அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க 30,041 பணியிடங்கள்
நாடு முழுவதும் அஞ்சல் துறையில்
30,041 கிராம அஞ்சல் பணிக்கு விண்ணபிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கான
தேர்வு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. வேறெந்த எழுத்துத்
தேர்வோ அல்லது நேர்காணலோ இப்பணியிடங்களுக்கு நடத்தப்படுவதில்லை.
30,041 பணியிடங்களில் தமிழ்நாட்டில்
மட்டும் 2,994 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடங்களின்
பெயர்கள் :
கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM)
ஊதியம் : ரூ. 12,000 முதல்
29,380 வரை.
உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant
Branch Postmaster - ABPM / Dak Sevak)
ஊதியம் : ரூ. 10,000 முதல்
24,470/- வரை
கல்வித் தகுதி
:
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு
அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் ஆகிய
பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர்
மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்
அஞ்சல்துறை துறை சாராத சேவை
அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள்
நிரப்பப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை,
படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான
சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது.
(Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the
regular civil service)
வயது வரம்பு
:
குறைந்தபட்ச வயது : 18 (விண்ணப்பங்கள்
சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
அதிகபட்ச வயது : 40 (விண்ணப்பங்கள்
சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்),
பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்)
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்
விண்ணப்பக்
கட்டணம் :
அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த
பெண்கள், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/
மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த
தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும்
முறை :
இந்த பதவிக்கான விண்ணப்ப
செயல்முறை இணைய வழி (ஆன்லைன்) மூலமாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள்
விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு
மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இணையவழி (ஆன்லைன்) விண்ணப்ப
படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம்
மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க
கடைசி நாள் :
23.08.2023
விண்ணப்பிக்க மற்றும் இதர
விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment