30 ஆண்டுகள் கழித்து 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்
தெரியுமா?!
சதவீதம் மற்றம் கூட்டுவட்டியின்
பயன்பாட்டை நேற்று 100 ரூபாயை வைத்து தெரிந்து கொண்டோம். 100 ரூபாய் பணத்தாளின் மதிப்பானது
பணவீக்கத்தால் எப்படி குறைந்து கொண்டே போகிறது என்பதையும், அந்தப் பணவீக்கத்தால் 100
ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு எப்படி அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதையும்
பார்த்தோம்.
இன்று நேற்றின் தொடர்ச்சியாக
இன்னும் சில விவரங்களை அறிந்து கொள்வோம். மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் 30 ஆண்டுகள்
கழித்து எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் தெரியுமா?
10,000 ரூபாயை அப்படியே பணத்தாளாக
வீட்டில் ஒருவர் வைத்திருந்தால் 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு குறைந்திருக்கும் தெரியுமா?
இவற்றுக்கான விடை காண நாம்
கீழே உள்ள அட்டவணையைக் காண்போம். இந்த அட்டவணையில் நாம் பணவீக்கத்தை 5% ஆக வைத்துக்
கொள்வோம்.
ஆண்டுகள் |
10,000
ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல் |
10,000
ரூபாய்க்குச் சமமான மதிப்பு அதிகரித்தல் |
துவக்கம் |
10000 |
10000 |
5 |
7738 |
12763 |
10 |
5988 |
16289 |
15 |
4633 |
20789 |
20 |
3585 |
26533 |
25 |
2774 |
33864 |
30 |
2146 |
43220 |
அட்டவணையிலிருந்து
10,000 ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து 2,146 ஆக மதிப்பு குறைந்து விடும். தற்போது
10,000 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து 43,220 ரூபாய் சம்பாதிக்க
வேண்டும். மேலும் அட்டவணையிலிருந்து நீங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பணத்தாளின் மதிப்பு
பணவீக்கத்தால் எப்படி குறைகிறது என்பதையும் அதே மதிப்பில் செய்ய வேண்டிய சம்பாத்தியம்
எப்படி அதிகரிக்கிறது என்பதையுக் காணலாம். இதெல்லாம் 5% பணவீக்கத்திற்கான கணக்கீடு.
பணவீக்கம் 7% ஆக இருந்தால்
நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.
ஆண்டுகள் |
10,000
ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல் |
10,000
ரூபாய்க்குச் சமமான மதிப்பு அதிகரித்தல் |
துவக்கம் |
10000 |
10000 |
5 |
6957 |
14026 |
10 |
4840 |
19672 |
15 |
3367 |
27591 |
20 |
2342 |
38698 |
25 |
1629 |
54276 |
30 |
1133 |
76125 |
இந்த அட்டவணைப்படி பார்க்கும்
போது 10,000 ரூபாய் மதிப்பானது 30 ஆண்டுகள் கழித்து 1133 ஆகக் குறைந்து விடுகிறது.
தற்போது மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் 30 ஆண்டுகள் கழித்து 76,125 ரூபாய் சம்பாதிக்க
வேண்டியிருக்கிறது. இக்கணக்கீடு பணவீக்கம் 7% என்பதற்கான கணக்கீடு என்பதை உங்களுக்கு
ஞாபகப்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதுவே பணவீக்கம் 8 சதவீதம், 9 சதவீதம்,
10 சதவீதம் என்றால் 30 ஆண்டுகள் கழித்து அதன் பணமதிப்பு எவ்வளவு குறைந்திருக்கும்,
தற்போதும் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் அப்போது எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்
என்பதை நீங்களே கணக்கீட்டுப் பாருங்களேன். இப்போது உங்களுக்கு சதவீதத்தின் பயன்பாடு
எவ்வளவு முக்கியமான என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அத்துடன் பணவீக்கத்தின்
தாக்கமும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பணவீக்கத்திற்கு ஏற்ப நமது
சேமிப்பும் முதலீடும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அதாவது பணவீக்கம் 5 சதவீதம் என்றால்
நமது சேமிப்பும் முதலீடும் சொத்து மதிப்பும் 6 சதவீத அளவாவது உயர்ந்து கொண்டு போக வேண்டும்தானே.
சதவீதம் என்ற கணிதக் கருத்தாக்கம்
இப்படியாக நமது பொருளாதாரம் பற்றியும் அறிந்து கொள்ளவும் திட்டமிட்டுக் கொள்ளவும் உதவுகிறது
அல்லவா!
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment