பெண்களுக்கான ‘மகளிர் சம்மான்’ சிறப்பு சேமிப்புத் திட்டம்
மத்திய அரசு பெண்களுக்காகவே
‘மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்’ எனும் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வாய்ப்பளித்துள்ளது.
இந்நிதியாண்டின் மத்திய அரசின்
வரவு – செலவு திட்டமானது (பட்ஜெட்) இப்படி ஓர் அருமையான வாய்ப்பினைப் பெண்களுக்கு வழங்குகிறது.
இத்திட்டத்தின்படி அனைத்து
வயதில் உள்ள பெண்களும் இக்கணக்கைத் தொடங்கிச் சேமிக்கலாம். சேமிப்புக் காலம் இரண்டு
ஆண்டுகள் ஆகும். இதற்கான வட்டி வீதம் 7.5 சதவீதம் ஆகும்.
பெண்களுக்கான இச்சிறப்பு
சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் வரை சேமிக்கலாம்.
முதலீடு என்பது ஒரே முறை மட்டும் செய்யப்படும் முதலீடு ஆகும். அம்முதலீட்டுக்கு ஒவ்வொரு
காலாண்டிலும் வட்டித்தொகையானது வரவு வைக்கப்பட்டு விடும்.
அனைத்து அஞ்சலகங்களிலும்
பெண்கள் இச்சிறப்பு சேமிப்புக் கணக்கைத் தொடங்கிச் சேமிக்க முடியும். அஞ்சலகங்களில்
இச்சிறப்பு சேமிப்புத் திட்டத்திற்கான பதாகைகளையும் நீங்கள் பார்க்க முடியும். மற்றும்
வங்கிகளிலும் இச்சேமிப்புக் கணக்கைச் செய்ய முடியும்.
இவ்வாண்டு ஏப்ரலிருந்து
2025 மார்ச் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். அதற்குள் இத்திட்டத்தில் பெண்கள்
தங்களின் முதலீட்டைச் செய்து சேமிப்புச் சான்றிதழைப் பெற்றுப் பயனடையலாம்.
இத்திட்டம் பெண்களுக்கே உரிய
திட்டம் என்பதால் ஆண்கள் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியாது.
இச்சேமிப்புத் திட்டத்தில்
முதலிட்டு ஆறு மாதத்திற்குப் பிறகு கணக்கை முடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அப்படி
முடித்தால் வட்டித்தொகையானது 5.5 சதவீதம் மட்டும் கிடைக்கும். 7.5 சதவீத வட்டி கிடைக்காது.
ஓராண்டு முடிந்த நிலையில் நாற்பது சதவீத தொகையை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
திட்டத்தின் முழுமையான பயனைப் பெற இரண்டு ஆண்டுகள் முதலிட்டு வைப்பதே சிறந்ததாகும்.
இத்திட்டமானது மத்திய அரசின்
திட்டம் என்பதால் இத்திட்டத்திற்கான முதலீட்டுப் பாதுகாப்பும் உத்தரவாதமும் நூற்றுக்கு
இருநூறு சதவீதம் உள்ளது.
பெண்கள் இச்சிறுசேமிப்புத்
திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாமே!
இத்திட்டம் குறித்த மேலதிக
விவரங்கள் அடங்கிய கையேட்டைப் (பி.டி.எப்.) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment