நூறாண்டுகள் வாழும் மனிதர்களின் ரகசியங்கள்!
உலகில் நூறாண்டுகளுக்கு மேலே
வாழ்பவர்களின் பிரதேசங்கள் தனியே இருக்கின்றன. மற்ற பிரதேசங்களில் நூறாண்டுகளைக் கடந்து
வாழ்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக லட்சத்தில் அல்லது கோடியில் ஒருவரோ, இருவரோ இருக்கலாம்.
நூறாண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களின் பிரதேசங்களில் லட்சத்தில் அல்லது கோடியில்
ஒருவர்தான் நூறாண்டுகளுக்குக் குறைவாக வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் பிரதேசங்களில் நீங்கள்
போய் வாழ்ந்தால் உங்களுக்கும் நூறாண்டுகளைக் கடந்து வாழ வாய்ப்பு கிடைக்கலாம். முதலில்
அந்தப் பிரதேசங்களைத் தெரிந்து கொள்வோம். மொத்தம் அப்படி ஐந்து பிரதேசங்கள் இந்தப்
பூகோள வெளியில் இருக்கின்றன.
1)
சார்டினியா – இது இத்தாலியில் இருக்கிறது.
2)
ஒக்கினாவோ – இது ஜப்பானில் இருக்கிறது.
3)
நிக்கோயா – இது கோஸ்டாரிகாவில் இருக்கிறது.
4)
இக்காரியா – இது கிரீஸில் இருக்கிறது.
5)
லோமாலிண்டா – இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கிறது.
இந்தப் பகுதிகளை நீல மண்டலம்
அதாவது ப்ளூ ஸோன் (Blue Zone) என்கிறார்கள். இவர்கள் நூறாண்டுகள் வாழ்வதற்கு இவர்களது
மரபுநிலைதான் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது ஜீன்தான் காரணம். அத்துடன் இவர்களது
உணவு முறையும் கணிசமான காரணம் என்கிறார்கள். அங்கு போக முடியாதவர்கள் அதே நேரத்தில்
நூறாண்டு வாழ நினைப்பவர்கள் அந்த ஜீனைப் பெய முடியாவிட்டாலும் அந்த உணவுமுறையையாவது
கடைபிடிக்கலாம் அல்லவா!
அவர்களின் உணவு முறையை நீல
மண்டலத்து உணவுமுறை (Blue Zone Diet) என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்களின் உணவு முறையைப்
பார்த்து விடுவோமா?
1)
பலவகைத் தானியங்கள்
2)
பழங்கள்
3)
காய்கறிகள்
4)
பருப்பு வகைகள்
5)
வாரத்தில் இரண்டு நாள்கள் அசைவம்
6)
மிதமான அளவு மது
7)
துரித உணவோ, நொறுக்குத் தீனியோ, இனிப்பு வகைகளோ இல்லாத உணவுமுறை
இது ஒன்றும் அப்படி பிரமாதான
உணவு முறையாகத் தெரியவில்லை என்கிறீர்களா? ஏழாவது விசயம் மட்டும் சாத்தியமா என்று பார்த்து
விட்டுச் சொல்லுங்கள். அத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதும் மற்றும் ஒரு
காரணமாக இருக்கிறது. இதுதான் கொஞ்சம் கஷ்டம் என்கிறீர்களா? அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு
நூறாண்டுகள் வாழ்வதற்கு அதற்குக் குறைவாக வாழ்வது கூட மகிழ்ச்சிதான் என்கிறீர்களா?
அப்படியானால் நீங்கள் நூறாண்டுகள் வாழத் தகுதியானவர்தான். கஷ்டம் என்று எதற்கும் கவலைப்படக்
கூடாது. எல்லாவற்றிக்கும் சந்தோஷப்பட வேண்டும். அதுதான் உங்களது ஆரோக்கியமான மரபு நிலையைத்
தீர்மானிக்கிறது.
நூறாண்டுகள் வாழ நினைப்பவர்களுக்கு
இந்தத் தகவல்கள் கொஞ்சமேனும் பயன்படும் என்று நினைக்கிறேன். அதில் கொஞ்சம் பத்தோ இருபதோ
குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களுக்கும் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.
ஆக மொத்தத்தில்,
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment