Sunday 12 July 2020

பொறுமை எனும் பொன்னான மருந்து

மனதோடு வீசும் மென்காற்று :
பொறுமை எனும் பொன்னான மருந்து
எல்லா பிரச்சனைக்கும் ஒரே மருந்து பொறுமை
பொறுமை ஒரு பக்கவிளைவில்லாத மருந்து
இந்த ஒரு மருந்திருந்தால்
வாழ்க்கைக்கு வேறெந்த மருந்தும் தேவையில்லை
ஒரு மருந்தில் எல்லா பிரச்சனைகளும்
குணமாகும் பொன்னா மருந்துதான் பொறுமை.

சோதனைகள் என்பவை சுழலைப் போல
கீழே வைத்து அழுத்தும்.
சோதனைகள் என்பவை புதைகுழியைப் போல
மெலெழ முயன்றால் கீழே இழுக்கும்.
சோதனைகளைக் கடந்து மெலெழ வேண்டுமா?
பொறுமை எனும் பொன்னான மருந்தைப் பயன்படுத்துங்கள்!
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது பொறுமை
பொறுமை என்பது வாழ்வின் பெருமை!

அலைகள் அடித்துக் கொண்டேதான் இருக்கும்
கரைகள் எப்போதும் அமைதியாகவே இருக்கும்
காற்று வீசிக் கொண்டேதான் இருக்கும்
மரங்கள் எப்போதும் அமைதியாய் அசைந்து கொண்டே இருக்கும்
அந்த மரத்தைப் போல, கரையைப் போல இருங்கள்.
ஆம்!
கடற்கரையைப் போல இருங்கள்!
அலைகள் மோதினாலும் ஆர்பரித்தாலும்
கரை எப்போதும் அமைதியாகவே இருக்கிறது.

உலகில் யாரையும் விட சிறந்தவராக
உங்களுக்கு விருப்பம்தானே?
அப்பிடி ஆகி விடவும் பேராசைத்தானே?
நினைப்பது முடியும்.
நினைப்பது நடக்கும்.
எல்லாரையும் விட மேம்பட்டு விளங்க வேண்டும்
என்று நினைக்கிறீர்களா?
அப்படியானால் மற்ற எல்லாரையும் விட
உங்களுக்கு நிதானமும் தன்னடக்கமும் அதிகம் தேவை.
அவை இரண்டும் பொறுமையிலிருந்தே பிறக்கின்றன.

சோதனைகளோ? கஷ்டங்களோ? பின்னடைவுகளோ?
தோல்விகளோ? ஏமாற்றங்களோ? தளர்ச்சிகளோ?
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும்
எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
அவற்றை எதிர்கொள்வதற்கும்
வெற்றிக் கொள்வதற்குமான மார்க்கம்தான் பொறுமை.
எல்லா எதிர்மறை உணர்விலிருந்தும் மீள
மனதில் எப்போதும் அமைதியான பொறுமையை வைத்திருங்கள்.

இப்போது
பொறுமை என்றால் என்னவென்று தெரிகிறதா?
பொறுமையாக இருப்பதென்றால் என்னவென்று புரிகிறதா?
பொறுமை என்பது கலங்காதிருக்கும் தன்மை.
எந்தச் சூழலிலும் விழிப்புணர்வுடன் அமைதியாக இருக்கும் தன்மை.
பொறுமையோடு கலங்காது இருக்கும் போது
விழிப்புணர்வு உண்டாகிறது.
விழிப்புணர்வு தரும் அமைதி
உள்ளுக்குள் மகத்தான சக்தியை உண்டுபண்ணுகிறது.
இப்படித்தான் பொறுமை வாழ்வின்
பொன்னான மருந்தாகிறது.
*****

No comments:

Post a Comment