Sunday, 30 April 2023

மைல், காதம், யோசனை பற்றி அறிந்து கொள்வோமா?

மைல், காதம், யோசனை பற்றி அறிந்து கொள்வோமா?

தற்போது மீட்டர், கிலோ மீட்டர் அளவுகள் புழக்கத்தில் வந்து விட்டன. இருந்த போதும் மைல், காத தூரம், யோசனை தூரம் என்ற அளவுகளில் தூரங்களைக் குறிப்பிடும் வயதானப் பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் மைல், காத தூரம், யோசனை தூரம் போன்றவை எவ்வளவு தூர அளவைக் குறிப்பன என்பதை அறிந்து கொள்வோமா?

1 இஞ்ச்

2.54 சென்டி மீட்டர்

1 சென்டி மீட்டர்

0.3937 இஞ்ச்

1 மைல்

1.6 கிலோ மீட்டர்

1 கிலோ மீட்டர்

0.625 மைல்

1 முழம்

2 சாண்

1 பாகம்

4 முழம்

1 காதம்

6000 பாகம்

1 யோசனை

4 காதம்

1 டவுன்சிப்

30 சதுர மைல்

*****

Wednesday, 26 April 2023

நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரிப் படிவம்

நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரிப் படிவம்

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துத் தேர்ச்சி ஒப்புதல் பெறுவதற்கான 2022 – 2023 கல்வியாண்டுக்கான நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கைக்கான மாதிரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி மதிப்பெண் மற்றும் தரநிலைப் படிவம் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்குத் தனியாகவும், நான்கு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குத் தனியாகவும் பக்கத்திற்கு நான்கு மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரநிலையைப் பதிவு செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான பிரதிகள் கூடுதலாக அச்சிட்டுக் கொள்ளவும்.

மாதிரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரிப் படிவம்

தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மாதிரிப் படிவம்

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துத் தேர்ச்சி ஒப்புதல் பெறுவதற்கான 2022 – 2023 கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கைக்கான மாதிரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி மதிப்பெண் மற்றும் தரநிலைப் படிவம் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்குத் தனியாகவும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்குத் தனியாகவும் பக்கத்திற்கு நான்கு மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரநிலையைப் பதிவு செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான பிரதிகள் கூடுதலாக அச்சிட்டுக் கொள்ளவும்.

மாதிரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday, 25 April 2023

உங்கள் பத்திரம் உங்கள் பெயரில் இருக்கிறதா?

உங்கள் பத்திரம் உங்கள் பெயரில் இருக்கிறதா?

உங்கள் பத்திரம் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். அது ஒரு வழி.

மற்றொரு வழி இதற்கென இருக்கும் இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இதற்கென தமிழக அரசின் இணையதளம் ஒன்று இருக்கிறது. அதே நேரத்தில் இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் வாங்க இருக்கும் இடத்தின் பத்திரம் அந்த உரிமையாளர் பெயரில்தான் இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் ஓர் இடத்தின் பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவும். இதற்கென உள்ள இந்த இணையதளத்தில் சென்று ‘ஆவணம் வாரியாக’ என்பதைத் தெரிவு செய்து, அந்த இடத்திற்கான சார் பதிவாளர் அலுவலகம், பத்திர எண், பதிவு செய்த வருடம் ஆகிய மூன்று விவரங்களையும் கொடுத்தால் அந்த இடம் யார் பெயரில் பதியப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnreginet.gov.in/portal/

*****

Monday, 24 April 2023

வகுப்பறை நகைச்சுவைகள்

வகுப்பறை நகைச்சுவைகள்

வகுப்பறையில் நிகழும் நகைச்சுவைகளுக்கு அளவில்லை. இந்த நகைச்சுவைகள் வகுப்பறை நினைவுகளை அழியாத நினைவுகளாக்கி விடுகின்றன. காலந்தோறும் சொல்லி சொல்லி மகிழத்தக்கனவாய் இருக்கின்றன. வாசித்தவற்றுள் அப்படிச் சில வகுப்பறை நகைச்சுவை நிகழ்வுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

வகுப்பறையில் முதல் நாள் நுழைந்ததும் ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக எழுந்து பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

ஒரு மாணவர் வீர ராகவ சொக்கலிங்க நரசிம்மன் என்று தன்னுடைய பெயரைச் சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய பெயரை எப்படிச் சுருக்கமாகக் கூப்பிடுவது என்று யோசித்த ஆசிரியர் அம்மாணவரிடமே உன்னுடைய பெயரை வீட்டில் எப்படிக் கூப்பிடுவார்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மாணவர் தூரத்தில் இருந்தால் சத்தமாகக் கூப்பிடுவார்கள், பக்கத்தில் இருந்தால் மெதுவாகக் கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியருக்குச் சிரிப்பு வராத குறைதான். தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு பாடத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் குறித்த பாடத்தை நடத்துவதற்கான தயாரிப்போடு வந்திருந்த அவர் பாடத்தைத் துவக்கும் விதமாக மாணவர்களைப் பார்த்து, இரண்டாம் உலகப்போர் ஏன் நடந்தது தெரியுமா என்ற வினாவை எழுப்பியிருக்கிறார்.

அந்த வினாவைக் கேட்டதும் வீரராகவசொக்கலிங்கநரசிம்மன் என்ற அந்த மாணவரே எழுந்திருந்திருக்கிறார். ஆசிரியர் சொல் பார்ப்போம் என்றிருந்திருக்கிறார்.

முதல் உலகப் போர் சரியாக நடந்திருக்காது, அதைச் சரியாக நடத்துவதற்காகத்தான் இரண்டாம் உலகப் போர் நடந்திருக்கிறது என்றிருந்திருக்கிறார்.

அன்றைய வகுப்பு இவ்வளவு நகைக்சுவையோடு அமையும் என்பதை எதிர்பாராத ஆசிரியர் அதை அனுபவித்துக் கொண்டே அன்றைய பாடத்தை நடத்தியிருக்கிறார். இந்த அனுபவங்களை அவர் என்றும் மறக்காமல் பலரிடம் சொல்லிச் சொல்லியும் மகிழ்ந்திருக்கிறார்.

உங்களுக்கு இந்த நகைச்சுவைச் சம்பவங்கள் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறோம். மற்றவர்களும் மகிழ இதைப் பகிருங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

*****

Sunday, 23 April 2023

சர்வேயில் பயன்படும் செயின் பற்றி அறிவோமா?

சர்வேயில் பயன்படும் செயின் பற்றி அறிவோமா?

சர்வேயர்கள் நிலங்களை அளக்க செயினைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயினில் 100 வளைய இணைப்புக் கம்பிகள் இருக்கும். இந்த இணைப்பை லிங்க் என்பார்கள். 100 லிங்க் இணைந்து ஒரு செயினை உருவாக்கும்.

இந்தச் செயினின் நீளம் 20 மீட்டர் ஆகும். அடி கணக்கில் பார்த்தால் 66 அடி ஆகும்.

இந்த செயினைக் கொண்டு ஒரு சதுரத்தை அமைத்தால் அதன் பரப்பு 400 சதுர மீட்டர். சதுர அடியில் பார்த்தால் 4356 சதுர அடி ஆகும். இப்பரப்பு 10 சென்ட் அளவைக் குறிக்கும். இதிலிருந்து ஒரு சென்ட் பரப்பைப் பத்தால் வகுத்துப் பெற்றால் 435.6 சதுர அடி ஆகும். 10 சென்ட் அளவுக்கான 4356 சதுர அடியை 10 ஆல் பெருக்கினால் 43560 சதுர அடி கிடைக்கும். இப்பரப்பே ஒரு ஏக்கர் என்பதாகும்.

இந்தச் செயினைச் சங்கிலி என்றும் குறிப்பிடுவர். அதாவது ஒரு செயின் அல்லது சங்கிலி என்றால் 20 மீட்டர் அல்லது 66 அடியைக் குறிக்கும்.

