சூப்பர் மூனைப் பார்க்க வேண்டுமா? இன்று பாருங்கள்!
நீங்கள் சூப்பர் மூனைப் (Super Moon) பார்த்திருக்கிறீர்களா?
அதென்ன சூப்பர் மூன் (Super Moon) என்கிறீர்களா?
அதுதான் மிகப்பெரிய நிலவு.
அப்படியானால் நிலவு சிறிதாகவா
இருக்கிறது என்கிறீர்களா?
நிலவு எந்த அளவில் இருக்கிறதோ
அந்த அளவில்தான் இருக்கிறது. அந்த நிலவை நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது மிகப்
பெரிதாகத் தெரிவது சூப்பர் மூன் நிகழ்கின்ற நாளில்தான்.
சூப்பர் மூன் நாளில் மட்டும்
நிலவு எப்படிப் பெரிதாகத் தெரிகிறது என்று கேட்கிறீர்களா?
பூமியைச் சுற்றி வரும் நிலவு
பூமிக்கு அருகில் வரும் நாளில் பெரிதாகத் தெரியும். அப்படி தெரியும் நிலவைத்தான் நாம்
சூப்பர் மூன் என்கிறோம்.
சூப்பர் மூனன்று நிலவு பெரிதாகத்
தெரியும் என்கிறீர்களே! அப்படி எவ்வளவு பெரிதாகத் தெரியும் என்றுதானே கேட்கிறீர்கள்?
வழக்கமாகப் பௌர்ணமியில் காட்சியளிக்கும் நிலவை விட 8 மடங்கு நிலவு பெரிதாகத் தெரியும்.
இந்தச் சூப்பர் மூன் (Super Moon) நிகழ்வானது வருடத்தில் குறிப்பிட்ட
மாதங்களில் நிகழ்கிறது.
ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர்
மூன் தோன்றும் நிகழ்வு இந்த மாதத்தில்தான் நிகழ்கிறது. அதுவும் இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில்
ஒன்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் ஒன்றும் தோன்ற இருக்கிறது.
ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர்
மூன்கள் தோன்றுவது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்றும் ஆகஸ்ட்
30லும் நிகழ இருக்கிறது. இந்த அரிய நிகழ்வு இதற்கு முன் டிசம்பர் 2009 இல் அதாவது ஒரே
மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் தோன்றின.
அடுத்ததாக இதே போன்ற அரிய
நிகழ்வைக் காண நாம் ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2032இல்தான் இவ்வரிய நிகழ்வானது
அதாவது ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் தோன்றும் நிகழ்வானது நிகழும்.
அது சரி இந்த சூப்பர் மூனை
இன்று எப்போது பார்க்கலாம் என்கிறீர்களா?
இன்றிரவு நள்ளிரவுக்குப்
பின் நீங்கள் சூப்பர் மூனைப் பார்க்கலாம். அடுத்ததாக இம்மாத இறுதியில் அதாவது ஆகஸ்ட்
30 இல் சூப்பர் மூனைப் பார்க்கலாம்.
இன்று நள்ளிரவுக்குப் பின்
தோன்றும் சூப்பர் மூனைப் பாருங்கள். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும்
பகிர்ந்து அவர்களையும் காணச் செய்யுங்கள். கண்டபின் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
/ விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment