Sunday, 7 May 2023

ஈசானிய மூலை, அக்னி மூலை பற்றி அறிந்து கொள்வோமா?

ஈசானிய மூலை, அக்னி மூலை பற்றி அறிந்து கொள்வோமா?

வாஸ்து முறைப்படி வீடு கட்டுபவர்கள் ஈசானிய மூலை, கன்னி மூலை, வாயுமூலை, அக்னிமூலை என்றெல்லாம் சொல்வார்கள். அம்மூலைகள் எவற்றைக் குறிக்கும் என்பதை அறிந்து கொள்வோமா? கீழே உள்ள அட்டவணை மற்றும் படம் இரண்டுமே உங்களுக்கு மூலைகளை எளிமையாக அறிய உதவும்.

வடமேற்கு மூலை

வாயு மூலை

வட கிழக்கு மூலை

ஈசான்ய மூலை

(சனி மூலை)

(ஜல மூலை)

தென்மேற்கு மூலை

நிருதி மூலை

(கன்னி மூலை)

தென் கிழக்கு மூலை

அக்னி மூலை

மனையின்,

வடமேற்கு மூலை வாயுமூலை எனப்படுகிறது. இங்குதான் கழிவறை, குளியலறை அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

வடகிழக்கு மூலை ஜலமூலை எனப்படுகிறது. இது ஈசான்ய மூலை எனவும் சனி மூலை எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு பூஜை அறை, படிக்கும் அறை அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

தென்மேற்கு மூலை நிருதி மூலை எனப்படுகிறது. இது கன்னிமூலை எனவும் சொல்லப்படும். இங்குதான் படுக்கை அறை அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

தென்கிழக்கு மூலை அக்னி மூலை எனப்படுகிறது. இங்குதான் சமையலறை அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

வாஸ்து குறித்து புழக்கத்தில் உள்ள சொற்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இப்பத்தி இங்கே பதிவிடப்படுகிறது. மற்றபடி வாஸ்துவைப் பரப்பும் நோக்கம் இப்பத்திக்கோ, இவ்வலைப்பூவுக்கோ இல்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

*****

No comments:

Post a Comment