பில் நன்கு அறியப்பட்ட நடிகரான நாசர் அரசராக நடித்துள்ளார். நாடகக் கலையைப் பள்ளிகள் தோறும் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் வேலு சரவணன் கோமாளியாக நடித்துள்ளார். மற்றும் பலர் இளவரசி, மருத்துவர், அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிலவைக் கேட்கும் இளவரசியின் ஆசையை அரசர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் மையம் ஆகும்.

இளவரசி கயல்விழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. மருத்துவர் வருகிறார். இளவரசியைப் பரிசோதித்த மருத்துவர் அவரின் ஆசையை நிறைவேற்றினால் நோய் சரியாகும் என்கிறார். இளவரசியோ தன்னுடைய ஆசையாகத் தனக்கு வானில் இருக்கும் நிலா வேண்டும் என்கிறார்.

இளவரசியின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்கிறார் அரசர். அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர், கோமாளி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கிறார். அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோர் சொல்லும் ஆலோசனைகள் அரசருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக அவர் கோமாளியின் யோசனையை ஏற்கிறார். கோமாளியின் யோசனையின் படி இளவரசியிடமே அவரது ஆசையை எப்படி நிறைவேற்றுவது எனக் கேட்கலாம் என முடிவாகிறது.

கோமாளி இளவரசியிடம் பேசுகிறார். இளவரசி சொன்னபடி வான் நிலவைத் தங்கத்தில் சிறிய வடிவில் செய்து அதை கழுத்தில் அணியும் ஆபரணத்தில் அமைத்துக் கொண்டு வந்து கொடுத்து ஆசையை நிறைவேற்றுகிறார்.

இளவரசியின் ஆசையை நிறைவேற்றிய பின் அரசருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. வானில் இரவு நிலவு வருவதை இளவரசி பார்த்தால் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த நிலா எது என்று கேள்வி கேட்பாளோ என்ற அச்சம் அரசரை ஆட்கொள்கிறது.

மீண்டும் இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர் மற்றும் கோமாளியின் உதவியை நாடுகிறார். வழக்கம் போலவே அரசருக்கு அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோரின் யோசனைகள் சரியாகப் படவில்லை. கோமாளியின் யோசனைப்படி இச்சந்தேகத்திற்கான தீர்வை இளவரசியிடம் பேசி அறிந்து கொள்வது என்ற முடிவை ஏற்றுக் கொள்கிறார்.

ஒரு பல் விழுந்தால் இன்னொரு பல் முளைப்பதைப் போல, ஒரு பூவைப் பறித்தால் இன்னொரு பூ பூப்பதைப் போல வானில் ஒரு நிலவை எடுத்தால் இன்னொரு நிலவு முளைத்து விடும் என்று அரசரின் சந்தேகத்தைத் தீர்ப்பதைப் போல இளவரசி கோமாளியிடம் அதற்கு ஒரு தீர்வைச் சொல்கிறார்.

இப்படியாகக் கோமாளி இந்த முறையும் இளவரசியோடு உரையாடி அரசரின் சந்தேகத்தைப் போக்கும் தீர்வைத் தருகிறார். அரசர் மகிழ்கிறார்.

குழந்தைகளின் பிரச்சனைகளுக்குக் குழந்தைகளின் மனநிலையில் யோசிக்கும் போதுதான் தீர்வுகள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் இக்கதை, குழந்தைகளின் பிரச்சனைகளுக்குப் பெரியவர்களின் மனநிலையில் யோசித்தால் தீர்வு கிடைக்காது என்பதையும் அழுத்தமாக முன் வைக்கிறது. குழந்தைகளிடம் உரையாடினால் அவர்களது பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதையும் இச்சிறார் திரைப்படம் எடுத்துச் சொல்லி குழந்தைளுடனான உரையாடல் பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது.

குழந்தைகள் விரும்பும் வகையில் இக்கதை அமைக்கப்பட்டிருப்பதும், பாடல் மற்றும் பின்னணிகள் அமைந்திருப்பதும் இச்சிறார் திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இத்திரைப்படம் குறித்த விளக்க காணொளியினைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://youtu.be/m7ladptO4aI?si=4Vd7n8n5zxc21Zml

*****

Thursday 14 September 2023

மெல்ல கற்போருக்கான ஐந்தாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான ஐந்தாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday 13 September 2023

தேர்தல் பணிக்கான படிவம் - 2024

தேர்தல் பணிக்கான படிவம் - 2024

2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்புடைய நிர்வாக அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய தேர்தல் பணிக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday 12 September 2023

ஜெப் பெசோஸ் பற்றி அறிந்து கொள்வோமா?

ஜெப் பெசோஸ் பற்றி அறிந்து கொள்வோமா?

யார் இந்த ஜெப் பேசோஸ்?

உங்களுக்கு அமேசான் பற்றி தெரியும் என்றால் உங்களுக்கு ஜெப் பெசோஸ் பற்றித் தெரியாமல் இருக்காது.

அமேசானை நிறுவியர் ஜெப் பேசொஸ்.

ஆரம்பத்தில் இணைய வழியில் புத்தகம் விற்கும் நிறுவனமாக ஆரம்பித்து இன்று அமேசான் விற்காத பொருட்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. இப்படி ஒரு நிலையை உருவாக்கியவர்தான் அமேசானை உருவாக்கிய ஜெப் பெசோஸ்.

ஜெப் பெசோஸ் பிறந்த போது அவரது தாய்க்கு வயது 17. திருமணமான ஒன்றரை வருடங்களில் அவரது தாயார் கணவரைப் பிரிந்தார். இவரைக் கைக்குழந்தையாகச் சுமந்து கொண்டே அவரது தாயார் கல்லூரி படிப்பை முடித்தார். இதெல்லாம் ஜெப் பெசோஸ் வாழ்க்கையில் நடந்த போராட்டம் மற்றும் சாதனை அத்தியாயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

படிக்கும் காலத்திலயே ஜெப் பெசோஸ் மெக் டொனால்ட் உணவகத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றியிருக்கிறார். கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்து பணம் சம்பாதித்திருக்கிறார்.

இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர்.

படிப்பை முடித்து வால் ஸ்ட்ரீட்டில் நிதி நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஒரு நிதி நிறுவனத்தில் இளம் வயதிலேயே துணைத் தலைவர் ஆகியும் அந்த வேலையை விட்டு விட்டு அமேசான் நிறுவனத்தைத் தொடங்கித் தனது 35வது வயதில் அதாவது 1999இல் பில்லியனர் ஆனார். அப்படியானால் இவர் பிறந்தது எப்போது என்கிறீர்களா? நீங்களே கணக்கிட்டுப் பாருங்களேன். இவர் பிறந்தது 1964இல்.

2021 இல் இவர்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். அப்போது அவரது சொத்தின் மதிப்பு 181 பில்லியன் டாலர்.

தற்போது அவரது சொத்தின் மதிப்பு 157 பில்லியன் டாலர். உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இருக்கிறார்.

புதுமையான சிந்தனைகளும் அச்சிந்தனைகளின் வழி மக்களின் தேவைகளை நிறைவு செய்தலும் ஒருவரைப் பணக்காரர் ஆக்கும் என்பதற்கு ஜெப் பெசோசின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம். ஆம்! இன்று அமேசான் அதே அளவோடு நின்று விடாமல் அமேசான் பிரைம், அமேசான் மியூசிக் என்று அமேசான் விரிந்து கொண்டே இருக்கிறது அல்லவா!

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

Monday 11 September 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான பொருள் வேறுபாடு அறிய வேண்டிய சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான பொருள் வேறுபாடு அறிய வேண்டிய சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான பொருள் வேறுபாடு அறிய வேண்டிய சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

ஒலி                -           சத்தம்

ஒளி                -           வெளிச்சம்

பள்ளி             -           கல்விக்கூடம்

பல்லி             -           உயிரினம்

காலை           -           பொழுது

காளை           -           விலங்கு

வெல்லம்      -           இனிப்புப் பொருள்

வெள்ளம்      -           மழை வெள்ளம்

அரிய              -           அரிதான பொருள்

அறிய             -           அறிதல்

மரம்               -           தாவரம்

மறம்              -           வீரம்

பலம்              -           வலிமை

பழம்              -           கனி

அரம்              -           கருவி

அறம்             -           தர்மம்

அலகு                        -           அளவீடு / உறுப்பு

அழகு             -           கவர்ச்சி

கழி                 -           நீங்குதல்

கலி                 -           மிகையான

களி                 -           உண்பண்டம்

பலி                -           தியாகம்

பழி                 -           பாவம்

வலி                -           வேதனை

வழி                -           பாதை

வளி                -           காற்று

விழி               -           கண்விழி

விளி               -           அழைத்தல்

வேலை         -           உழைப்பு

வேளை         -           பொழுது

தோல்                        -           உடலின் மேற்பகுதி

தோள்                        -           தோள்பட்டை

பனி                -           மார்கழி மாதத்துப் பனி

பணி               -           வேலை

*****