ஒரு செயினைப் பத்தால் பெருக்கினால் 200 மீட்டர் அல்லது 660 அடி கிடைக்கும். இதுவே ஒரு பர்லாங் என்று புழக்கத்தில் உள்ள அளவாகும்.

*****

Thursday, 20 April 2023

குழந்தைகள் பற்றி கலீல் ஜிப்ரான் என்ன சொல்கிறார் தெரியுமா?

குழந்தைகள் பற்றி கலீல் ஜிப்ரான் என்ன சொல்கிறார் தெரியுமா?

குழந்தைகள் பற்றிய கலீல் ஜிப்ரானின் கீழே காணும் வரிகள் கல்வி உலகில் ரொம்ப பிரபலமானது. இந்த வரிகள் அவர் எழுதிய ‘தீர்க்கதரிசி’ எனும் நூலில் இடம் பெற்றுள்ள வரிகள் ஆகும். இவ்வரிகளை மேற்கோள் காட்டாத கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள், குழந்தை நல விரும்பிகள் அநேகமாக உலகில் இருக்க மாட்டார்கள் என அடித்துச் சொல்லலாம். இனி குழந்தைகள் பற்றிய அவரின் வரிகளைக் காண்போம் வாருங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்லர்;

அவர்கள் இயற்கையின் குழந்தைகள்.

உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி

உங்களிடமிருந்து அல்ல.

உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும்

உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்

உங்கள் எண்ணங்களை அல்ல.

அவர்களுக்கென்று தனித்த சிந்தனைகள் உண்டு.

அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தர முடியும்;

ஆன்மாக்களுக்கு அல்ல.

அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை

அங்கே நீங்கள் செல்ல முடியாது

உங்கள் கனவுகளிலும் கூட.

அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம்,

ஆனால் அவர்களை உங்களைப் போல ஆக்கி விடாதீர்கள்.

வாழ்க்கை பின்னோக்கிச் செல்லாது; நேற்றுடன் உடன்படாது.

நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.

அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிக்காது

அம்பை எது எய்துகிறதோ அதுதான் தீர்மானிக்கும்

அம்பை எய்துவது இயற்கையே! நீங்கள் அல்லர்,

நீங்கள் வெறும் வில்தான்!

*****

Wednesday, 19 April 2023

மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான வகுத்தல் மற்றும் கூட்டல் கலந்த கணித விநோதங்கள்

மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான

வகுத்தல் மற்றும் கூட்டல் கலந்த கணித விநோதங்கள்

மெல்ல மலரும் கணித மாணவர்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களில் திறன் பெறச் செய்வது கணித ஆசிரியரின் அடிப்படைக் கடமையும் பொறுப்பும் ஆகும்.

கணித அடிப்படைச் செயல்களில் திறன் பெற வழக்கமான கணக்குகளைக் கொடுப்பதை விட வினோதங்கள் அடங்கிய கணக்குகளைக் கொடுக்கும் போது மெல்ல மலரும் மாணவர்களின் கணித ஆர்வம் தூண்டப்படும்.    

அவ்வகையில் வகுத்தலும் கூட்டலும் கலந்த இக்கணித வினோத கணக்குகளை மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான பயிற்சியாக வழங்கலாம்.

111 ÷ (1 + 1 + 1)  = 37

222 ÷ (2 + 2 + 2)  = 37

333 ÷ (3 + 3 + 3)  = 37

444 ÷ (4 + 4 + 4)  = 37

555 ÷ (5 + 5 + 5)  = 37

666 ÷ (6 + 6 + 6)  = 37

777 ÷ (7 + 7 + 7)  = 37

888 ÷ (8 + 8 + 8)  = 37

999 ÷ (9 + 9 + 9)  = 37

•••••

Tuesday, 18 April 2023

கோடைத் தாகத்தைத் தணித்துக் கொள்வது எப்படி?

கோடைத் தாகத்தைத் தணித்துக் கொள்வது எப்படி?

கோடைக்காலத்தின் தாகத்தைத் தண்ணீர் கொண்டு தணித்துக் கொள்வதே சரியானது ஆகும். அதுவும் குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ந்த நீராக அல்லாமல் இயல்பான தண்ணீராக இருப்பதே உடலுக்கு உகந்தது ஆகும்.

குளிர்ந்த நீர்தான் வேண்டும் என்றால் மண்பானை நீரைப் பருகலாம்.

தணிக்க முடியாத தாகத்தை வெதுவெதுப்பான வெந்நீரைக் குடித்துத் தணித்துக் கொள்ளலாம், நெருப்பை நெருப்பால் அணைப்பது போல. ஆனால் குளிர் நீரைக் கொண்டு தணிக்க முற்படாமல் இருப்பது எப்போதும் நல்லது.

கொளுத்தும் இந்தக் கோடையில் ஐந்து லிட்டர் வரை கூட ஒருவர் தண்ணீர் அருந்தலாம். அதற்கு மேலும் பருகலாம். இதனால் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக் கல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

வெளியில் செல்லும் சூழ்நிலைகளில் கையுடன் பையில் இரண்டு புட்டிகளில் நீரையும் எடுத்துக் கொள்ளலாம். ஒன்றில் நீரையும் இன்னொன்றில் நீராகாரத்தையும் எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது ஆகும்.

சாலையாரக் கடைகளில் உண்பது என்றால் இளநீர் மற்றும் நுங்கை மட்டும் பருகலாம், உண்ணலாம்.

இரசாயன குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை மற்றும் நாரத்தை பானகங்களை வஞ்சனையின்றிப் பருகலாம்.

வாய்ருசிக்காக நொறுக்குத் தீனிகள் உண்பதை விடுத்து தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, சாத்துகுடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை உண்ணலாம்.

காலை உணவாக தயிர் கலந்த பழஞ்சோறு உடல் சூட்டைத் தணிப்பதுடன் வயிறு செரிமானம் தொடர்பான கோளாறுகளையும் குறைக்கும் என்பதால் கோடை முடியும் வரை வாரத்திற்குச் சில நாட்களாவது இவ்வகை காலை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளின் ஒரு வேளை உணவை நீர் மிகுந்த கஞ்சி உணவாக எடுத்துக் கொள்வதும் வயிற்று வேக்காலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். நாளொரு சிறுதானியக் கஞ்சியாகவும் ஒருவேளை உணவை அமைத்துக் கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் வெயிலில் அலைவதைத் தவிர்க்க முடியாதவர்கள் குளிர்ந்த நீரையும் ரசாயன குளிர் பானங்களையும் தவிர்த்துக் கொண்டு, தண்ணீரையும் இயற்கையான குளிர்பானங்களையும் பழங்களையும் பருகினாலே கோடையை இயல்பாகவும் இனிமையாகவும் எதிர்கொள்ளலாம்.

•••••

Monday, 17 April 2023

உங்கள் கிரெடிட் ஸ்கோர் சொல்வதென்ன?

உங்கள் கிரெடிட் ஸ்கோர் சொல்வதென்ன?

தற்போதைய கால கட்டத்தில் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு சிபில் கிரெடிட் ஸ்கோரைப் பின்பற்றுகின்றன. ஒருவரின் வருமானம், கடன், கடனைத் திருப்பிச் செலுத்திய கடந்த கால செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த சிபில் கிரெடிட் ஸ்கோரானது கணக்கிடப்படுகிறது.

பொதுவாக இந்த கிரெடிட் ஸ்கோர் 300 இல் துவங்கி 900 வரை வழங்கப்படுகிறது. இதில் உங்களது கிரெடிட் ஸ்கோர் 300 லிருந்து 550 வரை இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமான நிலையில் இருப்பதாக அர்த்தம். இதுபோன்ற கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்கு வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் கடன் வழங்க ரொம்பவே யோசிக்கும். இதன் விளைவாகக் கடன் வழங்குவது மறுக்கப்படலாம் அல்லது கடன் வழங்கப்பட்டாலும் மிக அதிக வட்டியில் வழங்கப்படலாம்.

