Tuesday, 6 May 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.05.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.05.2025)

1) பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

2) 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது..

3) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.

4) நாடு முழுவதும் இன்று 300 மாவட்டங்களில் அவசர காலத்துக்கான போர்க்காலப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

5) இராணுவத்திற்கு நன்கொடைகள் வழங்குமாறு புலனத்தில் (வாட்ஸ்ஆப்) வரும் செய்திகள் போலியானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

6) பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் போர்க்கால நடவடிக்கையைத் தொடங்கியது.

7) ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் காரணம் என்ன?

பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற போர்க்கால நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.

திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர் என அழைக்கப்படும்.

பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில் கணவர் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர்.

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

8) ஜெர்மனியின் பிரதமராகப் பிரிட்ரிக் மேர்ஸ் தேர்வு செய்யப்பட்டள்ளார்.

Education & GK News

1) The results of the Class XII public examinations will be released tomorrow.

2) The School Education Department has announced that certificates of appreciation will be given to government schools and teachers who achieve 100% pass rate in the Class 10 and 12 public examinations.

3) The School Education Department has also started giving certificates of appreciation to government schools that increase student enrollment.

4) A wartime security drill for emergencies is being held in 300 districts across the country today.

5) The Central Government has said that the messages coming on WhatsApp to donate to the army are fake. The Central Government has also advised the public to be cautious about this.

6) India has launched a wartime operation called ‘Operation Sindoor’ against cross-border terrorism from Pakistan.

7) What is the reason for the name ‘Operation Sindoor’?

The Indian Army has launched a wartime operation called ‘Operation Sindoor’ to avenge the women who lost their husbands in the Pahalgam attack.

The saffron that married women apply to their foreheads is called ‘Sindoor’.

In the Pahalgam attack, many women lost their saffron when their husbands were shot in front of them.

The military operation was named ‘Operation Sindoor’ to refer to the saffron that women apply to their foreheads.

8) Friedrich Mair has been elected as the Prime Minister of Germany.

No comments:

Post a Comment