மனதோடு வீசும் மென்காற்று :
மாற்றும் சக்தி!
மாற்றம் என்பது மாறாத சக்தி!
மாறும் உலகில் மனிதன் மாறாமல்
இருக்க இயலாது.
சூழ்நிலைக்கேற்ப ஆக்கப்பூர்வமாகத்
தன்னை மாற்றிக் கொள்ளும்
மனிதனே
தன்னிகரற்று விளங்குகிறான்.
வருவதை நினைத்து
கற்பனையாகக் கவலைப்பட்டே
மனிதன் தனது சக்தியை வீணடிக்கிறான்.
கவலை இன்றைய வலிமையை
அழிக்கக் கூடியது.
கவலை உங்களது சக்தியை, வலிமையை
அழிக்காமல் இருப்பதற்கான
தாரக மந்திரம் இதுதான்
'இருப்பதைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்.
பிறகு வருவதை எதிர்கொள்ளுங்கள்'
ஒன்றை இலகுவாக ஏற்றுக் கொள்ளும்
போது
மனதளவிலும் இலகுவாக மாறுகிறோம்.
அதே ஒன்றை கடினமாக ஏற்றுக்
கொள்ளும் போது
மனதளவிலும் கடினமாக மாறிப்
போகிறோம்.
எப்படி நினைக்கிறோமோ
அப்படி மாறிப் போகிறோம்.
எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ
அப்படி ஆகிப் போகிறோம்.
நினைப்பும், ஏற்றுக் கொள்ளும்
தன்மையும்
நம்மை மாற்றும் சக்திகள்.
ஆகவே,
சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால்
ஒருபோதும் சுமை தெரிவதில்லை.
சுமையாக ஏற்றுக் கொண்டால்
பஞ்சுப் பொதியும் இரும்பாகக்
கனக்கிறது.
நேர்மறையாக மாறுவது என்பது
சக்தியளிக்கக் கூடியது.
எதிர்மறையாக மாறுவது என்பது
சக்தியை அழிக்கக் கூடியது.
நம்பிக்கை தேயும் போது,
இன்பம் வற்றும் போது,
கனவுகள் கலையும் போது
பொறுமையோடு இருங்கள்!
பொறுமை எல்லாவற்றையும்
மாற்றும் வல்லமை கொண்டது.
பொறுமை எனும் மாபெரும் சக்தி
எதிர்மறையை நேர்மறையாக
மாற்றக் கூடியது.
பொறுமை எனும் மாற்றும் சக்தி
நம் சக்தியைக் கூட்டக் கூடியது.
பொறுமையைப் போலவே
மற்றொரு மாற்றும் சக்திதான்
துணிவு.
எப்போது பொறுமையெனும்
மாற்றும் சக்தியோடு இருப்பது?
எப்போது துணிவு எனும்
மாற்றும் சக்தியோடு இருப்பது?
மாற்ற முடியாதவற்றில் பொறுமையாக
இருங்கள்!
மாற்ற முடிபவைகளைத் துணிவோடு
மாற்றுங்கள்!
இந்த இரண்டுக்கும் இடையிலான
வேறுபாட்டை
நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் இவ்விரு மாற்றும்
சக்திகளையும்
நன்கு பயன்படுத்துங்கள்.
ஆக்கப்பூர்வமாக நம்மை மாற்றி
வழிநடத்தும் மற்றொரு மாற்றும்
சக்தி
மனோதிடம் என்பது!
மனோதிடம் எனும் மாற்றும்
சக்தி
எத்தகையச் சோதனையையும் மாற்றும்.
வாழ்க்கை முக்கியமல்ல,
அதில் நீங்கள் காட்டும் மனோதிடமே
முக்கியம்.
துக்கத்தையும் வலியையும்
தவிர்ப்பதில் வெற்றி பெறுபவர்கள்
மனிதர்களே அல்லர்.
நீங்கள் மனிதர்கள் என்றால்
எதையும் மனோதிடத்தோடு எதிர்கொள்ளுங்கள்!
ஆம்!
மனோதிடம்
பொறுமை
நம்பிக்கை
துணிவு ஆகிய மாற்றும் சக்திகளை
எங்கேயும் எப்போதும் கைக்கொள்ளுங்கள்!
*****
No comments:
Post a Comment