வெற்றிக்கு வயது ஒரு தடையா?
எந்த வயதிலும் வெற்றி பெறலாம்!
கே.எப்.சி. (KFC) என்பதன்
விரிவாக்கம் என்ன தெரியுமா?
கெண்டகி பிரைட் சிக்கன் என்பதாகும்.
இது கோழிக்கறி உணவிற்கான ஒரு துரித உணவுக்கடை ஆகும்.
இந்தக் கே.எப்.சி.யை நிறுவியர்
யார் தெரியுமா?
ஹால்லேண்டு என்பவர்.
வெற்றி பெறுவதற்கு வயது ஒரு
தடையல்ல என்பதை நிரூபித்தவர் இவர்.
எந்த வயதில் வேண்டுமானால்
முயற்சி செய்து எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதற்கும் உதாரணம் இவர்.
முயலாமை எனும் ஒரு தடையில்லாவிட்டால்
எந்த வயதிலும் நீங்கள் வெற்றி பெறலாம் என்பதை கே.எப்.சி. உருவாக்கிய ஹார்லேண்டைப் பார்த்து
நாம் கற்றுக் கொள்ளலாம்.
கே.எப்.சி. எனும் துரித உணவு
கோழிக்கறிக் கடையைத் தொடங்கிய போது ஹார்லெண்டுக்கு வயது என்ன தெரியுமா?
அப்போது நாற்பது வயது அவருக்கு.
அதற்குப் பிறகு தனது வியாபாரத்தைத்
தொடங்கி அதை உலகளாவிய சாம்ராஜ்ஜியமாக பெரிது பண்ணியிருக்கிறார் அவர்.
வெற்றி வேண்டும் என்பவர்களுக்கு
வயது ஒரு தடையில்லை. வாய்ப்புகள் அமையாமல் இருப்பதும் ஒரு தடையில்லை. எந்த வயதில் முயன்றாலும்
எப்படியும் வெற்றி பெறலாம்.
வெற்றி பெறுவதற்கான ஒரே வழி
மீண்டும் மீண்டும் முயற்சிப்பதுதான் என்கிறார் எடிசன். இதற்கு அவரே ஒரு நல்ல உதாரணம்.
மின்சார பல்பில் இருக்கும் ஒளி இழையை உருவாக்க அவர் பல நூறு ஆய்வுகளைச் செய்து பார்த்தார்.
மிகப் பெரிய வெற்றியை அடைந்த பலரும் வெற்றிக்கான தகுதியாக முயற்சியை மட்டுமே சொல்கின்றனர்.
மேலும் வெற்றிக்கு உதவும்
ஒரு சூத்திரம் என்னவென்றால் G + H என்பதாகும்.
G என்பது Goal
H என்பது Habit
வெற்றிக்கு ஓர் இலக்கு வேண்டும்.
அத்துடன் அந்த இலக்கை நோக்கிய
பழக்கம் வேண்டும்.
இந்தப் பழக்கம் என்பதை ஒழுக்கம்
என்றும் சொல்லலாம்.
இலக்கு மற்றும் பழக்கம் என்ற
இந்த இரண்டும் இருந்து விட்டால் வெற்றி என்பது தொட்டு விடும் தூரம்தான்.
இந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தித்தான்
வெற்றியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேலே நாம் பார்த்த எடிசனிலிருந்து ஹார்லேண்டு
வரை வெற்றிக்கான சூத்திரம் என்னவென்றால் விடா முயற்சியும் விடா முயற்சியைப் பழக்கமாகக்
கொள்ளும் வழக்கமும்தான். இலக்கை நோக்கிய முயற்சி உங்களது பழக்கமாக இருந்தால் நீங்கள்
எதிலும் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
*****
No comments:
Post a Comment