Monday 22 May 2023

கோடையில் செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

கோடையில் செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

இந்தக் கோடையில் செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? இது குறித்து ஒரு பட்டியல் இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று பட்டது. இந்தப் பட்டியல் எதற்காக என்றால் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், தவிர்க்க வேண்டியதைத் தவிர்க்காமல் இருந்து விடக் கூடாது என்பதற்காகவும்தான்.

பெரும்பாலானோருக்கு இந்தச் செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும் தெரிந்தும் இருக்கலாம். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ, பிள்ளைகளுக்கோ இது குறித்துத் தொகுப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போது இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவலாம். இந்தப் பட்டியல் உணவு, உடை, உறைவிடம், உடலோம்பல், பயணித்தல் சார்ந்த ஒருங்கிணைந்த பட்டியல். ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டியல் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம்.

வ.எண்

கோடையில்

செய்ய வேண்டியது

கோடையில்

தவிர்க்க வேண்டியது

1.

நீர் நிறைய பருகுவது.

குளிர்பதன நீர் (ஐஸ் வாட்டர் / பிரிட்ஜ் வாட்டர்) பருகுவது

2.

நீராகாரம், மட்பாண்ட குளிர் நீர், இளநீர் பருகுவது.

இரசாயன குளிர்பானங்களைப் பருகுவது.

3.

நுங்கு, தர்பூசணி மற்றும் பழ வகைகள் உண்பது.

பனிக்கூழ் (ஐஸ் கிரீம்) உண்பது.

4.

கஞ்சி உணவு, சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக் கொள்வது.

மசாலா உணவுகளை அதிகம் செய்து கொள்வது.

5.

எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்பது.

காரம் மிகுந்த அசைவ உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த மற்றும் உடனடி (பாஸ்ட் புட்)) உணவுகளை உண்பது.

6.

தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது.

இறுக்கமான செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவது.

7.

கூரை மற்றும் பனையோலை வேய்ந்த இருப்பிடங்களை அமைத்துக் கொள்வது.

குளிர்சாதன வசதியை (ஏ.சி.) ஏற்படுத்திக் கொள்வது.

8.

அறைகளுக்குள் வெட்டி வேரை நீரில் நனைத்துத் தொங்க விடுவது.

காற்று குளிர்விப்பான்களை (ஏர் கூலர்) பயன்படுத்துவது.

9.

தினந்தோறும் இருமுறைக் குளிப்பது.

இராசயன பூச்சுகள், கூழ்மங்களைப் (பவுடர் மற்றும் கிரீம்கள்) பூசிக் கொள்வது.

10.

வெளியிடங்களுக்குச் செல்லும் போது தண்ணீர் மற்றும் உணவுகளை வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்துச் செல்வது.

ஆங்காங்கே கிடைக்கும் புட்டி நீரையும் எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களையும் வாங்கிக் கொள்வது.

இந்த பத்து குறிப்புகளும் உணவு, உடை, உறைவிடம், உடலோம்பல், இடம்பெயர்தல் சார்ந்து கோடைக்காலத்தில் நாம் செய்து கொள்ள வேண்டிய மற்றும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய மாற்றங்கள் எனலாம்.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment