இரட்டைச்சொற்கள்
குண்டக்க மண்டக்க
:
குண்டக்க = இடுப்புப்பகுதி
மண்டக்க = தலைப்
பகுதி
சிறுவர்கள்
கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள்
எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.
|
அந்தி சந்தி
:
அந்தி = மாலை
நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி = இரவு
நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
|
அக்குவேர் ஆணிவேர்
:
அக்குவேர்
= செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
ஆணி வேர் =
செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.
|
அரை குறை :
அரை = ஒரு பொருளின்
சரி பாதி அளவில் உள்ளது.
குறை = அந்த
சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
|
அக்கம் பக்கம்
:
அக்கம் = தன்
வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம் = பக்தத்தில்
உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
|
கார சாரம் :
காரம் = உறைப்பு
சுவையுள்ளது.
சாரம் = காரம்
சார்ந்த சுவையுள்ளது.
|
இசகு பிசகு :
இசகு = தம்
இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்.
பிசகு = தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
|
இடக்கு முடக்கு
:
இடக்கு = கேளியாக
நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
முடக்கு = கடுமையாக
எதிர்த்து .தடுத்து பேசுதல்.
|
ஆட்டம் பாட்டம்
:
ஆட்டம் = தாளத்திற்கு
தகுந்தவாறு ஆடுவது.
பாட்டம் = ஆட்டத்திற்கு
பொருத்தமில்லாமல் பாடுவது.
|
அலுப்பு சலிப்பு
:
அலுப்பு = உடலில்
உண்டாகும் வலி.
சலிப்பு = உள்ளத்தில்
ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
|
தோட்டம் துரவு
, தோப்பு துரவு :
தோட்டம் = செடி,
கொடி கீரை பயிரிடப்படும் இடம்.
தோப்பு = கூட்டமாக
இருக்கும் மரங்கள் இடம்.
துரவு = கிணறு.
|
காடு கரை :
காடு = மேட்டு
நிலம் (முல்லை)
கரை = வயல்
நிலம் (மருதம், நன் செய் , புன்செய்)
|
காவும் கழனியும்
:
கா = சோலை.
கழனி = வயல்
(மருதம்)
|
நத்தம் புறம்போக்கு
:
நத்தம் = ஊருக்குப்
பொதுவான மந்தை.
புறம்போக்கு
= ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.
|
பழக்கம் வழக்கம்
:
பழக்கம் = ஒருவர்
ஒரே செயலை பல காலமாக செய்வது.
வழக்கம் = பலர்
ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடிப்பது.
|
சத்திரம் சாவடி
:
சத்திரம் =
இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )
சாவடி = இலவசமாக
தங்கும் இடம்.
|
நொண்டி நொடம்
:
நொண்டி = காலில்
அடிபட்டோ, குறையாகவோ இருப்பவர்.
நொடம் = கை,
கால் செயலற்று இருப்பவர்.
|
பற்று பாசம்
:
பற்று = நெருக்கமாக
உறவு கொண்டுள்ளவர்கள்.
பாசம் : பிரிவில்லாமல்
மரணம் வரை சேர்ந்து இருப்பது.
|
ஏட்டிக்கு போட்டி
:
ஏட்டி = விரும்பும்
பொருள் அல்லது செய்வது.( ஏடம் : விருப்பம்)
போட்டி = விரும்பும்
பொருள், செயலுக்கு எதிராக அமைவது.
|
கிண்டலும் கேலியும்
:
கிண்டல் = ஒருவன்
மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
கேலி = எள்ளி
நகைப்பது.
|
ஒட்டு உறவு
:
ஒட்டு = இரத்த
சம்பந்தம் உடையவர்கள்.
உறவு = கொடுக்கல்
சம்மந்தமான வகையில் நெருக்மமானவர்கள்.
|
பட்டி தொட்டி
:
பட்டி = கால்நடைகள்
(ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)
தொட்டி = மாடுகள்
அதிமாக வளர்க்கும் இடம்.
|
கடை கண்ணி :
கடை = தனித்
தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி = தொடர்ச்சியாக
அமைந்த கடைகள் , கடை வீதிகள்.
|
பேரும் புகழம்
:
பேர் = வாழ்ந்து
கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.
புகழ் = வாழ்விற்கு
பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.
|
நேரம் காலம்
:
நேரம் = ஒரு
செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது.
காலம் = ஒரு
செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.
|
பழி பாவம் :
பழி = நமக்கு
தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலை செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.
பாவம் = தீயவை
செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.
|
கூச்சல் குழப்பம்
:
கூச்சல் = துன்பத்தில்
சிக்கி வாடுவோர் போடும் சத்தம் (கூ - கூவுதல்)
குழப்பம் =
துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு வந்தவர்கள் போடும் சத்தம்.
|
நகை நட்டு :
நகை = பெரிய
அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியானம்)
நகை = சிறிய
அணிகலன்கள்
|
பிள்ளை குட்டி
:
பிள்ளை = பெதுவாக
ஆண் குழந்தையை குறிக்கும்.
குட்டி = பெண்
குழந்தையை குறிக்கும்.
|
பங்கு பாகம்
:
பங்கு = கையிருப்பு,
பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)
பாகம் = வீடு,
நிலம்.. அசையா சொத்து.
|
வாட்டம் சாட்டம்
:
வாட்டம் = வளமான
தோற்றம், வாளிப்பான உடல்.
சாட்டம் = வளமுள்ள
கனம், தோற்றப் பொலிவு.
|
காய் கறி :
காய் = காய்களின்
வகைகள்
கறி = சைவ உணவில்
பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்
|
ஈவு இரக்கம்
:
ஈவு = ஈதல்,
கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்.
இரக்கம் = பிற
உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்.
|
பொய்யும் புரட்டும்
:
பொய் = உண்மையில்லாததை
கூறுவது.
புரட்டு = ஒன்றை
நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை யென கூறி நடிப்பது.
|
சூடு சொரனை :
சூடு = ஒருவர்
தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனகொதிப்பு.
சொரனை = நமக்கு
ஏற்படும் மான உணர்வு.
|
No comments:
Post a Comment