Tuesday 12 September 2023

ஜெப் பெசோஸ் பற்றி அறிந்து கொள்வோமா?

ஜெப் பெசோஸ் பற்றி அறிந்து கொள்வோமா?

யார் இந்த ஜெப் பேசோஸ்?

உங்களுக்கு அமேசான் பற்றி தெரியும் என்றால் உங்களுக்கு ஜெப் பெசோஸ் பற்றித் தெரியாமல் இருக்காது.

அமேசானை நிறுவியர் ஜெப் பேசொஸ்.

ஆரம்பத்தில் இணைய வழியில் புத்தகம் விற்கும் நிறுவனமாக ஆரம்பித்து இன்று அமேசான் விற்காத பொருட்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. இப்படி ஒரு நிலையை உருவாக்கியவர்தான் அமேசானை உருவாக்கிய ஜெப் பெசோஸ்.

ஜெப் பெசோஸ் பிறந்த போது அவரது தாய்க்கு வயது 17. திருமணமான ஒன்றரை வருடங்களில் அவரது தாயார் கணவரைப் பிரிந்தார். இவரைக் கைக்குழந்தையாகச் சுமந்து கொண்டே அவரது தாயார் கல்லூரி படிப்பை முடித்தார். இதெல்லாம் ஜெப் பெசோஸ் வாழ்க்கையில் நடந்த போராட்டம் மற்றும் சாதனை அத்தியாயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

படிக்கும் காலத்திலயே ஜெப் பெசோஸ் மெக் டொனால்ட் உணவகத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றியிருக்கிறார். கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்து பணம் சம்பாதித்திருக்கிறார்.

இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர்.

படிப்பை முடித்து வால் ஸ்ட்ரீட்டில் நிதி நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஒரு நிதி நிறுவனத்தில் இளம் வயதிலேயே துணைத் தலைவர் ஆகியும் அந்த வேலையை விட்டு விட்டு அமேசான் நிறுவனத்தைத் தொடங்கித் தனது 35வது வயதில் அதாவது 1999இல் பில்லியனர் ஆனார். அப்படியானால் இவர் பிறந்தது எப்போது என்கிறீர்களா? நீங்களே கணக்கிட்டுப் பாருங்களேன். இவர் பிறந்தது 1964இல்.

2021 இல் இவர்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். அப்போது அவரது சொத்தின் மதிப்பு 181 பில்லியன் டாலர்.

தற்போது அவரது சொத்தின் மதிப்பு 157 பில்லியன் டாலர். உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இருக்கிறார்.

புதுமையான சிந்தனைகளும் அச்சிந்தனைகளின் வழி மக்களின் தேவைகளை நிறைவு செய்தலும் ஒருவரைப் பணக்காரர் ஆக்கும் என்பதற்கு ஜெப் பெசோசின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம். ஆம்! இன்று அமேசான் அதே அளவோடு நின்று விடாமல் அமேசான் பிரைம், அமேசான் மியூசிக் என்று அமேசான் விரிந்து கொண்டே இருக்கிறது அல்லவா!

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment