ஜாக் மா பற்றி தெரிந்து கொள்வோமா?
யார் இந்த ஜாக் மா?
அலிபாபாவின் நிறுவனர்களில்
ஒருவர்தான் ஜாக் மா.
இவர் ஒரு சீனத் தொழில் அதிபர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக
வெளிநாட்டினருக்கு இலவச பயண வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.
12 டாலர் சம்பளத்திற்கு ஆங்கில
ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவர் வேலை தேடிய காலங்களில்
இவருக்கு வேலை தர கே.எப்.சி. நிறுவனம் மறுத்திருக்கிறது. இன்று இவர் பல்லாயிரக்கணக்கானோருக்கு
வேலை தரும் நிலையில் உள்ளார்.
1994இல் ஒரு மொழிபெயர்ப்பு
நிறுவனத்தைத் தொடங்கினார் ஜாக் மா.
1995 இல் அமெரிக்கா சென்ற
போது சீனப் பொருட்கள் இணையத்தில் இல்லாததைப் பார்த்த ஜாக் மா அதையே தமக்கான வியாபார
வாய்ப்பாகப் பார்த்தார்.
1999இல் அலிபாபாவைத் தொடங்கிய
19 பேரில் இவரும் ஒருவர்.
அலிபாபா ஓர் இணைய வணிக நிறுவனம்
(இ காமர்ஸ் நிறுவனம்) என்றாலும் ஜாக் மாவிற்கு இணையத்தைப் பொருத்த வரையில் இணையத்தில்
தேடுவதும் மின்னஞ்சல் அனுப்புவதும் தவிர வேறு எதுவும் தெரியாது என்பது வியப்பான ஒன்றல்லவா!
இன்று அலிபாபா உலகெங்கும் பிரபலமான ஓர் இணைய வணிக நிறுவனம்.
ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண் இருப்பார் என்பது போல ஜாக் மாவின் வெற்றிக்குப் பின் இருப்பவர் அவர் காதல்
மனைவியான ஷாங் யிங்.
தற்போது 25 பில்லியன் டாலர்
சொத்து மதிப்புடன் உலகின் 63வது பெரிய பணக்காரராக உள்ளார் ஜாக் மா.
இவர் எப்போதும் தன்னிடம்
எந்த வியாபாரத் திட்டமும் இல்லை என்கிறார். அதுவே தன்னுடைய வியாபார வெற்றிக்குக் காரணம்
என்றும் சொல்கிறார். இது ரொம்பவே விசித்திரமான காரணம்தான் இல்லையா!
*****
No comments:
Post a Comment