இசட் பிரிவு பாதுகாப்பு பெறும் ஒரே தொழிலதிபர் யார் தெரியுமா?
உங்களுக்கு இந்தியாவில் இசட்
பிரிவு பாதுகாப்பு பெறும் ஒரே தொழிலதிபர் யாரென்று தெரியுமா?
டாட்டாவா?
பிர்லாவா?
அதானியா?
அவர் யாரென்றால் அம்பானி.
முகேஷ் திருபாய் அம்பானி.
இப்பெயரின் சுருக்கத்தால்
எம்.டி.ஏ. (MDA) என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் திருபாய் அம்பானி மற்றும் கோகிலா
பென்னின் மூத்த மகன். 1957 இல் பிறந்தவர்.
மும்பையில் வேதியியலில் பொறியியல்
(Chemical Engineering) படித்தவர். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை
வியாபார மேலாண்மை (MBA) படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு குடும்ப வியாபாரத்திற்குள்
குதித்தவர்.
இவர் மனைவியின் பெயர் நீட்டா.
இவரை இவருக்கு அறிமுகப்படுத்தியதே இவரது தந்தையான திருபாய் அம்பானிதான். 1984 இல் இவர்களின்
திருமணம் நடந்தது.
2002இல் திருபாய் அம்பானியின்
மறைவுக்குப் பின் அவரது சொத்துகளை இவரும் இவரது தம்பி அனில் அம்பானியும் பிரித்துக்
கொண்டனர்.
பெட்ரோலியம், எரிவாயு, வேதியியல்
பிரிவுகளை முகேஷ் அம்பானி பிரித்துக் கொண்டார்.
நிதி மற்றும் தொலைதொடர்பு
சார்ந்த பிரிவுகளை அனில் அம்பானி பிரித்துக் கொண்டார்.
இச்சொத்துப் பிரிப்புக்குப்
பின் இவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. முன்பு போல
வளர்ச்சி இருக்காது என்று சிலரால் கணிக்கப்பட்டது. அப்படியே வளர்ச்சி இருந்தாலும் அனிலின்
வளர்ச்சி அதிகமாகவும் முகேஷினி வளர்ச்சி குறைவாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட அனில் அம்பானி திவாலானார். முகேஷ் அம்பானி மிகப்பெரிய வளர்ச்சி
பெற்றார்.
இன்றும் இந்தியாவின் மிகப்
பெரிய தனியார் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமே விளங்குகிறது.
முகேஷின் சாதனை எப்படிப்பட்டது
என்றால் 2007 இல் ஒரு லட்சம் கோடியாக இருந்த சொத்து மதிப்பை ஏழு மடங்கு கிட்டதட்ட ஏழு
லட்சம் கோடியாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.
ரிலையன்ஸ் பிரிப்பிற்குப்
பின் சில்லரை வர்த்தகம் (Retail), ஜியோ தொலைதொடர்பு (TeleCommunication), ஜியோ நிதிச்
சேவைகள் (Financial Services) போன்றவற்றைப் புதிததாகத் தொடங்கி இப்போதும் சவால் விடும்
முதன்மையான தொழிலதிபராகவே இருந்து வருகிறார் முகேஷ்.
திருபாய் அம்பானி எட்டடி
பாய்ந்தால் முகேஷ் அம்பானி பதினாறு அடி பாயும் வியாபாரத்தின் புலியாக இருக்கிறார் என்றால்
அது மிகையில்லை என்றுதான் நினைக்கிறேன். அவரது மற்றொரு மகனான அனில் அம்பானிதான் இதில்
சறுக்கி விட்டார்.
*****
No comments:
Post a Comment