ஒரு முறை கிடைக்கும் ஒரு கோடி பெரிதா? 
ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாகும் தொகை பெரிதா?
உங்களிடம் இன்றே ஒரு கோடியை
வாங்கிக் கொள்கிறீர்களா, அல்லது இன்று ஒரு ரூபாயில் தொடங்கி ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாகும்
தொகையை முப்பத்தொரு நாட்கள் கழித்து வாங்கிக் கொள்கிறீர்களா என்றால் நீங்கள் எதைத்
தேர்ந்தெடுப்பீர்கள்?
நாளைக்குக் கிடைக்கும் பலாப்பழத்தை
விட இன்றைக்குக் கிடைக்கும் களாக்காயே மேலானது என்று இன்றே கிடைக்கும் ஒரு கோடியைத்தானே
தெர்ந்தெடுப்பீர்கள்.
நீங்கள் கணக்கில் புலி என்றால்
இன்றைக்கு ஒரு ரூபாயில் தொடங்கி ஒவ்வொரு நாளும் முப்பத்தொரு நாள் வரை இரட்டிப்பாகும்
தொகையைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். 
ஏன் என்கிறீர்களா? 
அப்படி இரட்டித்துக் கொண்டே
போகும் தொகை முப்பத்தொரு நாளில் நூறு கோடியைத் தாண்டி இருக்கும்.
அட அப்படியா!
அது எப்படி என்கிறீர்களா?
கீழே உள்ள அட்டவணையில் அந்த
மாயா ஜாலத்தை நீங்களே பாருங்களேன். 
| 
   நாள்  | 
  
   இரட்டிப்பாகும்
  தொகை   | 
 
| 
   1  | 
  
   1  | 
 
| 
   2  | 
  
   2  | 
 
| 
   3  | 
  
   4  | 
 
| 
   4  | 
  
   8  | 
 
| 
   5  | 
  
   16  | 
 
| 
   6  | 
  
   32  | 
 
| 
   7  | 
  
   64  | 
 
| 
   8  | 
  
   128  | 
 
| 
   9  | 
  
   256  | 
 
| 
   10  | 
  
   512  | 
 
| 
   11  | 
  
   1024  | 
 
| 
   12  | 
  
   2048  | 
 
| 
   13  | 
  
   4096  | 
 
| 
   14  | 
  
   8192  | 
 
| 
   15  | 
  
   16384  | 
 
| 
   16  | 
  
   32768  | 
 
| 
   17  | 
  
   65536  | 
 
| 
   18  | 
  
   131072  | 
 
| 
   19  | 
  
   262144  | 
 
| 
   20  | 
  
   524288  | 
 
| 
   21  | 
  
   1048576  | 
 
| 
   22  | 
  
   2097152  | 
 
| 
   23  | 
  
   4194304  | 
 
| 
   24  | 
  
   8388608  | 
 
| 
   25  | 
  
   16777216  | 
 
| 
   26  | 
  
   33554432  | 
 
| 
   27  | 
  
   67108864  | 
 
| 
   28  | 
  
   134217728  | 
 
| 
   29  | 
  
   268435456  | 
 
| 
   30  | 
  
   536870912  | 
 
| 
   31  | 
  
   1073741824  | 
 
மாயா ஜாலம் என்று
கூட சொல்லக் கூடாது. சரியான கணக்கீடுதானே இது. ஆனால் நாம் இவ்வளவு பெருகும் என்று யோசித்திருக்க
மாட்டோம். 
வட்டி வீதம் அதிகரிப்பிலும்
இதே போன்ற மாயா ஜாலம்தான் அதாவது பெருக்கம்தான் ஏற்படுகிறது. 
நாம் வட்டி வீதப் பெருக்கத்தைக்
கடன் வாங்கி எதிர்மறையாக ஆக்கிக் கொள்ளலாமல் ஆக்கப் பூர்வமாகச் சேமித்தும் முதலீடு
செய்தும் நேர்மறையாக ஆக்கிக் கொள்ளலாம். சேமிப்பையும் முதலீட்டையும் வலியுறுத்துவதற்காகவே
இந்தக் கேள்வி பொதுவாகக் கேட்கப்படுகிறது. 
இப்போது இந்தக் கேள்வியை
நீங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்களேன். ஒவ்வொருவரும்
என்ன பதில் சொல்கிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள். உங்களுக்கே வேடிக்கையாக இருக்கும்.
இந்தத் தகவல் உங்களுக்குப்
பயனுள்ளதாக இருந்திருக்கும் நம்புகிறேன். இதே போன்ற பயனுள்ள தகவல்களோடு உங்களை இந்த
வலைப்பூவில் தினம் தினம் சந்திப்போமா?
நன்றி!
வணக்கம்!
*****

No comments:
Post a Comment