Sunday, 31 March 2024

கணிதப் பாடத்தைப் படிப்பதற்கான சிறப்பான அணுகுமுறைகள்!

கணிதப் பாடத்தைப் படிப்பதற்கான சிறப்பான அணுகுமுறைகள்!

கணிதப் பாடத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கீழ்வகுப்புகளில் கற்றுக் கொண்டு விசயம் மேல் வகுப்பிற்கும் தேவைப்படுவதுதான். மேல்வகுப்பிற்குச் சென்றதும் கீழ்வகுப்புப் பாடங்களை மறந்து விட முடியாது. அடிப்படையான விசயங்களை மேலே மேலே கற்றுக் கொண்டுப் போவதுதான் கணிதப் பாடம்.

மேல் வகுப்புக்குச் செல்லும் போது கீழ்வகுப்புக் கணிதப் பாடங்களை மீள்பார்வை செய்ய வேண்டும். கணிதம் என்பது தொலைக்காட்சித் தொடர் போன்றது. அவற்றை ஒவ்வொரு நாளும் பார்த்து நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் ஆசிரியர் கணக்குப் பாடம் எடுக்கும் போது படிநிலைகள் நன்றாகப் புரிந்தாலும் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நாட்கள் கழிந்தப் பிறகு அந்தக் கணக்குகள் புதியதாகத் தோன்றும்.

கணித வீட்டுப்பாடங்களை பள்ளி இடைவேளை நேரத்தில் செய்து பார்க்க வேண்டும். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து செய்தால் மிகவும் நல்லது. சந்தேகம் வரும் போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

சூத்திரங்களை மனப்பாடம் செய்வதுடன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எப்படி கேள்வி கேட்டாலும் சூத்திரங்களைப் பயன்படுத்திக் கணக்கைச் செய்ய முடியும்.

கணக்கின் படிநிலைகளைச் செய்வது என்பது தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது போன்றது. நன்றாகப் பழகி விடும் போது சுலபமாகி விடும். இடைவெளி விடாமல் தொடர்ந்து செய்வது நல்ல பலனளிக்கும்.

கணிதத்தை அமைதியாக, கவனமாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

கணக்குகளை எழுதிப் படிப்பதுதான் அதாவது போட்டுப் பார்த்து பயிற்சி செய்வதுதான் எப்போதும் சிறந்த முறையாகும்.

கணிதப் பாடத்தைச் சிறப்பாகப் படிக்க விரும்புபவர்கள் மேற்படி நுணுக்கங்களையும் கருத்துகளையும் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுவது நல்ல பலனளிக்கும்.

*****

Saturday, 30 March 2024

மூன்றாம் பருவத் தேர்வுகள் – புதிய அட்டவணை

மூன்றாம் பருவத் தேர்வுகள் – புதிய அட்டவணை

முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான அட்டவணை

02.04.2024      - தமிழ்

03.04.2024      - English

05.04.2024      - கணிதம்

நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான அட்டவணை

02.04.2024      - தமிழ்

03.04.2024      - English

05.04.2024      - கணிதம்

22.04.2024      - அறிவியல்

23.04.2024      - சமூகவியல்

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அட்டவணை

02.04.2024      - தமிழ்

03.04.2024      - English

04.04.2024      - உடற்கல்வி

05.04.2024      - கணிதம்

22.04.2024      - அறிவியல்

23.04.2024      - சமூகவியல்

குறிப்பு:

1,2,3,6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

4,5, 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

*****

Thursday, 28 March 2024

ஏழாம் வகுப்பு – கணக்கு – திருப்புதல் தேர்வு

ஏழாம் வகுப்பு – கணக்கு – திருப்புதல் தேர்வு

            ஏழாம் வகுப்பு, கணக்குப் பாடத்திற்கான திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday, 27 March 2024

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

தமிழக அரசுக் கல்லூரிகளில் 4000 விரிவுரையாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 28.03.2024 அன்றிலிருந்து இணைய வழியில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 29.04.2024 வரை இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். உத்தேச தேர்வு தேதியாக 04.08.2024 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf

*****

ஆறாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

ஆறாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

            ஆறாம் வகுப்பு, கணக்குப் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

ஏழாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

ஏழாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

            ஏழாம் வகுப்பு, கணக்குப் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல் – மாதிரி வினாத்தாள்

எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல் – மாதிரி வினாத்தாள்

            எட்டாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday, 26 March 2024

எட்டாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

எட்டாம் வகுப்பு – கணக்கு – மாதிரி வினாத்தாள்

            எட்டாம் வகுப்பு, கணக்குப் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

எட்டாம் வகுப்பு – தமிழ் – மாதிரி வினாத்தாள்

எட்டாம் வகுப்பு – தமிழ் – மாதிரி வினாத்தாள்

            எட்டாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday, 25 March 2024

அடைவுத் தேர்வு – பிப்ரவரி 2024 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

அடைவுத் தேர்வு – பிப்ரவரி  2024 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

பிப்ரவரி 2024 இல் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

ஆறாம் வகுப்பிற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கோப்பு

 Click Here to Download

ஏழாம் வகுப்பிற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கோப்பு

 Click Here to Download

எட்டாம் வகுப்பிற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கோப்பு

 Click Here to Download

*****

வாக்களிப்பதற்கான 12 வகையான அடையாளச் சான்றுகள்!

வாக்களிப்பதற்கான 12 வகையான அடையாளச் சான்றுகள்!

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்களிப்பதற்கான முக்கியமான அடையாள ஆவணமாகும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க இயலும். 12 வகையான அடையான ஆவணங்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை யாவை என்பதை கீழே உள்ள படத்தில் காணவும்.

*****

தேர்தல் வரைபடம் – Election Flow Chart 2024

தேர்தல் வரைபடம் – Election Flow Chart 2024

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வரைபடத்தினை அறிந்து கொள்வதன் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தலுக்கான அடுத்தடுத்த செயல்முறைகள் மற்றும் எந்த உறையில் எந்தெந்த ஆவணங்கள், படிவங்களை வைக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள இவ்வரைபடத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Sunday, 24 March 2024

நல்ல மாணவர்களின் பண்புகள் என்னவென்று தெரியுமா?

நல்ல மாணவர்களின் பண்புகள் என்னவென்று தெரியுமா?

நல்ல மாணவர் ஒருவர் தான் படிப்பது என்பது பெற்றோர்களுக்காகவோ, கௌரவத்திற்காகவோ அல்ல, தமக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார். நேர்மையாகப் படித்து முன்னேறுவதில் ஆர்வம் காட்டுவார்.

படிப்பது என்பது காலத்தைக் கழிப்பதற்கு அல்ல, அது காலத்தை ஆக்கப்பூர்வமாக அமைத்துக் கொள்வதற்கு என்பதை உணர்ந்திருப்பார்.

படித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்றில்லாமல் நன்றாகப் படித்தால் பணம் தானாக வந்து சேரும் என்பதையும் கருத்தில் கொண்டிருப்பார்.

மேலும் நல்ல மாணவருக்கான பண்புகள் பல உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

பாடம் கேட்கும் போது குறிப்பெடுத்துக் கொள்வது. குறிப்பெடுத்துக் கொள்வதில் நான்கு நுட்பங்கள் உள்ளன. இவற்றை 4R என்கின்றனர். அதாவது,

Recording – சொன்னபடி எழுதிக் கொள்வது

Reducing – வீட்டிற்கு வந்ததும் செப்பனிட்டுக் கொள்வது

Reciting – குறிப்புகளை மனதில் ஏற்றிக் கொள்வது

Reviewing – தேர்வுக்கு முன்பாக ஒரு முறை பார்த்துக் கொள்வது.

பாடத்தின் முக்கிய கருத்துகளை அடிக்கோடிட்டுக் கொள்வது.

பாடத்தைப் படிக்க SQRW என்ற நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அதாவது,

Survey – பாடம் முழுவதையும் தலைப்பு, உட்தலைப்பு, படங்கள், வரையறைகள், விளக்கங்கள் என்கிற வகைபாட்டில் ஒரு கழுகுப் பார்வை பார்த்துக் கொள்வது.

Questions – பாடங்களைப் பார்க்கும் போதும் படிக்கும் போதும் கேட்கும் போதும் ஏற்படும் சந்தேகங்களைக் கேள்விகளாக எழுதிக் கொள்வது.

Read and Reread – பாடத்தைப் படிப்பது, விவாதித்துக் கொண்டு மீண்டும் படிப்பது.

Write – படித்தப் பாடத்தை உங்களுக்குப் புரிந்து வகையில் எழுதிக் கொள்வது. இது போன்ற நுட்பங்களை அறிந்து கொண்டு அவற்றைப் படிப்பில் பயன்படுத்துவது ஒரு நல்ல மாணவரின் பண்பாகும்.

