மனதோடு வீசும் மென்காற்று :
நம்பிக்கை உடையவர்கள் அடைகிறார்கள்!
இழப்பதற்கு எதுவுமில்லை
நம்பிக்கை உடையவர்கள் அடைவதற்கு
இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது.
நம்பிக்கையின் ஈர்ப்புக்
சக்தி
வெற்றியைக் கவர்ந்து இழுக்கிறது.
நீங்கள் எத்தகைய பிரமாண்ட
இலக்கை
அடைய நினைத்திருந்தாலும்
நம்பிக்கை அதை அடையச் செய்கிறது.
நம்பிக்கை என்றால் என்னவென்று
தெரியுமா?
அனுபவத்திலிருந்த ஆறுதலையும்
வலிமையையும்
தருவதே நம்பிக்கை.
நம்பிக்கையை ஒருவர் இன்னொவருக்குத்
தர முடியுமா என்றால்
அனுபவம் உள்ளவர்களும்
எந்தத் தொல்வியையும் ஏற்றுக்
கொள்ளாமல் போராடுபவர்களும்
நம்பிக்கையை இந்த உலகுக்குத்
தர முடியும்.
கவலைக்கான தன்னிகரற்ற மருந்து
நம்பிக்கை.
நம்பிக்கையை வழங்குபவர்கள்
மனித சமூகத்தன் மாபெரும்
மருத்துவர்கள்.
ஏன் கவலை வருகிறது?
ஏன் அச்சம் வருகிறது?
என் இயலாமை தோன்றுகிறது
தெரியுமா?
நாளை குறித்த எதிர்மறை எண்ணங்கள்தான்
அதற்குக் காரணம்.
நாளை என்பதை நாளை பார்த்துக்
கொள்ளலாம்.
இன்று என்பதை இன்று பாருங்கள்.
நாளை என்பதை நாளை தனக்குத்
தானே பார்த்துக் கொள்ளும்.
வலிமையும் வீரமும் உலகை
எதிர்கொள்ள எப்போதும் தேவைப்படும்
இணைபிரியாத தோழர்கள்.
உடல் வலிமை, வீரம் என்பதை
விட மேலானது நம்பிக்கை.
நம்பிக்கை இருக்கும் போதுதான்
வீரத்துக்கும் வலிமைக்கும்
அர்த்தம் கிடைக்கிறது.
நம்பிக்கை இல்லாத வலிமையும்
வீரமும்
கோழையின் கையில் கிடைத்த
வாள் போன்றது.
மீண்டும் வர முடியும் என்ற
நம்பிக்கை இருந்தால்
விபத்துகள்
மனிதரைக் காயப்படுத்துவோ
மனிதரின் உயிரைப் பறிப்பதோ
இயலாது.
நம்பிக்கைதான் மனதின் உடலின்
பாதுகாப்புக் கவசம்.
நம்ப முடியாத விபத்திலிருந்து
நம்பிக்கையின் சக்தியே நம்மை
காப்பாற்றுகிறது.
விமானத்தில் வெடித்துச் சிதறினாலும்
நம்பிக்கையோடு இருப்பவர்
பாராசூட்டைப் பற்றிக் கொள்கிறார்.
நம்பிக்கை கீழே விழும் போது
தூக்கி விடுகிறது
கடலில் விழும் போது துடுப்பாகிறது
வானிலிருந்து விழும் போது
சிறகாகிறது.
காற்றின் வலிமையும்
பூமியின் பொறுமையும்
சூரியனின் சக்தியும்
நம்பிக்கையோடு தொடர்புடையது.
எந்த இரவும் விடியும் என்பதுதான்
நம்பிக்கை.
எந்த நதியும் கடலைச் சேரும்
என்பதுதான் நம்பிக்கை.
எந்த மனிதராலும் எதுவும்
முடியும் என்பதுதான் நம்பிக்கை.
நம்பிக்கை உடல், மன, ஆன்மிக
ஒருமைப்பாட்டை அடைந்து
அதன் மூலம் மகத்தான சக்தியை
அடைகிறோம்.
மனிதச் சக்தியின் மந்திரகோலோ
நம்பிக்கை
நம்பிக்கை உடையவர்கள் தடைகளை
கடக்கிறார்கள்
நினைத்ததை அடைகிறார்கள்.
*****
No comments:
Post a Comment