தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லிப் பழகுதல் பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான சொல்லிப் பழகுதலுக்கான சொற்றொடர்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
கரடி கருங்கரடி
கரடி பிடரி கரும் பிடரி
*
பழுத்த வாழைப்பழம்
மழையில் அழுகிக் கீழே விழுந்தது.
*
வீட்டுக்கு அருகே கோரை
வீட்டுக்கு மேல் கூரை
கூரை மேல் நாரை
*
பிட்டும் புதுப்பிட்டு
தட்டும் புதுத்தட்டு
பிட்டைக் கொட்டி விட்டுத்
தட்டைத் தா.
*
அலையில் விழுந்த மீனை
வலையில் பிடித்தால் விழவில்லை
கலகலவெனச் சிரிப்பும் வரவில்லை.
*
மரக்கிளையைக் கையால் பற்றித்
தொங்குகையில் கையைச் சுழற்றியதால் கீழே விழுந்தான்.
*
காற்றில் விழுந்த பழத்தில்
சுவையில்லை என்று சொல்ல முடியவில்லை என்ற நினைப்பில் நண்பன் விழுந்தான் பள்ளத்தில்.
*****
No comments:
Post a Comment