ஒரு பாடத்தைக் குறைந்தபட்சம் அரை மணி நேரம் படிப்பது.

பாடத்தை சில முறை திரும்ப திரும்ப படிக்க தயாராக இருப்பது. தேவையேற்படின் பல முறை படித்துப் புரிந்து கொள்ளவும் தயாராக இருப்பது.

தொடர்ந்து படிக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்துக் கொண்டு படிப்பது.

அன்றன்று படிக்க வேண்டியதைத் திட்டமிட்டுக் கொண்டு படிப்பது.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாகக் கருத்தூன்றிக் கேட்பது. அது எப்படியென்றால் ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதிக்கும் போது ஸ்டெத்தாஸ்கோப் ஓசையினைக் கூர்ந்து கவனித்துக் கேட்பதைப் போல இருக்க வேண்டும்.

சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது.

முக்கியமான பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது.

நல்ல ஆலோசனைகளைத் தேடிப் பெற்றுக் கொள்வது அவற்றை செயல்முறைப்படுத்துவது.

உணவு, தூக்கம் போன்றவற்றில் அக்கறையோடு இருப்பது. புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளோடு காய்கறிகள் மற்றும் பழங்களையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக நினைவாற்றல் நன்றாக இருப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

கடினமான பாடங்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படிப்பது.

தேர்வுக்கு முன்பாகவே தயாராக இருப்பது.

நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரோடு பழகவும் பேசவும் நேரம் ஒதுக்கிக் கொள்வது.

ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை அமைத்துக் கொள்வது.

சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது அல்லது விளையாடுவது.

நாள்தோறும் செய்தித்தாள் படிப்பது, வாரம் ஒரு நூலகப் புத்தகத்தைப் படிப்பது.

பழைய வினாத்தாள்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றில் உள்ள வினாக்களுக்கு மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பது.

படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சியை நிறுத்தி விடுவது.

தேர்வு முடியும் வரை அலைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது.

தேர்வில் கேட்கப்படுகின்ற கேள்விகள் அனைத்தும் படித்த புத்தகத்திலிருந்துதான் வரப் போகின்றன என்ற உண்மையை உணர்ந்து தேர்வுகளைப் பதற்றமில்லாமல் பக்குவமாக எதிர்கொள்வது.

இப்பண்புகளைப் படிப்படியாக ஒரு மாணவர் வளர்த்துக் கொள்ளும் போது அவர் நல்ல மாணவராகி விடுகிறார்.

*****

Friday, 22 March 2024

வாக்காளர் எண்ணின் பாகம் எண், வரிசை எண் அறிய…

வாக்காளர் எண்ணின் பாகம் எண், வரிசை எண் அறிய…

உங்களது வாக்காளர் எண்ணின் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை அறிய கீழே குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைய இணையதள இணைப்பிற்குச் செல்லுங்கள்.

இத்தளத்தில்

Search by EPIC என்பதைத் தேர்வு செய்து

அதில்

Select Language ஐத் தேர்வு செய்து

Your EPIC Number என்ற இடத்தில் உங்களது வாக்காளர் எண்ணைப் பதிவு செய்து

Select Your State என்பதில் உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து

கொடுக்கப்பட்டிருக்கும் Captcha Code ஐ Enter Captcha என்ற இடத்தில் பதிவு செய்து

Search என்பதைச் சொடுக்குங்கள்.

தற்போது உங்களது வாக்காளர் எண்ணின் பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்கள் திரையில் தோன்றும். மேலும் View Details என்பதைச் சொடுக்கி தங்களது வாக்காளர் விவரங்களை முழுமையாகப் பாருங்கள்.

