7.5% இட ஒதுக்கீடு பற்றி அறிய வேண்டிய விளக்கங்கள்!
அரசுப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளில்
7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது குறித்து அறிய வேண்டிய முக்கிய விளக்கங்களை
இங்கே காண்போம்.
விளக்கம் 1 :
7.5
இட ஒதுக்கீட்டில் பயன் பெற ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க
வேண்டும்.
விளக்கம் 2 :
தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆறு
முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) இட ஒதுக்கீட்டின்படி
படித்த குழந்தைகள் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க
வேண்டும். அவ்வாறு படித்தவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உண்டு.
விளக்கம் 3 :
அரசுப்
பள்ளியில் ஆங்கில வழியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த குழந்தைகளுக்கும்
7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உண்டு.
விளக்கம் 4 :
அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பொருந்தாது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த ஒரு வகுப்பில் சேர்ந்து
மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்தாலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடையாது. 7.5
இடஒதுக்கீடு சலுகையைப் பெற 6 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளிலும் அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
இவ்விளக்கங்கள்
உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
*****
அருமை.. பயனுள்ள தகவல்
ReplyDelete