551 லிருந்து 750 வரையுள்ள கிரெடிட் ஸ்கோர் எனில் அது சரசாரி கிரெடிட் ஸ்கோர் ஆகும். இது போன்ற கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்குக் கடன் வழங்க வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் ஆழ்ந்த பரிசீலனை செய்யும். அதிலும் 650க்குக் கீழே கிரேடிட் ஸ்கோர் உள்ளோருக்குக் கடன் வழங்கத் தயங்கும். 651க்கு மேலே கிரேடிட் ஸ்கோர் உள்ளோருக்கே கடன் வழங்குவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் தீவிரமாகப் பின்பற்றிக் கடன் வழங்க முடியுமா எனப் பார்க்கும். பொதுவாகச் சராசரி கிரெடிட் ஸ்கோர் என்றால் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவது என்பது அசாத்தியமாகும். தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களுமே சற்றுக் கூடுதலான வட்டியில் கடன் வழங்கும்.

750க்கு மேல் உள்ள கிரேடிட் ஸ்கோரே நல்ல ஸ்கோராகும். இத்தகு கிரெடிட் ஸ்கோர் உள்ளோருக்குப் பிணையில்லாமல் கூட வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் கடன் வழங்க தயாராக இருக்கும். அடிக்கடி தொலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்களில் கடன் வழங்க தயாராக இருப்பதாகக் கூறும். பொதுத்துறை வங்கிகளில் தாராளமாகக் கடன் கிடைக்கும். இது போன்ற நிலைமைகளில் நீங்கள் கடனுக்கான வட்டியைக் குறைத்து வாங்குவதற்குக் கூட கிளை மேலாளர்களிடம் பேரம் பேச முடியும்.

தற்போது உங்களது கிரெடிட் ஸ்கோரை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஜி-பேயில் உங்களுக்குக் கணக்கு இருந்தால் அந்த செயலியே உங்கள் கிரெட்டி ஸ்கோரைக் கணித்துக் கூறி விடும். அல்லது ஒரு வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று நீங்கள் அணுகினாலே அவர்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணித்துக் கூறி விடுவார்கள்.

உங்கள் வருமானம் நிலையாகவும், கடன் குறைவாகவும், முதலீடுகள் அதிகமாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய வரலாறும் இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

எப்போதோ வாங்கிய கடனில் நீங்கள் தவணை தவறியிருந்தாலும், தவறிய தவணைகளுக்கு அபராதம் செலுத்தியிருந்தாலும் அது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கவே செய்யும் என்பதை எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

*****

Sunday, 16 April 2023

மரக்கால் குறித்த அளவீடுகளை அறிவோமா?

மரக்கால் குறித்த அளவீடுகளை அறிவோமா?

மரக்கால் என்பது நெல், பயிறு, உளுந்து போன்ற தானிய மற்றும் பருப்பு வகைகளை அளக்கப் பயன்படும் அளவீடு செய்ய உதவும் பொருள். இன்று கிலோ எனும் அளவீடு புழக்கத்தில் வந்து விட்டதால் மரக்கால் அளவுகளைப் பலரும் பயன்படுத்துவதில்லை. கிராமங்களில் விவசாய நிலங்களில் மரக்கால் முக்கியமான ஓர் அளவீட்டுக் கருவியாகும். மரக்கால் குறித்த அளவீடுகளை இங்கே கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.

1 நாழி

¼ மரக்கால்

1 குறுணி

1 மரக்கால்

1 பதக்கு

2 மரக்கால்

1 முக்குறுணி

3 மரக்கால்

1 பக்கா

2 படி

1 மரக்கால்

4 படி

1 பறை

6 மரக்கால்

1 கலம்

12 மரக்கால்

1 மூட்டை

24 மரக்கால்

1 மூட்டை

2 கலம்

1 மூட்டை

4 பறை

1 உறை

60 மரக்கால்

1 ஹோக்

10 மரக்கால்

*****

Thursday, 13 April 2023

வருமான வரிக்கழிவுகள் / வரிச்சலுகைகள் - 2024

வருமான வரிக்கழிவுகள் / வரிச்சலுகைகள் - 2024

வருமான வரித் திட்டமிடலை நிதியாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே திட்டமிட்டுக் கொள்வது பயனுள்ளதாகும். இதனால் மாதந்தோறும் கட்ட வேண்டிய வருமான வரித் தொகையைக் கணக்கிட்டு அதன்படி மாதந்தோறும் தவணைகளைச் செவ்வனே செலுத்தி வர இயலும். இப்படிச் செலுத்துவது பிப்ரவரி மாதத்தில் வருமான வரி செலுத்தும் போது சுலபத்தையும் எளிமையையும் உணர வைக்கும்

வருமான வரித் திட்டமிடலில் வரிக்கழிவுகள் எனப்படும் வரிச்சலுகைகள் முக்கியமானவை. பழைய வருமான வரி முறை மற்றும் புதிய வருமான வரி முறைக்கான வரிக்கழிவுகள் அல்லது வரிச்சலுகைகள் பற்றிக் கீழே உள்ள அட்டவணை மூலமாக ஒப்பிட்டு அறிந்து கொள்வோம். இது குறித்த அறிதல் வருமான வரிக்கான திட்டமிடலில் இரண்டு முறைகளிலும் கணக்கிட்டு உங்களுக்கு உகந்த முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உங்களுக்குப் பெரிதும் உதவும்.

பழைய வருமான வரி முறைக்கான வரிச்சலுகைகள்

புதிய வருமான வரி முறைக்கான வரிச்சலுகைகள்

நிரந்தரக் கழிவு ரூ.50,000/-

நிரந்தரக் கழிவு ரூ.50,000/-

வீட்டு வாடகைப்படிச் சலுகை

பிரிவு 51 IIA குடும்ப ஓய்வூதிய வருமானக் கழிவு ரூ.15,000/- வரை

80C சலுகைகள் ரூ.1,50,000/- வரை

Ø போது சேமநல நிதி (பி.பி.எப்.)

Ø ஊழியர் சேமநல நிதி (இ.பி.எப்.)

Ø தன்விருப்பு சேமநல நிதி (வி.பி.எப்.)

Ø மூன்றாண்டு கால வரிச்சேமிப்புக்கான பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு (இ.எல்.எஸ்.எஸ்)

Ø 5 ஆண்டு நிரந்த வைப்பு (எப்.டி.)

Ø செல்வமகள்

Ø தேசியச் சேமிப்பு பத்திரம்

Ø கல்விக் கட்டணம்

80CCD (2) தேசிய ஓய்வூதிய முறைமையில் நிறுவனத்தின் பங்களிப்பு

80CCD (1B) ரூ.50,000 தேசிய ஓய்வூதிய முறைமை (என்.பி.எஸ்.) பணியாளரின் பங்களிப்பு

அலுவலகச் சுற்றுலா, போக்குவரத்து, பணிமாற்றம், தினசரி படி போன்ற சலுகை

80D மருத்துவக் காப்பீட்டுத் தொகை

வரிதாரருக்கு ரூ.25,000/-

பெற்றோருக்கு ரூ.25,000/- (60 வயதுக்குள்), ரூ.50,000/- (60 வயதுக்கு மேல்)

மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்துச் சலுகைப்படி

24B வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சம் வரையில்

10 (10C) பிரிவின்படி விருப்ப ஓய்வு பணம்

80DDB மருத்துவச் செலவு

10 (10) பிரிவின்படி பணிக்கொடை

80E கல்விக்கடனுக்கான வட்டிச் செலுகை

10 (10AA) பிரிவின்படி விடுப்பு சலுகைப்படிகள்

80EEA வீட்டுக்கடன் கூடுதல் வட்டி ரூ.1.5 லட்சம் வரை

கடனில் வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை

80EEB மின்சார வாகனக் கடன் வட்டி ரூ.1.5 லட்சம் வரை

80G அறக்கட்டளை நன்கொடை

உணவுச்சலுகை ரூ.25,000/- வரை

தொழில் வரி

விடுமுறை கால பயணப்படி (எல்.டி.ஏ.) மற்றும் இதர அலுவலகச் சலுகைகள்

*****