இதற்காக நீங்கள் செல்ல வேண்டிய இணையதள இணைப்புக்குக் கீழே சொடுக்கவும்.

 https://electoralsearch.eci.gov.in/

*****

Thursday, 21 March 2024

தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தபால் வாக்கினைப் பெற…

தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தபால் வாக்கினைப் பெற…

தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்கள் தங்களது தபால் வாக்கை விடுபடாமல் செலுத்த வேண்டுமானால் முதல் நாள் தேர்தல் பயிற்சி அன்றே தேர்தல் பயிற்சி மையத்திலேயே,

1. தேர்தல் பணி ஆணையின் நகல்,

2. வாக்காளர் அடையாள அட்டையின் நகல்,

3. ஆதார் அட்டையின் நகல்

ஆகியவற்றோடு தங்களது பாகம் எண் & வரிசை எண் ஆகியவற்றை உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கவும். இப்படிச் சரியாகச் செய்வதன் மூலமாக இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பிலோ அல்லது அதற்கு முன்பாகவோ தபால் வாக்கினைப் பெற்று இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே ஓட்டளிக்கும் அறைக்குச் சென்று அங்குள்ள வாக்குப் பெட்டியில் தங்கள் தபால் வாக்கினைச் செலுத்தலாம். இதனால் தேர்தல் பணியாற்றும் அனைவரும் தங்களது வாக்கினைத் தபால் வாக்கு மூலம் செலுத்தி 100 சதவீத ஜனநாயக் கடமையை ஆற்ற முடியும்.

*****

முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை

முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான

ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை

முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2, 2024 இல் தொடங்கி ஏப்ரல் 12, 2024 இல் நிறைவு பெறுகின்னறன. அதற்கான தேர்வு கால அட்டவணை :

முதல் வகுப்பு வரை ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை :

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை :

முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு கால அட்டவணை :

*****

Wednesday, 20 March 2024

மாணவர்களுக்குப் பில் கேட்ஸ் சொல்லும் 11 ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?

மாணவர்களுக்குப் பில் கேட்ஸ் சொல்லும் 11 ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?

உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பில்கேட்ஸ். தற்போது உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பவர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கிய பில்கேட்ஸ் பணத்தைக் குவித்ததுடன், கேட்ஸ்- மிலின்டா அறக்கட்டளை மூலமாக மனித குலத்துக்குச் சேவை செய்தும் வருபவர்.

அவர் தம் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்களைப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் எடுத்துச் சொன்னார்.

பள்ளி மாணவர்களுக்காகப் பில் கேட்ஸ் சொன்ன 11 ரகசியங்களை இங்கே காண்போம்.

1.

வாழ்க்கை ஒரு பூப்பாதை அல்ல. சமுதாயம் நீங்கள் நினைக்கின்றபடி இருக்காது. பிரச்சனைகள் வரும் போது சோர்ந்து விடக் கூடாது.

எத்தனை முறை விழுந்தோம் என்பதை விட எத்தனை முறை எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நாட்டில் நல்லதுக்கு இடமில்லை என்று முணுமுணுப்பதை விட செய்ய முடிந்த நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

2.

ஒவ்வொருவருக்கும் தன்மானம் முக்கியம். அது அளவுக்கதிகமாகிக் கர்வமாக மாறி விடக் கூடாது. கர்வம் பேரிடியைக் கொண்டு வரும்.

தன்னைக் கௌரவித்துக் கொள்வதைப் போலவே சமுதாயத்தையும் கௌரவித்து முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.

3.

பள்ளிப் படிப்பை முடிக்காமல் லட்சங்களில் புரளலாம் என்றும், பெரிய பெரிய பதவிகளை அடையலாம் என்று கனவு காணாதீர்கள்.

4.

பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படாதீர்கள். அதுவும் ஒரு பாடமே.

வாழ்க்கையில் நிறைய பேர் நமக்குத் தெரியாமலேயே பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றனர். அது எப்போது, எப்படி, எந்த மாதிரியாகப் பயன்படும் என்பது இப்போது தெரியாது.

5.

நீங்கள் படிக்கின்ற சூழ்நிலை அனுகூலமாக இல்லையென்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள் என்றும், வீட்டுச் சூழ்நிலைகள் என்றும், காலம் சேர்ந்து வரவில்லை என்றும் பிரமையில் விழாதீர்கள்.

எந்த மாதிரியான எதிர்மறையான சூழ்நிலைகளானாலும் அவற்றைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திச் சாதனைகளைச் செய்தவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

6.

உங்களை வளர்த்ததில் எதிர்கொண்ட சிரமங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் சிறிது கசப்புணர்வை உணர்ந்திருக்கலாம். அந்தக் கசப்புணர்வை அவர்கள் சில பொழுதுகளில் வெளிப்படுத்தவும் செய்யலாம். அதற்காக அவர்களை வெறுக்காதீர்கள். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

7.

படிப்பதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சிறிய வேலைகளைச் செய்வதை அசிங்கமாகவோ, அவமானமாகவோ நினைக்காதீர்கள். உங்கள் படிப்பிற்காக உங்கள் பெற்றோரை அதிகம் செலவு செய்ய வைக்காதீர்கள். சிறு சிறு வேலைகள் மூலமாகச் சம்பாதித்து உங்கள் படிப்புச் செலவுகளைச் சமாளிக்கப் பாருங்கள்.

8.

பள்ளியில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தேர்வில் தோற்றவர்கள் வாழ்க்கையில் உயர முடியாது என்று எந்தத் தத்துவமும் கிடையாது.

தேர்ச்சி பெறும் வரை தேர்வுகளை எழுதுங்கள். அது வாழ்க்கையில் விடா முயற்சியை அதிகரிக்கும்.

9.

படிப்பில் பருவங்கள், விடுமுறைகள் இருப்பதைப் போல வாழ்க்கையில் இருக்காது. வாழ்க்கையில் தினமும் தேர்வுகளே. அந்தத் தேர்வுகளைச் சந்தோசமாக எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையில் விடுமுறை என்பதே கிடையாது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் அதுதான் மனதிற்கு ஓய்வு.

10.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. படிக்கும் காலத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது திரைப்படங்களைப் பார்த்து அதைப் போன்று காலத்தைக் கடத்த நினைக்கக் கூடாது.

நிஜ வாழ்க்கையில் நினைத்தபடி நினைத்தது நடக்காது. அதற்காகக் கஷ்டப்பட்டு சிறிய சிறிய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

11.

படிக்கும் காலத்தில் நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல உறவுகளை வைத்துக் கொள்ளுங்கள். யாருடனும் சண்டையிடாதீர்கள். ஏனென்றால் எதிர்காலத்தில் யார் யாருக்குக் கீழே வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரியாது. அனைவரிடமும் நன்றாகப் பழகுங்கள்.

பில்கேட்ஸ் மேற்படி கூறிய விசயங்கள் பிடித்திருந்தால் அவற்றை உடனே அமல்படுத்துங்கள்.

எல்லாம் நினைத்தபடி நடந்தால் உங்களுடைய ஆசிரியருக்கு நன்றி கூறுங்கள். இந்தப் பாடங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுப்பது ஆசிரியரே. ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தினால்தான் மனிதர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

*****

எந்த வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க…

எந்த வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க…

ஒரு சில வேலைகளைத் தங்களால் செய்ய முடியவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எத்தனை பேர்?

உண்மையில் மனிதர்களால் செய்து முடிக்க முடியாத வேலையும் இருக்கிறதா என்ன?

எந்த வேலையாக இருந்தாலும் எவராலும் செய்து முடிக்க முடியும். அது எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க முடியும். அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க முடியும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் சோம்பலை ஒழித்துக் கட்ட வேண்டும்.

சோம்பலை ஒழிப்பதற்குத் தள்ளிப்போடும் பழக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.

தள்ளிப்போடுதலை ஒழித்துக் கட்ட வேலைகளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உடனடியாக வேலையைத் துவங்கி விட வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்ட வேலையின் பகுதிகளைச் செய்து முடித்துக் கொண்டே வர வேண்டும். அப்படி செய்து கொண்டிருந்தால் மிகப்பெரிய வேலையும் விரைவில் முடிந்து விடும். இவ்வளவு பெரிய வேலையா என்று எந்த வேலையைப் பார்த்தும் மலைப்பு தோன்றாது. பெரிய வேலை என்று எந்த வேலையையும் தள்ளிப் போடவும் தோன்றாது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது. அதாவது 1440 நிமிடங்கள் உள்ளன. அதாவது 86400 வினாடிகள் உள்ளன. இவற்றை நாம் அந்தந்த நாளிலேயே பயன்படுத்தியாக வேண்டும். இவற்றைச் சேமித்து வைக்கவோ, மறுநாள் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று தள்ளி வைக்கவோ முடியாது.

ஆகவே ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியையும் தள்ளிப் போடாமல், வீணாக்காமல் அந்தந்தப் பொழுதிலேயே வேலைகளைச் செய்ய பயன்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் உங்களால் எந்த வேலையையாவது தள்ளிப் போட முடியுமா என்ன?

இனி எந்த வேலையையும் தள்ளிப் போட மாட்டீர்கள்தானே? வேலையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்தானே?

*****